Advertisment

Tamil News Today : சென்னையில் 22 ஆம் தேதி முதல் நிவாரண உதவி - தமிழக அரசு அறிவிப்பு

chennai lockdown : முகக்கசவம் இல்லாமல் ஒரே லாரியில் துக்கம் விசாரிப்பதற்கு சென்ற 90 பேரிடம் அபராதம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu News Today Live Updates

Tamil News Today chennai lockdown: சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்ட 15 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் அரிய வகை தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது கூடுதல் தகவல்.

Advertisment

கொரோனா பரவலின் காரணமாக ஈரோட்டில் 2020ஆம் ஆண்டிற்கான புத்தக திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளி, முகக்கசவம் இல்லாமல் ஒரே லாரியில் துக்கம் விசாரிப்பதற்கு சென்ற 90 பேரிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

ஜிசிசி ஆப் உடன் மாநகராட்சி ஊழியர்கள் இனி வீட்டுக்கு வருவார்கள்!

மதுபோதையில் பெண் காவலரிடம் தகராறில் ஈடுபட்ட பொன்னமராவதி திமுக ஒன்றிய செயலாளர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனாம்பேட்டையில் 4 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று.சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,364 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஊரடங்கு மீறல் காரணமாக தமிழகத்தில் இதுவரை ரூ.12.87 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,45,233 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,74,087 வாகனங்கள் பறிமுதல்; 5,97,863 வழக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னையில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 22 பேர் உயிரிழப்பு . சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 404ஆக உயர்வு என தகவல் வெளியாகியுள்ளது.

Live Blog

Tamil News Today Live chennai : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    19:00 (IST)16 Jun 2020

    உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள்: கமல்ஹாசன்

    உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    18:43 (IST)16 Jun 2020

    சென்னையில் 22 ஆம் தேதி முதல் நிவாரண உதவி

    சென்னையில் கொரோனா ஊரடங்கு நிவாரணம் வரும் 22 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    18:16 (IST)16 Jun 2020

    1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் மேலும் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  48,019 ஆக உயர்ந்துள்ளது.

    சென்னையில் மட்டும் 919 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு பிறகு, சென்னையில் ஆயிரத்திற்கு குறைவாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    17:42 (IST)16 Jun 2020

    3000 வெண்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பு

    இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மூலம் வெண்டிலேட்டர்கள் தயாரிக்க அரசு சார்பில் ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் பெல் (BELL) நிறுவனத்தில் 30,000 வெண்டிலேட்டர்கள், மாருதி சுஜுக்கி நிறுவனத்தில் 10,000 வெண்டிலேட்டர்கள், AMTZ நிறுவனத்தில் 13,500 மற்றும் ஜோதி சி,என்,சி நிறுவனத்தில் 5,000 வெண்டிலேட்டர்களையும் உருவாக்க ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் இந்த நிறுவனங்கள் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள 3,000 வெண்டிலேட்டர்கள் தற்போது மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

    17:07 (IST)16 Jun 2020

    கொரோனா உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

    ஊரடங்கினால் கொரோனாவால் ஏற்படவிருந்த உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. மீட்பு விகிதம் இந்தியாவில் 50% விட அதிகமாக உள்ளது. கொரோனா காரணமாக ஏற்படும் மரணங்கள் கவலை அளிக்கிறது பொது மக்கள் முக கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாநில முதல்வர்களுடனான கலந்துரையாடலில், பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

    15:08 (IST)16 Jun 2020

    12 நாள் ஊரடங்கு நிவாரண நிதியாக 1,000 ரூபாய் வீடு தேடி வழங்க முதல்வர் உத்தரவு

    கொரோனா ஊரடங்கு நிதி ரூ.1000 பணத்தை வீடு தேடிச் சென்று வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். வரும் 22ந் தேதி முதல் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு தேடிச் சென்று ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    13:49 (IST)16 Jun 2020

    ஆதிரேலியா கிரிக்கெட் அமைப்பு தலைமைச் செயல் அதிகாரி பதவி விலகினார்.

    ஆதிரேலியா கிரிக்கெட் அமைப்பு தலைமைச் செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் பதவி விலகினார் . நிக் ஹாக்லி அப்பதவிக்குத் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    13:49 (IST)16 Jun 2020

    தில்லி லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனையில், அமித் ஷா ஆய்வு

    தில்லி லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு மேற்கொண்டார். கொரோனா சிறப்பு வார்டுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துமாறு தலைமைச் செயலாளருக்கு அமித் ஷா அறிவுறித்தினர். 

    13:46 (IST)16 Jun 2020

    சீன எல்லையில் மோதல்!

    இந்தியா – சீனா எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று இரவு சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 45 வயது இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் என 3 பேர் மரணமடைந்தனர்.லடாக் எல்லையில் என்ன நடந்தது என்பது பற்றி இந்திய ராணுவம் மதியம் 2 மணிக்கு விளக்கமளிக்கிறது . 

    13:39 (IST)16 Jun 2020

    முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!

    திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்ட காணொலியில் முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார் * சர்.பி.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம், தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்திற்கும் முதல்வர் இன்று   காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

    13:35 (IST)16 Jun 2020

    கல்லணையில் நீர் திறக்கப்பட்டது!

    காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்காக கல்லணையில் நீர் திறக்கப்பட்டது.  கல்லணையில் திறப்பால் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    13:29 (IST)16 Jun 2020

    ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க வழக்கு!

    துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கை 15 நாட்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். தி.மு.க. கொறடா சக்கரபாணி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைப்பெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு இதுக் குறித்த விவாதத்தை கேட்ட பின்னர், சட்டப்பேரவை தலைவர் ஏன் இன்னும் முடிவு செய்யவில்லை? என கேள்வி எழுப்பினர். சபாநாயகரை செயலாற்றச் சொல்லுங்கள்  என அறிவுருத்தி அடுத்த 15 நாட்களுக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். 

    12:51 (IST)16 Jun 2020

    முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

    கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு கட்ட தளர்வுளுடன், ஐந்தாம் கட்ட ஊரடங்கு வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று செவ்வாய் (16.6.20)மற்றும் நாளை புதன் கிழமைகளில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி கா​ட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.  மதியம் 3 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    12:46 (IST)16 Jun 2020

    சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!

    ஜூலை மாதம் நடைபெறவுள்ள சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்பி திருச்சி சிவா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், சிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்ய மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

    12:44 (IST)16 Jun 2020

    பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!

    பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம்  எழுதியுள்ளார். பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துவதுடன் கூடுதல் சுமையையும் ஏற்படுத்துகிறது தற்போதைய விலை உயர்வை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது எனவும் சோனியா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

    12:22 (IST)16 Jun 2020

    50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கு!

    மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி அதிமுக, திமுக, பாமக கட்சிகள் தொடர்ந்த வழக்கில் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  

    12:19 (IST)16 Jun 2020

    டெண்டர் வழங்கியதில் முறைகேடு!

    ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு என புகார். ரூ.1950 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்க கோரி திமுக- வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு வரும் 18ம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

    12:16 (IST)16 Jun 2020

    ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் வழக்கு!

    ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்வதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டப்படுகிறது? என காவல் துறையினரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ளன  எனவும் நீதிபதிகள் கூறினர். இறுதியில், ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு ஜூன் 19க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    12:13 (IST)16 Jun 2020

    எம்எல்ஏ பழனியின் மனைவிக்கும் கொரோனா!

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனியின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பழனி கடந்த வாரம், கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரின் மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    11:32 (IST)16 Jun 2020

    காய்கறி மார்க்கெட் இயங்காது

    ஜூன் 21, 28-ல் திருமழிசை காய்கறி மார்க்கெட் இயங்காது.  ஜூன் 21,28 ஆகிய தேதிகளில் எந்தவித தளர்வுமின்றி முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்பதால் திருமழிசை காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிப்பு. இரண்டு நாட்களும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜசேகர் தகவல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

    11:24 (IST)16 Jun 2020

    மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1000!

    மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்துள்ள 13.35 லட்சம் பேர் இதனால் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    Tamil News Today Live : ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகள் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,667 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது கொரோனா தொற்றில் இருந்து 24 மணி நேரத்தில் 10,215 பேர் குணமடைந்துள்ளனர். 380 பேர் உயிரிழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனாவால் திண்டாடும் சென்னை - தலைநகருக்கு படையெடுத்த மருத்துவர்கள்

    டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கடும் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது.

    கல்லணைக்கு குறித்த நேரத்தில் காவிரி தண்ணீர் வராததால் நீர் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.காலை 11 மணிக்கு தண்ணீர் திறப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மதியம் 1 மணிக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் என ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார்.

    கொரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்யாமல் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகள் 32 லட்சம் பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கி உள்ளதாக கூறினார். சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஒத்துழைக்க வேண்டும் என்றார். பிரதமர் மோடியின் சிறப்பான செயல்பாட்டால், உலக நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பரவல் குறைவு என்றும் முருகன் கூறினார்.

    “அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

    Tamilnadu Corona Coronavirus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment