Tamil Nadu news today updates kaanum pongal 2020 : இன்று தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் மெரினாவில் கூடுவது வழக்கம். இந்நிலையில் எங்கும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்திட கூடாது என்பதற்காக காவல்துறை தீவிர பணியாற்றி வருகிறது. மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தலைமையில் இணை ஆணையர்களும் 10 ஆயிரம் காவல்துறையினரும் இன்று சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படிக்க : 3 ட்ரோன் கேமராக்கள், 12 சிசிடிவி, 10,000 காவலர்கள் : மெரினாவில் பாதுகாப்பான காணும் பொங்கல்!
ரஜினியும் கமலும் கலந்த கலவை தான் தனுஷ் - தெறிக்கவிடும் பட்டாஸ் படம் குறித்து ஒரு வீடியோ
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
இன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிகட்டு நடைபெற்று வருகிறது. 15ம் தேதி அவனியாபுரம், 16ம் தேதி பாலமேடு, 17ம் தேதி அலங்காநல்லூர் என்று வரிசையிடப்பட்டு முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. 700 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகள் இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
Live Blog
இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!
நிர்பயா வழக்கு: குற்றம் நடந்தபோது தான் சிறுவன் என்ற முறையீட்டை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்காததை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பவன்குப்தா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து உரிமம் வழங்குவது முறையல்ல. ஏற்கெனவே 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை ஆம் ஆத்மியால் நிறைவேற்ற முடியவில்லை என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கருத்து தெரிவித்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிர்பயா விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரை உருவாக்க இணைந்து செயலாற்றுவோம் என்று கூறியுள்ளார்.
எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட மெகபூப் பாஷா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைதான அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த 3 பேர் தந்த தகவலின் பேரில் மெகபூப் பாஷாவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
தகவல் தொடர்பு சேவைக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டப்படி ஏரியான்-5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: சமூகநீதி கோணத்தில் பெரியாரை பார்த்தால் அவரது போராட்டங்களை ரஜினி புரிந்துகொள்ள முடியும். பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும். சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 57 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. இதில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த கபில் மிஸ்ரா டெல்லி மாடல் டவுன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரை பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனுவை நிராகரித்த ஆவணத்தை டெல்லி திகார் சிறைத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. குற்றவாளிகளிகளை தூக்கிலிட திகார் சிறைத்துறையின் கோரிக்கையை ஏற்று குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிட உத்தரவு பிறப்பித்துள்ளது.
குரூப் 4 முறைகேடு புகார் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவு குறித்து டிஎன்பிஎஸ்சி நாளை மறுநாள் ஆலோசனை நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி செயலர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.
திருச்சி விமான நிலையம் பகுதியிலுள்ள சந்தோஷ் நகரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் துப்பாக்கிச்சுடும் கிளப் நடத்தி வந்தார். இன்று காலை அங்கே துப்பாகிச் சுடும் சத்தம் கேட்டதா அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சென்று பார்த்தபோது சசிகுமார் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடந்தார். துப்பாக்கிச்சுடும் பயிற்சி கிளப் நடத்தி வரும் இவருக்கு உண்மையான துப்பாக்கி கிடைத்தது எப்படி என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிஏஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், பிரதமர் மோடி இந்திய குடியுரிமை பெற்றதற்கான ஆதாரத்தைக் கேட்டு கேரளாவைச் சேர்ந்த ஜோஸ் கல்லு வீட்டில் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனு அளித்துள்ளார்.
உள்துறை அமைச்சகம் இன்று குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் ராம்நாத் கோவிந்த். இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு குற்றவாளிகள் மறுசீராய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேரள சட்டசபையில் கடந்த மாதம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். பாஜக எம்.எல்.ஏ ராஜகோபால் தவிர அனைவரும் அந்த தீர்மானத்தை ஒரு மனதாக ஆதரித்த நிலையில் பஞ்சாப் சட்டமன்றத்தில் சி.ஏ.ஏவுக்கு எதிராக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரிய தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை வருகின்ற ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறாது ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டிகள். இதில் இந்திய வீரங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சானியா மிர்சா - நாடியா ஜோடி நாளை சாங் - சுவாய் - பெங்க் சுவோ இணையை எதிர்த்து இறுதி போட்டியில் விளையாட உள்ளது.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டு குறித்த கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது, மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. தலைமைச் செயலாளர்கள் பலரும் அங்கே பங்கேற்றுள்ள நிலையில் கூட்டத்தையே நிராகரித்துவிட்டது மேற்குவங்கம்.
நெல்லை ராதாபுரம் தொகுதியில் உள்ள வடலிவிளையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் நடைபெற்றது. அதில் ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பங்கேற்று தங்களின் வீரத்தினை வெளிப்படுத்தினர். இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அத்தொகுதி எம்.எல்.ஏ இன்பதுரை.
#ராதாபுரம் தொகுதியில் #வீரன்ஜம்புலிங்கம் பிறந்த மண்ணான வடலிவிளையில் இன்று நடந்த #இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் தமிழர்களின் பாரம்பரிய #வீரம் பளிச்சிட கண்டேன்! #இன்பதுரை#பொங்கலோபொங்கல் #வளர்ச்சிப்பாதையில்ராதாபுரம்@EPSTamilNadu @OfficeOfOPS@SPVelumanicbe @NewsJTamil pic.twitter.com/E1rnCTqb6z
— I.S.INBADURAI. M.L.A. (@IInbadurai) January 16, 2020
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் முதல்வர் பழனிசாமி அதிமுக தலைமையகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தார். அவருடன் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.
இன்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாம் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. ராஜ்கோட்டில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 01:30 மணிக்கு இந்த போட்டி துவங்க உள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியை வென்றது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மணப்பாறை அருகே அமைந்துள்ள ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலையில் இருந்து நடைபெற்று வருகிறது. 700 காளைகளும் 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு. புதுக்கோட்டை வன்னியன் விடுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் 450 காளைகளும் 210 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு. பழனி நெய்க்காரப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. 400 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணயம், தமிழகத்தில் சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிக்கும் கோவிலாக நெல்லையப்பார் காந்திமதி அம்பாள் கோவிலை தேர்வு செய்துள்ளது. இரண்டாம் இடத்தை சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவில் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights