News today updates: இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது தற்காலிகமானதே – IMF தலைவர்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.31-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.71.43-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

By: Jan 24, 2020, 10:32:47 PM

Tamil Nadu news today updates dlf downtown : சென்னை தரமணி பகுதியில் ரூ. 5000 கோடி மதிப்பிலான ஐ.டி. நிறுவனம் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. டி.எல்.எஃப் தனியார் நிறுவனமும், தமிழக அரசின் டிட்கோ துறையும் இணைந்து உருவாக்கும் திட்டம் 6 ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் இதனால் நேரடியாக 70 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும் என்று நேற்றைய நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள இந்த இணைப்பை படியுங்கள்

ரூ 40க்கு தோசை விற்கும் தோச மாமா

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசித்து வரும் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 9 ஆண்டுகளாக பாரதி டிஃபன் செண்டர் நடத்தி வருகிறார். இங்கு விதவிதமாக கிடைக்கும் தோசைகளில் மிகவும் முக்கியமானது பூண்டு தோசை தான்… இந்த தோச மாமா குறித்து வீடியோவை பார்த்து அறிந்து கொள்ளுவோம் வாங்க!

5 மற்றும் 8 பொதுத்தேர்வுகளுக்கான கட்டணங்கள் அறிவிப்பு

5 மற்றும் 8 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தேர்வினை எழுத இருக்கும் மாணவர்களுக்கான கட்டணங்களை அறிவித்தது கல்வி இயக்குநரகம். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த கட்டணங்கள் ஏதும் இல்லை. இது தொடர்பான முழுமையான தகவல்களை படிக்க

Live Blog
Tamil Nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைப் படிக்க இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
22:16 (IST)24 Jan 2020
1.51 கோடி ரூபாய் அபராதம்

மும்பையில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 22,680 பயணிகளைப் பிடித்ததில், 1.51 கோடி ரூபாய் அவர்களிடமிருந்து அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

21:45 (IST)24 Jan 2020
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது தற்காலிகமானதே - IMF தலைவர்

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது தற்காலிகமானதே என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் தணிந்து, முதல் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் பொருளாதார வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

எனினும், உலக அளவில் 3.3 சதவீதம் என்ற வளர்ச்சி விகிதம் பொருளாதாரத்திற்கு சிறப்பானது அல்ல என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்திருப்பது தற்காலிகமானதே என்றும், பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

21:28 (IST)24 Jan 2020
2 திராவிட கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் சில்லறைகள்

தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் சில்லறைகள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

20:52 (IST)24 Jan 2020
குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு

2017ல் நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

20:41 (IST)24 Jan 2020
திருமாவளவன் கண்டனம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கலியப்பேட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம்

20:16 (IST)24 Jan 2020
கழிவு நீர், வைகை ஆற்றில் கலக்கிறதா?

மதுரை : விரகனூர் ரிங்ரோடு - பி.டி.ஆர்.பாலம் வரை உள்ள சாலைகள் வைகை ஆற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய குழு அமைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் கழிவு நீர், வைகை ஆற்றில் கலக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து பிப்.3ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

20:11 (IST)24 Jan 2020
வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகே பதட்டம்

சி.ஏ.ஏ.& என்.ஆர்.சிக்கு எதிரான திடிர் முற்றுகை போராட்டத்தால் ஆயிரக்கணக்கில் போலிஸ் குவிப்பு வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகே பதட்டம் நிலவி வருகிறது.

20:00 (IST)24 Jan 2020
நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு சங்கங்கள் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

19:36 (IST)24 Jan 2020
3 பேர் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைதான 3 பேர் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

டிபிஐ அலுவலக உதவியாளர் ரமேஷ், 2017இல் குரூப்-2(ஏ) தேர்வில் வெற்றிபெற்ற திருக்குமரன், தேர்வாளர் நிதிஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு.

குரூப்-4 முறைகேட்டில் ராமேஸ்வரம், கீழ்க்கரை தேர்வு மையங்களில் பொறுப்பில் இருந்த சில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு.

தேர்வர்கள் சிலரை இடைத்தரகர்கள் அணுகி பணம் பெற்றுக்கொண்டு விடைத்தாள்களில் முறைகேடு.

குரூப்-4 தேர்வில் கீழ்க்கரை, ராமேஸ்வரம் மையங்கள் தவிர வேறு எங்கும் முறைகேடு இல்லை.

வழக்கில் முக்கிய பங்காற்றியவர்கள், இடைத்தரகர்கள் பற்றியும் பல கோணங்களில் விசாரணை.

- சிபிசிஐடி

19:22 (IST)24 Jan 2020
குடியரசு தின விழா கொண்டாடப்பட வேண்டும்

ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளிலும், கல்வித்துறை அலுவலகங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

18:41 (IST)24 Jan 2020
ரஜினி மீதான புகார்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யத் தவறினால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் - தி.வி.க

ரஜினி மீதான புகார்கள் மீது ஒரு வாரத்திற்கு பிறகு காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்யத் தவறினால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று திராவிடர் விடுதலைக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ரஜினியின் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளது.

18:12 (IST)24 Jan 2020
நடிகர் சங்கத்தேர்தல் தீர்ப்பு: மேல்முறையீடு செய்யப்படும் என விஷால் தரப்பு அறிவிப்பு

கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் செல்லாது என்று ரத்து செய்து தீர்பளித்தது. புதிதாக தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் தரப்பினர் மேல் முறையீடு செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

17:31 (IST)24 Jan 2020
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்: காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது, சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

17:15 (IST)24 Jan 2020
புதிதாக நடக்கவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தல் நியாயமான முறையில் நடக்கும் ஐசரி கனேஷ் நம்பிக்கை

கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததொடு புதிதாக தேர்தல் உத்தரவிட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஐசரி கணேஷ்: நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு நாடக நடிகர்கள் பயன் பெற வேண்டும். முறையற்ற வகையில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக நடக்கவிருக்கும் தேர்தல் நியாயமான முறையில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

16:02 (IST)24 Jan 2020
தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை - டிஜிபி திரிபாதி

டிஜிபி திரிபாதி: தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். செங்கல்பட்டு அருகே கலியப்பேட்டையில் பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

15:56 (IST)24 Jan 2020
பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் 4 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகை

பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ 4 நாள் அரசுமுறைப் பயணமாக அவர் இன்று இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்திற்கு வருகை தந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர். குடியரசு தின அணிவகுப்பு 2020-இல் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

15:21 (IST)24 Jan 2020
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்

செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை சேதப்படுத்தப் பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ரியார் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. குற்றவாளிகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

14:43 (IST)24 Jan 2020
நடிகர் சங்கத் தேர்தல் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஆண்டு ஜுன் 23-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்தலை ரத்து செய்யக்கோரி ஏழுமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே, நடிகர் சங்க நிர்வாகத்தை கவனிக்க பதிவுத்துறை உதவி ஐஜி-யை நியமித்ததை எதிர்த்து, நடிகர்கள் நாசர் மற்றும் கார்த்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குள் அனைத்தையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்குகள் மீது இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்தும் புதிய தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார்.

14:27 (IST)24 Jan 2020
சுடுகாட்டில் காங்கிரஸ் நிர்வாகி முன்னோர்களிடம் குடியுரிமைக்கான ஆதாரத்தை வேண்டி வழிபாடு

குடியுரிமைக்கான ஆதாரத்தை அரசு கேட்பதால் அதை வேண்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் சுடுகாட்டில் உள்ள தனது முன்னோர்களிடம் சமாதியில் காங்கிரஸ் நிர்வாகி ஹசீப் அஹமது பிரார்த்தனை செய்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும், போராட்டம் நடந்து வரும் நிலையில், சுடுகாட்டில், காங்கிரஸ் நிர்வாகி இந்த வழிபாட்டை மேற்கொண்டார்.

14:12 (IST)24 Jan 2020
சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிடுபவர்களின் பட்டியலை தயார் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்களின் பட்டியலை தயார் செய்ய ஏடிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14:02 (IST)24 Jan 2020
முன்னாள் அமைச்சர் வைகை செல்வனின் மாமனார் மரணம்

முன்னாள் அமைச்சர் வைகை செல்வனின் மாமனார் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தார்.

13:50 (IST)24 Jan 2020
பெரியார் சிலை உடைப்பு : ஸ்டாலின் கண்டனம்

செங்கல்பட்டு பகுதியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து பலரும் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்ற நிலையில் சிலை உடைப்பு கண்டிக்கத்தக்கது என்றும் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முக ஸ்டாலின் அறித்துள்ளார்.

13:46 (IST)24 Jan 2020
சாகர்மாதா சம்மாத்

நேபாள தலைநகரம் காத்மாண்டுவில் நடைபெற இருக்கும் சாகர்மாதா சம்மாத் என்ர விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது நேபாள அரசு. இந்த விழா வருகின்ற 2 முதல் 4 தேதிகளில் நடைபெற உள்ளது.

13:45 (IST)24 Jan 2020
திமுக தோழமை கட்சி கூட்டம்

பிப்ரவரி மாதம் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை சி.ஏ.ஏவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி முடிவு செய்துள்ளது. குடியரசுத் தலைவரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

13:43 (IST)24 Jan 2020
தமிழக கேரள முதல்வர்கள் சந்திப்பு

விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் சந்திக்க இருப்பதாக அமைச்சர் கருப்பண்ணன் அறிவித்தார்.

13:41 (IST)24 Jan 2020
பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு

பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய ரஜினிக்கு எதிராக திராவிடர் கழகம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு மீண்டும் ஏன் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று கேள்வி எழுப்பியது நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து மனுக்கள் வாபஸ் பெறபட்டதால் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.

12:43 (IST)24 Jan 2020
முகநூலில் ஆபாச கருத்து - தயாராகிறது பட்டியல்

சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துகளை பதிவு செய்பவர்களின் பட்டியலை தமிழகம் முழுவதும் தயாரித்து ஜனவரி 29ல் அறிக்கை சமர்பிக்க சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

12:34 (IST)24 Jan 2020
Group 4 malpractice

குரூப் 4 முறைகேடு தொடர்பாக, வட்டாட்சியர்கள் வீரராஜ், பார்த்தசாரதி உள்ளிட்ட 12 பேர் மீது 120B, 420, 469, 467, 466 என 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது சி.பி.சி.ஐ.டி.

12:31 (IST)24 Jan 2020
5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிராக ஆர்பாட்டம்

தமிழகத்தில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் வருகின்ற 28ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12:30 (IST)24 Jan 2020
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 : இந்திய அணி டாஸ் வென்றது

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் முதல் டி20 இன்று நடைபெறுகிறது. தற்போது டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

11:48 (IST)24 Jan 2020
வெல்டன் டிஜிட்டல் இந்தியா - கனிமொழி ட்வீட்

வெல்டன் டிஜிட்டல் இந்தியா என்று இந்தியாவில் நடைபெறும் இணைய துண்டிப்பு குறித்து எம்.பி கனிமொழி ட்வீட் செய்துள்ளார். 

Well Done 'Digital India' !#internet pic.twitter.com/EMjQX7dPsh

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 24, 2020

11:45 (IST)24 Jan 2020
பாலியல் புகார் : நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

பாலியல் புகாரில் நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசு பதில் அளிக்கவும், ஒரு வாரத்தில் நித்தியானந்தா பதில் அளிக்கவும் உத்தரவு.

11:37 (IST)24 Jan 2020
11 எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்கு

11 எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்கை விரைவாக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கோரிக்கை. இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

11:25 (IST)24 Jan 2020
தேர்வு முறைகேடு அதிர்ச்சி அளிக்கிறது - ராமதாஸ்

போட்டித் தேர்வுகள் நியாயமான முறையில் நடைபெறும் என்ற நம்பிக்கையில் தேர்வு எழுதிய மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். முறைகேடுகள் இல்லாத நியாயமான தேர்வுகள் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனம் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

11:16 (IST)24 Jan 2020
தங்கம் விலை குறைவு

ஒரு சரவன் தங்கத்தின் விலை ரூ. 32 குறைந்துள்ளது. ரூ. 30,552க்கு விற்பனையாகிறது சென்னையில் ஒரு சவரன் தங்கம்.

11:02 (IST)24 Jan 2020
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக திமுக கூட்டம் 

சி.ஏ.ஏ மற்றும் என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது.  கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

10:50 (IST)24 Jan 2020
குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலை

கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த பெட்ரோலின் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசுகள் குறைந்து ரூ.77.31-க்கும், டீசல் 27 காசுகள் குறைந்து ரூ.71.43-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

10:40 (IST)24 Jan 2020
பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.68 அடிகளாக உள்ளது. நீர் இருப்ப்பு 30.8 டி.எம்.சியாகவும், நீர் வரத்து 394 கனஅடிகளாகவும் உள்ளது. நீர் வெளியேற்றம் 2200 கன அடிகளாக உள்ளது.

10:33 (IST)24 Jan 2020
குரூப் 4 முறைகேடு விவகாரம் : 99 பேருக்கும் தடை விதித்து அதிரடி உத்தரவு

குரூப் 4 முறைகேடு விவகாரம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வுகள் எழுதிய 99 பேருக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு பதில் தகுதியான நபர்களை தேர்வு செய்ய முடிவு.

Tamil Nadu news today updates : சௌதி அரேபியாவில் பணியாற்றும் கேரள செவிலியருக்கு வுஹான் வைரஸ் : கேரளாவில் இருந்து சௌதி சென்ற இந்திய செவிலியர்கள் 100 பேர் அல் - ஹயாத் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு இந்த வுஹான் வைரஸ் நோய் தொற்று ஏதாவது இருக்கிறதா என்று சோதனை இட்டபோது ஒருவருக்கு மட்டும் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் இந்த நோய் தொற்றின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு தீவிர சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

Web Title:Tamil nadu news today live updates dlf downtown 8th board exams fees tn politics dmk admk

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X