Tamil Nadu news today updates TASMAC price hike : டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் உள்ள 5200 மது கடைகளுக்கு தேவையான 11 நிறுவனங்களிடம் இருந்து மதுவகைகளையும், 7 நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளும் வாங்கப்படுகிறது. இன்று முதல் பீர் மற்றும் இதர வகை மதுபானங்களுக்கு விலை ரூ. 40 வரை அதிகரிக்க உள்ளது. கடைசியாக 2017ம் ஆண்டு மது பானங்களின் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
உழைப்பே உயர்வு - 113 வயதிலும் மிட்டாய் விற்கும் மிட்டாய் தாத்தா
விஜய் வீட்டில் ஐ.டி. ரெய்டு
நடிகர் விஜய் நடித்த படத்தில் விற்பனை 300 கோடி ரூபாயை தாண்டியது என்று வெளியான தகவல்களின் அடிப்படையில் விஜயின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.டி. ரெய்ட் குறித்து ஏற்கனவே நடிகர் அஜித் தன்னுடைய கருத்துகளை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜித், ஐ.டி. ரெய்ட் குறித்து கூறியது என்ன?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Tamil Nadu news today updates : இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நாளை நடைபெறுகிறது.
இந்திய அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை எந்த குறையும் இல்லை. பவுலிங்கில் ஷர்துள் தாக்குரால் மறந்தும் ஒரு பெர்சன்ட் தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியவில்லை. ஆகையால், அவருக்கு பதில் சைனி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். வேறு பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது.
நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு - ஒருவர் கைது
விழுப்புரம் மாவட்டம் ஆரியூரில் வி.ஏ.ஓ. ஆக பணியாற்றும் நாராயணன் கைது. வி.ஏ.ஓ. தேர்வு முறைகேடு தொடர்பாக புதிய வழக்கு பதிவு. இடைத்தரகர் ஜெயக்குமார் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம் - சி.பி.சி.ஐ.டி.
கரூர் : சித்தலவாய் ஊராட்சியில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் ஆண் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் வார்டு உறுப்பினர் மற்றும் துணைத்தலைவர் பதவியை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் துணைத்தலைவர் பதவியை ரத்து செய்து உத்தரவு
* மறு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை தவிர்க்க தேர்வர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் - டி.என்.பி.எஸ்.சி.
ஆறு புதிய விதிகளை உருவாக்கி டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
முறைகேடுகளை முன்கூட்டியே அறிய உயர் தொழில்நுட்பத் தீர்வு வரும் தேர்வுகளில் நடைமுறைப்படுத்தப்படும்
3 தேர்வு மையங்களை தேர்வு செய்யலாம் - தேர்வர்களுக்கான மையங்களை தேர்வாணையமே ஒதுக்கீடு செய்யும்
தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள் நகல்களை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் - டி.என்.பி.எஸ்.சி.
கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் விவரம் அன்றைய தினமே இணையதளத்தில் வெளியிடப்படும் - டி.என்.பி.எஸ்.சி.
அதிமுக ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழு முதல் உதாரணமான குரூப் 1 தேர்வு ஊழல்களை மூடி மறைத்து, ஆளும்கட்சிக்கு ஆதரவான அடாவடி நபர்களைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.
உலக மகா யோக்கியர் போலப் பேசும் அமைச்சர் ஜெயக்குமார், உண்மைக் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவாரா?
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான நடிகர் ரஜினியின் கருத்து அவரது உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் ராஜகணபதி கோவில் அருகே கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். குடியுரிமை திருத்த சட்டத்தை ரஜினி ஆதரிப்பார் என தாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.
மக்களவையில் தன்னை தாக்கிய பாஜக எம்பிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம்
* கொலை மிரட்டல் விடுத்த பிரஜ் பூஷன் சிங் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதம்
கோவை சுந்தராபுரம் பகுதியில், வெல்டிங் வேலை செய்து வருபவர் முத்துக்குமார், இவரது மனைவி முல்லைக்கொடி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். முத்துக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 7ஆம் வகுப்பு படிக்கும் அவர்களது மகள், பெற்றோரிடம் சண்டை வேண்டாம் என பலமுறை கூறியும், இருவரும் கேட்காமல் இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்திருந்த, மகள் நந்தினி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றது செல்லாது என திருமாவளவன் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் முருகுமாறனின் வெற்றி செல்லத்தக்கது என்று கூறி திருமாவளவனின் வழக்கினை தள்ளுபடி செய்து அறிவித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
ஊட்டியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற மத்திய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கே இருந்த பழங்குடி சிறுவனை அழைத்து செருப்பினை அகற்ற கோரினார். அமைச்சரின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, சிறுவனோ காவல்துறையிடம் புகார் அளித்தான். இந்நிலையில் அமைச்சர் அச்சிறுவனின் குடும்பத்தாரிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். இன்று மாலைக்குள் புகார் வாபஸ் பெறப்படும் என்று அந்த சிறுவனின் தாய் அறிவித்துள்ளார்.
பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை ஒன்றினை ரூ. 50 ஆயிரம் கோடி முதலீட்டில் கடலூரில் அமைக்க ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு தூத்துக்குடியில் ரூ.49,000 கோடி மதிப்பில் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மூலங்குடியில் உள்ள விளைநிலம் வழியே கச்சா எண்ணெய் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் விளைநிலங்கள் கடுமையாக சேதாரம் அடைந்துள்ளது. விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், முறையாக இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை
முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தன்னுடைய காலணியை அகற்ற பழங்குடி சிறுவனை பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் அந்த சிறுவன் காவல்துறையில் புகார் அளிக்க, ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அந்த சிறுவனை அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் அமைச்சர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் ஹாசன் “தமிழக மக்கள் அனைவரும் தங்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்த வேண்டும்” என ட்வீட் செய்துள்ளார். மேலும் 9 மற்றும் 10 வகுப்புகளில் பள்ளிப் படிப்பை முடிக்காமல் வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இது எதிர் காலத்திற்கு ஆபத்தானது என்றும் ட்வீட் செய்துள்ளார்.
TN reports with 100% school dropouts in classes 9th & 10th. This is not just distressing but a dangerous reggression which has to be stopped. Governments distract with useless or redundant schemes.(1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) February 7, 2020
பேரறிவாளன் விடுதலை மீதான முடிவை ஆளுநர் சுதந்திரமாக எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 7 பேரின் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கடிதத்தை 2018ம் ஆண்டே நிராகரித்து விட்டதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. சட்டவிரோத காவலில் இருப்பதாக கூறிய நளினியின் புகார் விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்றும் அறிவிப்பு.
நாங்கள் படிக்கும் காலத்தில் தரையில் அமர்ந்து தான் படித்தோம். ஆனால் தற்போது மேஜைகள் போன்ற வசதிகள் உங்களுக்கு உள்ளது. நீங்களும் இது போன்று உயர் பதவிக்கு வரவேண்டும் என்று மதுரையில் மாணவர்கள் மத்தியில் உரையாடி வருகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பதற்கு அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார். மேலும்
ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் வருமான வரித்துறை பிரச்சனையை தவிர்க்கலாம் என்றும் பேசியுள்ளார் அவர்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்ய முயன்று கைதானவர் ஒப்பந்த பணியாளர் கௌரி. அவரை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது அம்மருத்துவமனை நிர்வாகம். இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் குறித்த நிலை என்ன? மாநில தகவல் ஆணையம் கேள்வி. 2000ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பள்ளி மாணவிகளுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையுடன் கல்விதுறை 13ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அதிக அளவில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் தேர்வர்கள் வெற்றி பெற அதன் பின்னால் இருந்து ஒவ்வொரு மர்ம செய்திகளும் வெளியாகி வருகிறது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் தலா 10 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளது சித்தாண்டியிடம் சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights