முக்கிய செய்திகள் Updates : ‘இரு மொழிக் கொள்கையில் அதிமுக அரசு உறுதி’ – முதல்வர் பழனிசாமி

Latest News in Tamil : நீட் தேர்வு முடிவுகள், தென்மேற்கு பருவமழை, சென்னை வானிலை, பெட்ரோல் டீசல் விலை என அனைத்து தகவல்களும் உடனுக்குடன்

By: Jun 6, 2019, 8:53:07 PM

Tamil News Updates : இன்றைய வானிலை, அரசியல் அறிக்கைகள், முக்கிய தலைவர்களின் கருத்துகள், பயணங்கள், அறிவிப்புகள், தேர்வு முடிவுகள் போன்ற அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

நேற்று வெளியான நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுனர். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும் இம்முறை நீட் தேர்வு நடத்தப்பட்டதிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் பதிவாகின.

 

Live Blog
Breaking News in Tamil : இன்று நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள
19:34 (IST)06 Jun 2019
இரு மொழிக் கொள்கையில் உறுதி - முதல்வர்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, "ஜெயலலிதா இருந்த போது அதிக இடங்களில் போட்டியிட்டதால் அதிக வாக்கு சதவிகிதம் பெற்றோம். இப்போது குறைந்த இடங்களில் போட்டியிட்டதால் அது குறைந்துள்ளது. மும்மொழிக் கொள்கையை நான் என்றுமே ஆதரிக்கவில்லை. இரு மொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது" என்றார்.

19:00 (IST)06 Jun 2019
விரைவில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு

ஜூன் 24க்குள் 6 இடங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் ஆணையம் இறுதிக்கட்ட ஆலோசனை.

18:20 (IST)06 Jun 2019
மெரீனா போராட்டம்

மெரினா கடற்கரையில் போராட்டங்களோ, பொதுக்கூட்டங்களோ நடத்த கூடாது என்ற உத்தரவை பின்பற்ற அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

17:52 (IST)06 Jun 2019
மேம்பாலம் திறப்பு விழா

சேலத்தின் புதிய அடையாளமாக "ஈரடுக்கு மேம்பாலம்" - நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

17:20 (IST)06 Jun 2019
ஓ.பி.ஆர் உறுதி

தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத், அத்தொகுதி மக்களுக்கு இன்று தனது நன்றியைத் தெரிவித்தார். அப்போது தமிழக நலனுக்காக தான் தொடர்ந்து குரல் கொடுப்பதாக உறுதியளித்தார்.

16:39 (IST)06 Jun 2019
புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஜூன் 22ல் விவாதிப்பதற்காக அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு

16:39 (IST)06 Jun 2019
புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஜூன் 22ல் விவாதிப்பதற்காக அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு

16:27 (IST)06 Jun 2019
முதல்வர் நிதியுதவி

புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்கள் அரியலூர் சிவச்சந்திரன், சவலப்பேரி சுப்ரமணியன் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதியுதவி வழங்கினார். 

14:47 (IST)06 Jun 2019
நீட் விவகாரம் : மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹருல்லா கருத்து

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். நீட் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்ததால் அரசியல் கட்சியினர் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.

14:32 (IST)06 Jun 2019
இளம் மாணவர்களை காக்க நீட் தேர்வினை திரும்பப் பெற வேண்டும் - புதுச்சேரி முதல்வர்

இளம் மாணவர்களை தற்கொலைகளில் இருந்து காக்கும் விதமாக நீட் தேர்வினை திரும்பப் பெற வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணா சாமி. நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவிகளின் தற்கொலை செய்தி வேதனை அளிப்பதாகவும் புதுவை முதல்வர் கருத்து.

13:59 (IST)06 Jun 2019
நீட் தேர்வு குறித்து அரசியல் தலைவர்களின் மாறுபட்ட கருத்துகள்

தமிழகத்திற்கு நீட் அவசியமில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்

நீட் தேர்வு வேண்டாம் என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாகவே இருக்கின்றோம். ஆனால் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு கட்டாயம் என்பதால் வேறு வழி இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக எதிர்கட்சிகள் பேசி வருகின்றனர் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

13:55 (IST)06 Jun 2019
நிபா வைரஸ் பரவல்

நிபா வைரஸ் தொற்று : மதுரை அரசு மருத்துவமனையில் 33 படுக்கைகள் கொண்ட தனி தீவிர சிகிச்சைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அம்மருத்துவமனையின் டீன் அறிவித்துள்ளார்.

13:27 (IST)06 Jun 2019
நீட் தோல்வி - மற்றொரு மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவ குப்பத்தில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி மோனிஷா (18) வீட்டில் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12:24 (IST)06 Jun 2019
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டிய 4 லட்சம் நபர்கள் மீது வழக்கு

தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்றும், வண்டியை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவிப்பு.

11:54 (IST)06 Jun 2019
காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்ந்து ராகுல் காந்தியே நீடிக்க வேண்டும் - திருநாவுக்கரசர்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்ந்து ராகுல் காந்தியே நீடிக்க வேண்டும் என்று திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கருத்து. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பான ஒன்று என்றும் கருத்து.

11:48 (IST)06 Jun 2019
இனி தமிழகத்தில் 24 மணி நேரமும் வணிக வளாகங்கள் இயங்கும் - தமிழக அரசு அரசாணை

கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி வழங்கியது தமிழக அரசு. தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக இந்த முடிவுகள் எட்டப்பட்டதாக அறிவிப்பு. 

11:45 (IST)06 Jun 2019
கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் புதிய அறிவிப்புகள்

பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் மற்றும் புத்தகங்கள் இம்மாத இறுதிக்குள் அளிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் இந்தியாவே வியக்கும் வகையில் புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

11:06 (IST)06 Jun 2019
நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வினை ரத்து செய்ய மத்திய அரசு உடனே முன்வர வேண்டும் பாமக இளைஞரணியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

11:02 (IST)06 Jun 2019
பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்த இரண்டு புதிய அமைச்சரவை குழுக்கள்

பொருளாதார மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த மோடி தலைமையில் இரண்டு புதிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. செவ்வாய் கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 

10:27 (IST)06 Jun 2019
RTE Admission : 90 ஆயிரம் இடங்களுக்கு குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு

RTE : ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் சட்டமான RTE சட்டத்தின் கீழ் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு ஏழை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.  இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 25% இடஒதுக்கீட்டினை விட குறைந்த விண்ணப்பங்களையே பெற்ற 3000 பள்ளிகளில் தகுதியுடைய மாணவர்கள் அனைவருக்கும் இடம் தரலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதிக விண்ணப்பங்களைப் பெற்ற பள்ளிகளில் 90 ஆயிரம் இடங்களுக்கான குலுக்கல் முறை தேர்வு இன்று நடைபெறுகிறது.

10:08 (IST)06 Jun 2019
Three Language Policy - முதல்வரின் ட்வீட் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

முதல்வரின் சமூகவலைதளப் பதிவு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது என்றும், பிற மாநிலங்களில் தமிழ் மொழி ஒலிக்க வேண்டும் என்றும் நல்லெண்ண அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்தாகும் அது என்றும் கூறியுள்ளார். எந்த வடிவிலும் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.  மொழி குறித்து அனைவருக்கும் ஒரு மித்த கருத்து இருக்க வேண்டும் என்றும் இருமொழிக் கொள்கையில் இருந்து என்றும் பின்வாங்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். 

10:04 (IST)06 Jun 2019
மக்களுக்கு எதிரான திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் காமராஜ்

மக்கள் எதிர்க்கும் எந்த திட்டங்களையும் அனுமதிக்க மாட்டோம். ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும் சரி என்று அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

09:52 (IST)06 Jun 2019
எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ் படிக்க நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் - அமைச்சர் விஜய பாஸ்கர்

நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து நாளை முதல் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்யலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  அறிவிப்பு

09:40 (IST)06 Jun 2019
Southwest Monsoon : கரூர் மற்றும் சேலம் பகுதியில் நேற்று நல்ல மழை

கரூர், சேலம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை பெய்துள்ளதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போன்று கேரளாவில் உள்ள எர்ணாகுளத்திலும் நல்ல மழை பெய்துள்ளது. 

மேலும் படிக்க : கரூர் சேலத்தில் வெளுத்து வாங்கிய மழை

09:38 (IST)06 Jun 2019
Nipah Virus Precautionary steps : கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நிபா பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை

கேரள தமிழக எல்லையில் அமைந்துள்ள தேனி, திண்டுக்கல், நெல்லை,  கன்னியாகுமரி, உதகை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

09:30 (IST)06 Jun 2019
பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகள் ? தினகரன் கேள்வி
09:30 (IST)06 Jun 2019
Neet Results 2019 TTV Dhinakaran Tweet : இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகின்றது இந்த நீட்

அமமுக கட்சியின் தலைவர் தினகரன் நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்த மாணவிகளுக்காக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகின்றது இந்த நீட் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழக மாணவச்செல்வங்களின் மருத்துவ கனவில் மண்ணள்ளி போடும் நீட் தேர்வில் தோல்வியடைந்த அன்பு மாணவிகள் திருப்பூர் ரிதுஸ்ரீ,பட்டுக்கோட்டை வைஸ்யா ஆகியோர் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வேதனையில் மனம் விம்முகிறது.

09:27 (IST)06 Jun 2019
ரிதுஸ்ரீ, வைஷியா மரணம் இதயத்தை நொறுக்கும் செய்தி - முக ஸ்டாலின் ட்வீட்

இவர்களின் மரணம் மேலும் வருத்தம் அளிக்க கூடியதாக இருக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தன்னுடைய ட்வீட்டில் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வில் தோல்வியடைந்த ரிதுஸ்ரீ மற்றும் வைஷியா என்ற இரண்டு பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Web Title:Tamil news live updates breaking news headlines latest news in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X