Tamil News Updates : இன்றைய வானிலை, அரசியல் அறிக்கைகள், முக்கிய தலைவர்களின் கருத்துகள், பயணங்கள், அறிவிப்புகள், தேர்வு முடிவுகள் போன்ற அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
நேற்று வெளியான நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுனர். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும் இம்முறை நீட் தேர்வு நடத்தப்பட்டதிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் பதிவாகின.
Live Blog
Breaking News in Tamil : இன்று நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, "ஜெயலலிதா இருந்த போது அதிக இடங்களில் போட்டியிட்டதால் அதிக வாக்கு சதவிகிதம் பெற்றோம். இப்போது குறைந்த இடங்களில் போட்டியிட்டதால் அது குறைந்துள்ளது. மும்மொழிக் கொள்கையை நான் என்றுமே ஆதரிக்கவில்லை. இரு மொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது" என்றார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். நீட் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்ததால் அரசியல் கட்சியினர் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.
இளம் மாணவர்களை தற்கொலைகளில் இருந்து காக்கும் விதமாக நீட் தேர்வினை திரும்பப் பெற வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணா சாமி. நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவிகளின் தற்கொலை செய்தி வேதனை அளிப்பதாகவும் புதுவை முதல்வர் கருத்து.
தமிழகத்திற்கு நீட் அவசியமில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்
நீட் தேர்வு வேண்டாம் என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாகவே இருக்கின்றோம். ஆனால் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு கட்டாயம் என்பதால் வேறு வழி இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக எதிர்கட்சிகள் பேசி வருகின்றனர் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்ந்து ராகுல் காந்தியே நீடிக்க வேண்டும் என்று திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கருத்து. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பான ஒன்று என்றும் கருத்து.
பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் மற்றும் புத்தகங்கள் இம்மாத இறுதிக்குள் அளிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் இந்தியாவே வியக்கும் வகையில் புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
RTE : ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் சட்டமான RTE சட்டத்தின் கீழ் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு ஏழை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 25% இடஒதுக்கீட்டினை விட குறைந்த விண்ணப்பங்களையே பெற்ற 3000 பள்ளிகளில் தகுதியுடைய மாணவர்கள் அனைவருக்கும் இடம் தரலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதிக விண்ணப்பங்களைப் பெற்ற பள்ளிகளில் 90 ஆயிரம் இடங்களுக்கான குலுக்கல் முறை தேர்வு இன்று நடைபெறுகிறது.
முதல்வரின் சமூகவலைதளப் பதிவு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது என்றும், பிற மாநிலங்களில் தமிழ் மொழி ஒலிக்க வேண்டும் என்றும் நல்லெண்ண அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்தாகும் அது என்றும் கூறியுள்ளார். எந்த வடிவிலும் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். மொழி குறித்து அனைவருக்கும் ஒரு மித்த கருத்து இருக்க வேண்டும் என்றும் இருமொழிக் கொள்கையில் இருந்து என்றும் பின்வாங்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கரூர், சேலம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை பெய்துள்ளதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போன்று கேரளாவில் உள்ள எர்ணாகுளத்திலும் நல்ல மழை பெய்துள்ளது.
கேரள தமிழக எல்லையில் அமைந்துள்ள தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, உதகை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளைக் கொடுக்கப்போகிறார்கள்?
— TTV Dhinakaran (@TTVDhinakaran) 6 June 2019
அமமுக கட்சியின் தலைவர் தினகரன் நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்த மாணவிகளுக்காக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகின்றது இந்த நீட் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மாணவச்செல்வங்களின் மருத்துவ கனவில் மண்ணள்ளி போடும் நீட் தேர்வில் தோல்வியடைந்த அன்பு மாணவிகள் திருப்பூர் ரிதுஸ்ரீ,பட்டுக்கோட்டை வைஸ்யா ஆகியோர் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வேதனையில் மனம் விம்முகிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) 6 June 2019
இவர்களின் மரணம் மேலும் வருத்தம் அளிக்க கூடியதாக இருக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தன்னுடைய ட்வீட்டில் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு தோல்வியால்,தற்கொலை செய்து கொண்ட ரிதுஸ்ரீ, வைஷியா மரணம் இதயத்தை நொறுக்கும் செய்தி!
கூட்டாட்சித் தத்துவத்தின் கீழ் செயல்படும் இந்தியாவில், நீட் விலக்கு எனும் மாநில அரசின் உணர்வுக்கு மதிப்பளிப்பது,மத்திய அரசின் அரசியல் சட்டக் கடமை என்பதை பிரதமர் இப்போதாவது உணர வேண்டும். pic.twitter.com/VAgyrjEj4l
— M.K.Stalin (@mkstalin) 5 June 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights