Tamil Nadu news today live updates Delhi elections : பரபரப்பான பரபரப்பான பரப்புரைகள், காரசாரமான பிரச்சாரங்கள், தேர்தல் ஆணையத்தின் கிடுக்குப்பிடி என அனைத்தையும் கடந்து இன்று காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது டெல்லி தேர்தல். இந்த தேர்தலை அமைதியான முறையில் நடத்த கிட்டத்தட்ட 40 ஆயிரம் காவல்துறையினரையும், 19 ஆயிரம் ஹோம் கார்டுகளையும், 190 துணை ராணுவ படைகளையும் நிறுத்தியுள்ளது மத்திய அரசு. பிரதமர் மோடி. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இளைஞர்களை தேர்தலில் வந்து வாக்களிக்குமாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். சிவில் லைன்ஸ் போலிங் பூத்தில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி தேர்தல் தொடர்பான அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள
அரவிந்த் கெஜ்ரிவால் பெண்களுக்காக அறிவித்த திட்டங்கள் குறித்து பெண்களின் கருத்து என்ன?
இந்தியா Vs நியூசிலாந்து இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே டி20 தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் முதல் போட்டியை நியூசிலாந்து அணி ஏற்கனவே வென்றது. தற்போது இரண்டாவது போட்டி ஈடன் பார்க் மைதானம், ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா வெற்றியை கைப்பற்றுமா? முழுமையான லைவ் அப்டேட்டினை பெற்றிட
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
ரஜினியின் தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை குவிக்காததால் திரைப்பட விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள், தங்களுடைய பிரச்னையை தீர்க்காவிட்டால் உண்ணவிரதப் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர், தர்பார் படத்தால் விநியோகஸ்தர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் பாணியில் "இன்றைக்கு தைப்பூசம் ஆனால் ‘தர்பார்’ படத்தை வாங்கியவர்கள் ஆகிவிட்டார்கள் மோசம்" என்றார்.
ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பின்படி, கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு 48-61 இடங்கள் கிடைத்துள்ளன. இந்த வாக்கெடுப்பு பாஜகவுக்கு 9-21 இடங்களை கணித்துள்ளது.
ரிபப்ளிக் டிவி - கருத்துக் கணிப்பு
மொத்த இடங்கள்: 70
ஆம்: 48-61
பாஜக: 9-21
காங்கிரஸ்: 0-1
இன்று நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெரும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்தியா நியூஸ்-நேதா - கருத்துக் கணிப்பு
ஆம் ஆத்மி: 53-57 இடங்கள்
பாஜக: 11-17
காங்கிரஸ்: 0-2 இடங்கள்.
டைம்ஸ் நவ்-ஐபிஎஸ்ஓஎஸ் ஆம் ஆத்மி கட்சிக்கு 44 இடங்களை கணித்துள்ளது
மொத்த இடங்கள்: 70
ஆம்: 44
பாஜக: 26
காங்கிரஸ்: 0
எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்கத் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன்போத், எல்ஐசி போன்ற பொது துறை கம்பெனியில் பொதுமக்களின் பங்குகளும் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், எத்தனை சதவிகித பங்குகள் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
சென்னையில் இன்று ஒரு நாள் சுற்றுப்பயணம் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். முன்னதாக நிதி அமைச்சர் பொருளாதார நிபுணர்கள், கல்வியாளர்கள், கொள்கை வல்லுநர்களுடன் #பட்ஜெட்2020 குறித்து தற்போது கலந்துரையாடினார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி. இன்று ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் 274 ரன்களை இலக்காக வைத்தது நியூசிலாந்து அணி. இரண்டாவதாக களம் இறங்கியது இந்திய அணி. 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்த தொடரின் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
மத்திய அரசு வருமான வரித்துறையை பயன்படுத்தி அனைவரையும் அடிபணிய வைக்க முயலுகிறது என்றும் நீட் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடாமல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் முத்தரசன் கூறியுள்ளார்.
ஒரு கோடி கையெழுத்து எதிர்பார்த்த நிலையில், 2 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிஏஏவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்தின் நகல்களை குடியரசுத் தலைவரிடம் 5 நாட்களில் ஒப்படைக்க உள்ளதாகவும் அறிவிப்பு.
தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா 5ம் தேதி சீறும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் அயராது துப்பரவு பணியினை மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. மேலும் ஊக்கத்தொகையாக ரூ. 1000-மும் வழங்கப்பட்டது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் 280 துப்புரவு தொழிலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights