Tamil Nadu news today updates TASMAC price hike : டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் உள்ள 5200 மது கடைகளுக்கு தேவையான 11 நிறுவனங்களிடம் இருந்து மதுவகைகளையும், 7 நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளும் வாங்கப்படுகிறது. இன்று முதல் பீர் மற்றும் இதர வகை மதுபானங்களுக்கு விலை ரூ. 40 வரை அதிகரிக்க உள்ளது. கடைசியாக 2017ம் ஆண்டு மது பானங்களின் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
நடிகர் விஜய் நடித்த படத்தில் விற்பனை 300 கோடி ரூபாயை தாண்டியது என்று வெளியான தகவல்களின் அடிப்படையில் விஜயின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.டி. ரெய்ட் குறித்து ஏற்கனவே நடிகர் அஜித் தன்னுடைய கருத்துகளை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜித், ஐ.டி. ரெய்ட் குறித்து கூறியது என்ன?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம்களை துவக்கி வைக்க சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த பழங்குடி சிறுவனை அழைத்து தன்னுடைய காலணிகளை கழட்ட கூறியுள்ளார். அந்த சிறுவனும் அமைச்சரின் காலணியை கழற்றி மாட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யாவும் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பழங்குடி மக்களை இழிவு படுத்தும் வகையில் நடந்து கொண்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் படிக்க : பழங்குடி சிறுவனை செருப்பு கழற்ற வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: சர்ச்சை வீடியோ
Web Title:Tamil nadu news today live updates tasmac price hike vijay it raid
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நாளை நடைபெறுகிறது.
இந்திய அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை எந்த குறையும் இல்லை. பவுலிங்கில் ஷர்துள் தாக்குரால் மறந்தும் ஒரு பெர்சன்ட் தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியவில்லை. ஆகையால், அவருக்கு பதில் சைனி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். வேறு பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது.
வரும் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு
2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
தர்பார் படத்துக்கு பிறகு, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஷூட்டிங் இடையே ரஜினி ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பாதித்த சீனாவின் வூகான் நகரில் இன்னும் 80 இந்திய மாணவர்கள் உள்ளனர்; இந்தியர்களை மட்டுமின்றி மற்ற அண்டை நாட்டவர்களையும் மீட்டு வருவதாக மத்திய அரசு தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையதாக மேலும் ஒருவர் கேரளாவில் கைது
கொலையாளிகள் அப்துல் ஷமீம், தவுபிக் ஆகியோருக்கு கேரளாவில் வீடு எடுத்து கொடுத்த சையது அலியை கைது செய்து போலீசார் விசாரணை
நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு - ஒருவர் கைது
விழுப்புரம் மாவட்டம் ஆரியூரில் வி.ஏ.ஓ. ஆக பணியாற்றும் நாராயணன் கைது. வி.ஏ.ஓ. தேர்வு முறைகேடு தொடர்பாக புதிய வழக்கு பதிவு. இடைத்தரகர் ஜெயக்குமார் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம் - சி.பி.சி.ஐ.டி.
கரூர் : சித்தலவாய் ஊராட்சியில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் ஆண் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் வார்டு உறுப்பினர் மற்றும் துணைத்தலைவர் பதவியை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் துணைத்தலைவர் பதவியை ரத்து செய்து உத்தரவு
* மறு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு
கரூர் : சித்தலவாய் ஊராட்சியில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் ஆண் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் வார்டு உறுப்பினர் மற்றும் துணைத்தலைவர் பதவியை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மறு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிசாமியின் நீதிமன்ற காவல் வரும் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சத்தினால் சீனாவில் இயங்கி வரும் டாடா மோட்டார்ஸ் ஜே.எல்.ஆர் ஆலையின் பணிநிறுத்தத்தை அந்நிறுவனம் நீட்டித்துள்ளது.
மதுரை விமான நிலையத்திற்கு, தெய்வேந்திரன் அல்லது மதுரை மீனாட்சி என்று பெயர் சூட்ட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் - விரைவில் விசாரணை
என்எல்சி சுரங்க நுழைவுவாயிலில் விடுதலை சிறுத்தைக் கட்சியினர் பாஜகவினரைக் கண்டித்தும், விஜய்க்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி : நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ. சந்திரா பிரியங்கா வெற்றி செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம்.
* சந்திரா பிரியங்கா வெற்றியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி
மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் நெய்வேலி சுரங்கம் முன்பு தடியடி.
பாஜக போராட்டத்தை தொடர்ந்து ஏராளமான விஜய் ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு
ரசிகர்களை கலைக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லேசான தடியடி
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை தவிர்க்க தேர்வர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் - டி.என்.பி.எஸ்.சி.
ஆறு புதிய விதிகளை உருவாக்கி டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
முறைகேடுகளை முன்கூட்டியே அறிய உயர் தொழில்நுட்பத் தீர்வு வரும் தேர்வுகளில் நடைமுறைப்படுத்தப்படும்
3 தேர்வு மையங்களை தேர்வு செய்யலாம் - தேர்வர்களுக்கான மையங்களை தேர்வாணையமே ஒதுக்கீடு செய்யும்
தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள் நகல்களை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் - டி.என்.பி.எஸ்.சி.
கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் விவரம் அன்றைய தினமே இணையதளத்தில் வெளியிடப்படும் - டி.என்.பி.எஸ்.சி.
குரூப் -4 தேர்வில் 484 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
இறுதி செய்யப்பட்டுள்ள 9882 காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் - டிஎன்பிஎஸ்சி
நெய்வேலி நிலக்கரி சுரங்க வளாகத்தில் விஜய்யின் மாஸ்டர் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அங்கு திரண்ட பாஜகவினர், என்எல்சியில் ஷூட்டிங் நடத்தக் கூடாது என்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து, விஜய் ரசிகர்கள் பலரும் அங்கு குவியத் தொடங்கியுள்ளனர்.
அதிமுக ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழு முதல் உதாரணமான குரூப் 1 தேர்வு ஊழல்களை மூடி மறைத்து, ஆளும்கட்சிக்கு ஆதரவான அடாவடி நபர்களைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.
உலக மகா யோக்கியர் போலப் பேசும் அமைச்சர் ஜெயக்குமார், உண்மைக் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவாரா?
தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு
டெல்லி உயர் நீதிமன்றத்தின் 7 நாள் அவகாசத்திற்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தல்
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு - இடைத்தரகர் ஜெயகுமாருக்கு 7 நாள் போலீஸ் காவல் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
போலீஸ் காவலில் அனுப்ப வேண்டாம் என ஜெயக்குமார் கதறி அழுத நிலையில் உத்தரவு
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான நடிகர் ரஜினியின் கருத்து அவரது உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் ராஜகணபதி கோவில் அருகே கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். குடியுரிமை திருத்த சட்டத்தை ரஜினி ஆதரிப்பார் என தாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.
மக்களவையில் தன்னை தாக்கிய பாஜக எம்பிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம்
* கொலை மிரட்டல் விடுத்த பிரஜ் பூஷன் சிங் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதம்
விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்எல்சி சுரங்கம் 2ன் முன்பு பாஜகவினர் போராட்டம்
* சுரங்கத்தில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கோவை சுந்தராபுரம் பகுதியில், வெல்டிங் வேலை செய்து வருபவர் முத்துக்குமார், இவரது மனைவி முல்லைக்கொடி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். முத்துக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 7ஆம் வகுப்பு படிக்கும் அவர்களது மகள், பெற்றோரிடம் சண்டை வேண்டாம் என பலமுறை கூறியும், இருவரும் கேட்காமல் இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்திருந்த, மகள் நந்தினி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இன்று கேரள அமைச்சரவையில், அம்மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசாக் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த முகப்பு பக்கத்தில் மகாத்மா காந்தி கொல்லப்பட்டதை காட்சிப்படுத்தும் வண்ணப்படம் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றது செல்லாது என திருமாவளவன் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் முருகுமாறனின் வெற்றி செல்லத்தக்கது என்று கூறி திருமாவளவனின் வழக்கினை தள்ளுபடி செய்து அறிவித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
ஊட்டியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற மத்திய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கே இருந்த பழங்குடி சிறுவனை அழைத்து செருப்பினை அகற்ற கோரினார். அமைச்சரின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, சிறுவனோ காவல்துறையிடம் புகார் அளித்தான். இந்நிலையில் அமைச்சர் அச்சிறுவனின் குடும்பத்தாரிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். இன்று மாலைக்குள் புகார் வாபஸ் பெறப்படும் என்று அந்த சிறுவனின் தாய் அறிவித்துள்ளார்.
2ஜி வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் மேல் முறையீட்டு மனு மீதான விசாராணை மார்ச் மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.
பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை ஒன்றினை ரூ. 50 ஆயிரம் கோடி முதலீட்டில் கடலூரில் அமைக்க ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு தூத்துக்குடியில் ரூ.49,000 கோடி மதிப்பில் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மூலங்குடியில் உள்ள விளைநிலம் வழியே கச்சா எண்ணெய் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் விளைநிலங்கள் கடுமையாக சேதாரம் அடைந்துள்ளது. விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், முறையாக இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை
தமிழக அரசு மது விலையை உயர்த்தியதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 2500 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.
சபரிமலை ஆபரணங்கள் ராஜா குடும்பத்திடம் இருந்தாலும் கடவுளுக்கு சொந்தமானது தான். எனவே சபரிமலை ஆபரணங்கள் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ராமச்சந்திர நாயரை நியமனம் செய்து அறிவித்தது உச்ச நீதிமன்றம்.
குரூப் 1 தேர்வில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகளும் வெளிச்சத்திற்கு வர வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தன்னுடைய காலணியை அகற்ற பழங்குடி சிறுவனை பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் அந்த சிறுவன் காவல்துறையில் புகார் அளிக்க, ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அந்த சிறுவனை அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் அமைச்சர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் ஹாசன் “தமிழக மக்கள் அனைவரும் தங்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்த வேண்டும்” என ட்வீட் செய்துள்ளார். மேலும் 9 மற்றும் 10 வகுப்புகளில் பள்ளிப் படிப்பை முடிக்காமல் வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இது எதிர் காலத்திற்கு ஆபத்தானது என்றும் ட்வீட் செய்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலை மீதான முடிவை ஆளுநர் சுதந்திரமாக எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 7 பேரின் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கடிதத்தை 2018ம் ஆண்டே நிராகரித்து விட்டதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. சட்டவிரோத காவலில் இருப்பதாக கூறிய நளினியின் புகார் விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்றும் அறிவிப்பு.
2016ம் ஆண்டு முதல் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
நாங்கள் படிக்கும் காலத்தில் தரையில் அமர்ந்து தான் படித்தோம். ஆனால் தற்போது மேஜைகள் போன்ற வசதிகள் உங்களுக்கு உள்ளது. நீங்களும் இது போன்று உயர் பதவிக்கு வரவேண்டும் என்று மதுரையில் மாணவர்கள் மத்தியில் உரையாடி வருகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பதற்கு அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார். மேலும்
ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் வருமான வரித்துறை பிரச்சனையை தவிர்க்கலாம் என்றும் பேசியுள்ளார் அவர்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்ய முயன்று கைதானவர் ஒப்பந்த பணியாளர் கௌரி. அவரை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது அம்மருத்துவமனை நிர்வாகம். இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 106.76 அடியாகவும் நீர் இருப்பு - 73.88 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து - 116 கனஅடிகள் மற்றும் நீர் வெளியேற்றம் - 1250 கனஅடிகளாகும்.
பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் குறித்த நிலை என்ன? மாநில தகவல் ஆணையம் கேள்வி. 2000ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பள்ளி மாணவிகளுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையுடன் கல்விதுறை 13ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அதிக அளவில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் தேர்வர்கள் வெற்றி பெற அதன் பின்னால் இருந்து ஒவ்வொரு மர்ம செய்திகளும் வெளியாகி வருகிறது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் தலா 10 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளது சித்தாண்டியிடம் சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.