Advertisment

Tamil News today updates: ரஜினியின் தர்பார் படத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ரசிகர்கள் கோரிக்கை; அனுமதி மறுப்பு

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து ரூ. 78.69க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் 11 காசுகள் அதிகரித்து ரூ. 72.69க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Darbar Full Movie Free download, Darbar Full movie free download Tamil rockers, ரஜினிகாந்த், தர்பார், தமிழ் ராக்கர்ஸ்

Darbar Full Movie Free download, Darbar Full movie free download Tamil rockers, ரஜினிகாந்த், தர்பார், தமிழ் ராக்கர்ஸ்

Tamil Nadu news today updates Darbar : தர்பார் படத்தின் கட்-அவுட்டுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ அனுமதி கேட்டு சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ரஜினி ரசிகர்கள் மனு கொடுத்துள்ளனர். இந்த மனு வருவாய் கோட்டாசியர் பார்வைக்கு வைக்கப்படவும், இது குறித்து ஆய்வு செய்து வர வட்டாட்சியருக்கு கோட்டாசியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisment

இசையமைப்பாளர் அனிருத் மீது நடவடிக்கை

9ம் தேதி வெளியாக உள்ள தர்பார் படத்திற்கு இசை அமைத்துள்ளார் இசை அமைப்பாளர் அனிருத். ஆனால் அதற்கு அவர் வெகு குறைவான அளவிலேயே தமிழ் சினிமா இசைச்சங்க உறுப்பினர்களை பயன்படுத்தியுள்ளார். இதனை இவர் தொடர்ந்து செய்து வருவதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக இச்சங்கத்தின் தலைவர் தீனா அறிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோ இங்கே! தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?

Live Blog

Tamil Nadu news today updates : Chennai weather, TN News, TN politics : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    20:46 (IST)07 Jan 2020

    டெல்லி ஜே.என்.யு மாணவர்கள் போராட்டத்தில் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்பு

    டெல்லியில் ஜே.என்.யு மாணவர்கள், பேராசிரியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, ஜே.என்.யு பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நடைபெற்று வரும் மாணவர்கள் பேராசிரியர்கள் போராட்டத்தில் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்றுள்ளார்.

    20:21 (IST)07 Jan 2020

    ரஜினியின் தர்பார் படத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ரசிகர்கள் கோரிக்கை; அனுமதி மறுப்பு

    சேலத்தில், நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் ரஜினியின் பேனருக்கு மலர் தூவ ரசிகர்களின் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்துள்ளது.

    19:30 (IST)07 Jan 2020

    கர்நாடகாவில் ஜே.என்.யு வன்முறைக்கு எதிராக மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

    டெல்லி ஜே.என்.யு.வில் நடைபெற்ற வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர்.

    18:52 (IST)07 Jan 2020

    தர்பார் ஸ்பெஷல்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்பார்' படம் நாளை மறுநாள் (ஜன.9) உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில், இன்று இப்படத்தின் ஸ்பெஷல் மோஷன் போஸ்டர் சர்பிரைஸாக வெளியிடப்பட்டது. ரஜினி ரசிகர்களுக்கு இது உண்மையில் சர்பிரைஸ் கிஃப்ட் தான்.

    16:56 (IST)07 Jan 2020

    நிர்பயா கொலைவழக்கு : 22ம் தேதி காலை 7 மணிக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

    நிர்பயா கொலைவழக்கின் சமந்தப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் மரண தண்டனையை நிறைவேற்ற  உத்தரவு பிறப்பிக்கிறது.  ஜனவரி 22 ம் தேதி காலை 7 மணிக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது. குற்றவாளிகள் ஏதேனும் 14 நாட்களுக்குள் இதற்கான சட்டத் தீர்வுகளை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

    16:28 (IST)07 Jan 2020

    டிக்கெட் கட்டணம் தொடர்பாக கருத்து வேறுபாடு - தர்பார் படம் மீண்டும் சர்ச்சை

    தர்பார் பட விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே டிக்கெட் கட்டணத்தை எவ்வாறு பங்கீடுவது தொடர்பாக கருத்து வேறுபாட்டு நிலவிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது . பாதிக்கும் மேற்பட்ட  தியேட்டர் உரிமையாளர்கள் இன்னும் தர்பார் படத்தை வாங்கவில்லை என்றும் கூறப்பட்கிறது.  

    16:23 (IST)07 Jan 2020

    காசெம் சுலேமானீயின் இறுதி ஊர்வலத்தில் 35 பேர் மரணம் :

    கடந்த வாரம் யுஅமெரிக்கா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட காசெம் சுலேமானீயின்  இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 35 பேர் கொல்லப்பட்டதாகவும், 48 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

    15:59 (IST)07 Jan 2020

    புதிய தொடக்கத்தை உருவாக்குவோம் - .ஜே.என்.யூ துணை வேந்தர் மாமிடலா ஜெகதேஷ் குமார்

    விவாதங்ககளின் மூலம் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பெயர் பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில், வன்முறை ஒரு தீர்வாகாது என்று ஜே.என்.யூ துணை வேந்தர் மாமிடலா ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.  ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது , பல்கலைக்கழகத்திற்கு இயல்புநிலை திரும்புவதை உறுதி செய்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் நாங்கள் உற்று நோக்குகிறோம் என்றார். குளிர்கால செமஸ்டருக்கான பதிவு செயல்முறை மீண்டும் தொடங்கப்படும் என்றார்.  கடந்த காலத்தை மறந்து ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்குவோம் என்றும் தெரிவித்தார்.

    15:46 (IST)07 Jan 2020

    பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி அமைதி பேரணி:

    ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னால் மாணவர்களான் பிரகாஷ் காரத் மற்றும் சீதாராம் யெச்சூரி பலகலைக்கழகத்தின் பழைய வளாகத்தில் இருந்து அதன் வடக்கு வாசல் வரை அமைதி பேரணியாக நடக்கின்றனர்.  

    15:02 (IST)07 Jan 2020

    மலேசியாவில் தர்பார் படத்துக்கு தடை

    மலேசியாவின் டிஎம்ஒய் கிரியேசன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில்,  தர்பார் படத்தை கடந்த 9ம் தேதி மலேசியாவில் வெளியிட தடைவித்து தீர்ப்பு வந்துள்ளது.  தர்பார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு கடனாக கொடுத்த பணத்தை திருப்பி தரமால் மலேசியாவில் படத்தை வெளியிடக் கூடாது என்று வழக்கில் கேட்டுக் கொண்டிருந்தார்.    

    14:08 (IST)07 Jan 2020

    ஏபிவிபி , என்எஸ்யுஐ மாணவர் அமைப்புகள் இடையே மோதல்

    அகமதாபாத்தில் ஏபிவிபி மற்றும் என்எஸ்யுஐ பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலை  கலைக்க போலீசார்  லத்தி சார்ஜில் ஈடுபட்டனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஏபிவிபி  அலுவலகம் அருகே என்எஸ்யுஐ  ஆர்ப்பாட்டன் செய்த போது மோதல் ஆரம்பித்தது.  இதில், சுமார் 10 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    13:05 (IST)07 Jan 2020

    சபரிமலையில் அலைமோதும் கூட்டம்... பம்பை, நிலக்கலில் போக்குவரத்து பாதிப்பு

    பக்தர்கள் மாலை அணிந்து வழிபாடு நடத்தும் காலம் இது என்பதால் திரளான பக்தர்கள் கூட்டம் ஐயப்பனை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது. இன்று 12 மணி நேரத்திற்கும் மேலாக பூஜைகள் தாமதம் ஆனதால் க்நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் நெரிசல் அதிகமாகி வருகிறது.

    12:49 (IST)07 Jan 2020

    மார்ச் மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது கச்சத்தீவு தேவாலய நிகழ்ச்சி

    கச்சத்தீவில் அமைக்கப்பட்டிருக்கும் தேவாலயம் ஒன்றில் மார்ச் மாதம் 7ம் தேதி தேவாலய திருவிழா நடைபெறும் என்று யாழ்பாண மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    12:43 (IST)07 Jan 2020

    வருமான வரி வழக்கு : கார்த்தி சிதம்பரத்தை விடுவிக்க மறுப்பு

    வருமானவரித்துறை சார்பாக கார்த்தி சிதம்பரம் மீது போடப்பட்டிருக்கும் வழக்கில் இருந்து அவர் மற்றும் அவருடைய மனைவி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் ஆகியோரை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    12:32 (IST)07 Jan 2020

    ஹெலோ எஃப்.எம்.க்கு சர்வதேச யோகா தின ஊடக விருது

    மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் யோகா தின விருதுகளில் ஊடகத்துறைக்கான விருது தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஹெலோ எஃப்.எம்க்கு வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஆதவன் ஆதித்தன் அந்த விருதை பெற்றுக் கொண்டார்.

    12:04 (IST)07 Jan 2020

    ஜே.என்.யு தாக்குதல் இந்து ரக்‌ஷா தளம் பொறுப்பு

    ஜே.என்.யுவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் பொறுப்பேற்றுள்ளது. தேச விரோத நடவடிக்கைகளின் மையமாக பல்கலைக்கழகம் விளங்கி வருகிறது என்றும் இது போன்ற நடவடிக்கைகளை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று அந்த அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி பேச்சு.

    12:02 (IST)07 Jan 2020

    திமுக, அதிமுக கட்சியினர் கொலை செய்ய முயற்சி - பாதுகாப்பு கோரிய சுயேட்சை கவுன்சிலர்

    திருவண்ணாமலை ஜவ்வாது மலை ஒன்றியத்தின் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார் சுயேட்சை வேட்பாளர் காளி. அவரை தங்கள் கட்சிகளின் பக்கம் இழுக்க அதிமுக மற்றும் திமுக கட்சியினர் வீட்டு வாசலிலேயே காத்திருந்ததால் பரபரப்பு. இரு கட்சியினரும் கொலை செய்ய முயற்சி செய்வதாக காவல்துறையினரிடம் பரபரப்பு குற்றச்சாட்டு.

    11:58 (IST)07 Jan 2020

    ஆஸ்திரேலிய காட்டுத்தீ

    ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று மாதங்களாக எரியும் காட்டுத்தீயில் பல உயிரினங்கள் கருகி இறந்தது. தண்ணீருக்காக மனிதர்கள் வாழும் பகுதிக்கு விலங்குகள் வரத் துவங்கியுள்ளது. இது குறித்து பாமக தலைவர் ட்வீட் வெளியிட்டுள்ளார்

    11:37 (IST)07 Jan 2020

    திமுக வெளிநடப்பு

    தமிழக சட்டப்பேரவையில் இருந்து இன்று மீண்டும் வெளிநடப்பு செய்தது திமுக. இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பல்வேறு விசயங்கள் குறித்த அப்டேட்டினை உடனுக்குடன் பெற இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

    11:14 (IST)07 Jan 2020

    பாலாற்றில் தடுப்பணை - வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு

    பாலாற்றில் ஆந்திர மாநிலம் கட்ட இருக்கும் தடுப்பணையை கட்ட கூடாது என்று தடை கோரி வழக்கு பதிவு செய்திருந்தது தமிழக அரசு. இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

    11:13 (IST)07 Jan 2020

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல்களை மாநில தேர்தல் ஆணையம் நடத்தவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை வழக்கறிஞர் ஜெய்சுகின் பதிவு செய்துள்ளார்.

    10:57 (IST)07 Jan 2020

    ஆபரண தங்கத்தின் விலை குறைவு

    சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 53 குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ. 424 குறைந்து ரூ. 30, 744க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கத்தின் விலை ரூ. 31 ஆயிரத்தை நெருங்கியது குறிப்பிடத்தக்கது.

    10:47 (IST)07 Jan 2020

    பாலமேடு ஜல்லிக்கட்டில் அருந்ததியர் - இன்று விசாரணை

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் அருந்ததியர் பங்கேற்க அனுமதி வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சந்தானம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

    10:24 (IST)07 Jan 2020

    கொடிக்கம்பங்கள் அகற்றக் கோரிய வழக்கு - மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு

    கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கினை விசாராணை செய்த நீதிபதிகள், இதுவரை அம்மாவட்டத்தில் எத்தனை கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது என்பது குறித்து முழுமையான விபரங்களுடன் பிப்ரவரி 10ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    10:22 (IST)07 Jan 2020

    நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து

    ராமநாதபுரம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற விசைப்படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படகில் பயணம் செய்த 3 மீனவர்கள் உயிர்த்தப்பினர். ஒருவர் மாயம்

    10:17 (IST)07 Jan 2020

    கல்பாக்கம் அணுமின் நிலையம் 13ம் தேதி வரை மின் உற்பத்தி நிறுத்தம்

    சென்னையை அடுத்து அமைக்கப்பட்டுள்ள கல்பாக்காம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலை பராமரிப்பு பணிக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 13ம் தேதி வரை இயங்காது என்பதால் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    10:09 (IST)07 Jan 2020

    மேட்டூர் அணையின் நீர்மட்டம்

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.4 அடியாக உள்ளது. அதன் நீர் இருப்பு 86.3 டி.எம்.சியாகவும், நீர் வரத்து 1040 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 10,600 கன அடியாகவும் உள்ளது.

    10:09 (IST)07 Jan 2020

    மறைமுக தேர்தலுக்கு சட்ட மசோதா

    உள்ளாட்சி தேர்தல்களில் முக்கிய பதவிகளுக்கு நடைபெற இருக்கும் மறைமுக தேர்தல் குறித்த சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

    09:55 (IST)07 Jan 2020

    பவானி சாகர் அணையின் நீர்மட்டம்

    தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாக உள்ளது. நீர் இருப்பு 32.8 டி.எம்.சியாகவும், நீர்வரத்து 211 கனஅடியாகவும், வெளியேற்றம் 200 கன அடியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    09:55 (IST)07 Jan 2020

    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை

    இன்றும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து ரூ. 78.69க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் 11 காசுகள் அதிகரித்து ரூ. 72.69க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    09:54 (IST)07 Jan 2020

    ஒன்றிய மேலாளர் பணியிடை நீக்கம்

    வாக்கு எண்ணிக்கையின் போது ஊழியர்களுக்கு முறையாக, சரியான நேரத்தில் உணவளிக்காத ஒன்றிய மேலாளர் கொளஞ்சி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    09:54 (IST)07 Jan 2020

    கால்நடைகளுக்கு 25 புதிய மருந்தகங்கள்

    5 ஆயிரம் கால்நடைகளுக்கு மேல் உள்ள கிராமங்களில் 25 புதிய மருந்தகங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்காக ரூ. 3.12 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கோபி மற்றும் உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அதற்காக ரூ. 2.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.

    Tamil Nadu news today updates : கடந்த மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் 2 மற்றும் 3 தேதிகளில் வெளியிடப்பட்டது. சில இடங்களில் மறு தேர்தலும், இன்னும் சில இடங்களில் மறுவாக்கு எண்ணிக்கைக்கும் உத்தரவிடப்பட்டது. தற்போது கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பட்டி, குமராட்சி, மேல்புவனகிரி மற்றும் கீரப்பாளையம் இடங்களில் மறு வாக்குக்கு எண்ணிக்கைக்கு அம்மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment