Tamil Nadu Weather Forecast : ”தமிழகம், புதுச்சேரியில் வெயில் காரணமாக நீடித்து வரும் வெப்ப சலனத்தால், வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அதனால், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Advertisment
தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!<>/strong
இதற்கிடையே நேற்று காலை வடபழனி , அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு, அண்ணா நகர், அரும்பாக்கம், புரசைவாக்கம், கீழ்பாக்கம், சேத்துபட்டு, ஸ்டெர்லிங் ரோடு, தேனாம்பேட்டை, மந்தைவெளி, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. வாரத்தின் தொடக்க நாளில் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.