Advertisment

Tamil News highlights: புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்

Tamil Nadu News, Tamil News LIVE, Japan Earthquake PM Modi visit Tamil Nadu Chennai Rains today – 02 January 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

Tamil News

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் திங்கள் இரவு (ஜன.1) 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டின் இஷிகாவா மாகாணத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கடற்கரை பகுதியில் சுனாமி அலைகள் எழுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று ஒரே நாளில் 155 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை 3 ரிக்டர் அளவுக்கு மேலானவை என அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சாலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் சிரமம் இருப்பதாக பிரதமர் ஃபுமியோ கிஷிடோ வருத்தம்

  • Jan 02, 2024 21:53 IST
    தடை செய்யப்பட்ட விலங்குகளை கொன்ற வழக்கு : புகார் குறித்து அமலாக்கத்துறை விளக்கம்

    ஆத்தூரில் விவசாயிகள் இருவருக்கு சாதி பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக, தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள காட்டு விலங்குகளை கொன்று விட்டதாக வனத்துறையின் தரப்பில் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பியதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது வனத்துறை அதிகாரிகள் அனுப்பிய புகாரில் சாதி பெயரை குறிப்பிட்டு அனுப்பி உள்ளதாகவும் தகவல்



  • Jan 02, 2024 20:21 IST
    சாலை விபத்து - குழந்தை உட்பட 3 பேர் பலி

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தேவாரப்பள்ளி நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து விபத்தில் 19 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு - 8 பேர் படுகாயம்



  • Jan 02, 2024 19:42 IST
    தமிழகத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வராது : பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர்

    வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது. பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சென்னையில் இருந்தே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தகவல் தெரிவித்துள்ளார்.



  • Jan 02, 2024 18:53 IST
    தச்சங்குறிச்சியில் வரும் ஜனவரி 6ம் தேதி ஜல்லிக்கட்டு

    புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் வரும் ஜனவரி 6ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு வரும் 4ம் தேதி டோக்கன் வழங்கப்பட உள்ளதாக விழா குழுவினர் தகவல்!



  • Jan 02, 2024 18:20 IST
    சபரிமலை: ஜனவரி 10 முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்தம்

    சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஜனவரி 10 முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது



  • Jan 02, 2024 17:50 IST
    லைகா பட நிறுவனம் மீது நடிகர் விஷால் வழக்கு

    லைகா பட நிறுவனத்தின் ரூ 5.24 கோடி சொத்துக்களை முடக்கக் கோரி நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு லைகா நிறுவனம் ஜனவரி 19க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Jan 02, 2024 17:28 IST
    ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்

    ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்!

    இணைப்புக்கு பிறகு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 



  • Jan 02, 2024 17:26 IST
    டோக்கியோ விமான விபத்தில் 5 பேர் பலி

    டோக்கியோ விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானத்தின் மீது பயணிகள் விமானம் மோதியதில் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்



  • Jan 02, 2024 17:20 IST
    மூன்று பேருக்கு பந்து வீசுவது மிக கடினம் - நேதன் லயன்

    விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், ஏ.பி.டிவில்லியர்ஸ் இவர்கள் மூவருக்கும் பந்து வீசுவது மிக கடினம் என ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் தெரிவித்துள்ளார்



  • Jan 02, 2024 17:07 IST
    டி.என்.பி.எஸ்.சி பொறியியல் பணிக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும்; இ.பி.எஸ் வலியுறுத்தல்

    மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு வரும் ஜனவரி 6 மற்றும் 7ம் தேதி நடக்க உள்ள டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்



  • Jan 02, 2024 16:54 IST
    7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Jan 02, 2024 16:39 IST
    சொத்துவரி பெயர் மாற்ற கட்டணம் உயர்வா? - இ.பி.எஸ் கண்டனம்

    சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை ரூ. 20 ஆயிரமாக உயர்த்த திமுக அரசு முடிவு செய்துள்ளதாக வரும் செய்திகள் கண்டனத்திற்கு உரியது. கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்



  • Jan 02, 2024 16:18 IST
    நாளை காங்கிரஸ் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்

    டெல்லியில் நாளை காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. ராகுல்காந்தியின் 'பாரத் நியாய யாத்திரை' தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது



  • Jan 02, 2024 16:08 IST
    ஜப்பானில் தீப்பிடித்து எரிந்த விமானம்; அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்பு

    ஜப்பானின் டோக்கியோவில் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுதளத்தில் கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதியதால் தரையிறங்கிய விமானம் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



  • Jan 02, 2024 16:01 IST
    தென் கொரியா எதிர்கட்சி தலைவருக்கு கத்திக்குத்து

    தென் கொரியா எதிர் கட்சி தலைவர் லீ ஜே மியுங்கை, செய்தியாளர் சந்திப்பின் போது மர்மநபர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது



  • Jan 02, 2024 15:37 IST
    பாலியல் தொல்லை; அ.ம.மு.க பிரமுகருக்கு 7 ஆண்டு சிறை

    திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கல்லூரி தாளாளரும் அமமுக பிரமுகருமான ஜோதி முருகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது



  • Jan 02, 2024 15:17 IST
    தமிழகத்தில் 8ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்

    தமிழகத்தில் 8ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Jan 02, 2024 15:05 IST
    தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் புதிய சக்தியை நிரப்பிச் செல்கிறேன் - மோடி

    தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் புதிய சக்தியை நிரப்பிச் செல்கிறேன் என திருச்சியில் பிரதமர் மோடி பேச்சு



  • Jan 02, 2024 14:40 IST
    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: நடிகர் ரஜினி-க்கு அழைப்பு!

    ஆர்.எஸ்.எஸ் தென் பாரத அமைப்பாளர் செந்தில் குமார், பா.ஜ.க-வின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து  அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர். 

     



  • Jan 02, 2024 14:38 IST
    நெல்லை மாவட்டத்தில் 92% நிவாரணம் 

    நெல்லை மாவட்டத்தில் வெள்ளபாதிப்பு பகுதிகளில் நிவாரணமாக 92% வழங்கப்பட்டுள்ளது என்றும், கடைசி நாளாக நாளைய மாலை 5 மணி வரை தொடர்ந்து நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 



  • Jan 02, 2024 14:37 IST
    சென்னையில் வருமான வரித்துறை சோதனை

    சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. 

    மேலும் மதுரை, ஈரோடு, கோவை, சேலம், விருதுநகர் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. 



  • Jan 02, 2024 14:35 IST
    சபரிமலை ஸ்பாட் புக்கிங் ஜன.10 முதல் நிறுத்தம் 

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்வதால் முன்பதிவை உடனடியாக நிறுத்த திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அங்கேயே ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்யும் முறை ஜனவரி 10 முதல் நிறுத்தப்படுகிறது.



  • Jan 02, 2024 13:53 IST
    'தமிழ் மொழியை புகழாமல் என்னால் ஒருபோதும் இருக்க முடியாது': மோடி பேச்சு 

    ”எப்போதெல்லாம் தமிழ்நாடு வருகிறேனோ, அப்போதெல்லாம் எனக்குள் ஒரு புதிய சக்தியை நிரப்பிக் கொண்டு செல்கிறேன். எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. அவர்களிடமிருந்து தமிழ் கலாசாராத்தை நான் கற்றுக் கொள்கிறேன்.

    நான் எங்கு சென்றாலும் தமிழ்நாட்டின் கலாசாரம் குறித்து பேச மறப்பதில்லை. எனக்கு தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் குறித்து உற்சாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. “தமிழ் மொழியை புகழாமல் என்னால் ஒருபோதும் இருக்க முடியாது" என்று திருச்சியில் பிரதமர் மோடி பேசினார். 



  • Jan 02, 2024 13:29 IST
    விஜயகாந்த் மறைவுக்கு மோடி இரங்கல்

    "சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான். அனைத்தையும் விட தேசத்தை அதிகம் நேசித்தவர் விஜயகாந்த். 

    விஜயகாந்த் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி கூறினார். 



  • Jan 02, 2024 13:11 IST
    சேலம்: துணைவேந்தருக்கு ஜாமீன் 

     

    சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு ஜாமின் வழங்கியது குறித்து விரிவான் அறிக்கை அளிக்கும்படி, சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Jan 02, 2024 12:54 IST
    விமான நிலைய புதிய முனையம் திறப்பு

    திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ. 1,112 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பிரதமரிடம் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கினார். 

    ஒரே நேரத்தில் 5,500 பயணிகளை கையாளும் வகையில், 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகள் கொண்ட புதிய விமான முனையம் அமைக்கப்பட்டுள்ளது. 



  • Jan 02, 2024 12:52 IST
    மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை

    "சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசின் பங்குப் பகிர்வு நிதியை உடனடியாக வழங்க வேண்டும். சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும்" என்று  பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 



  • Jan 02, 2024 12:48 IST
    ஐகோர்ட் தள்ளுபடி 

     

    நீட் தேர்வு விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பள்ளிக்குழந்தைகளிடம் வற்புறுத்தி கையெழுத்து பெறுவதாக மனுதாரர் கூற, “இக்கால மாணவர்கள் சிறந்த அறிவாளிகள். அவர்களுக்கு அனைத்தும் தெரியும். அவர்கள் விரும்பி கையெழுத்திடுகிறார்கள் என்றால் அதை எப்படி தடுக்க முடியும்” என நீதிபதிகள் பதிலளித்தார். 



  • Jan 02, 2024 12:19 IST
    'வரலாற்றையும் படிக்கும்போது கலாசாரம் வலுப்படும்.': மோடி

    "20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலைக்கழகங்களை தொடங்கினர். பல்கலைக்கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ அப்போதெல்லாம் நாடு வளர்ச்சியடையும். கல்வி என்பது அறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும். மொழியையும், வரலாற்றையும் படிக்கும்போது கலாசாரம் வலுப்படும். புதியதோர் உலகுசெய்வோம் என்ற பாரதிதாசனின் கூற்றுப்படி 2047-ஐ நோக்கி பயணிப்போம். இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவின் திறமையை நமது இளைஞர்கள் உலகுக்கு பறைசாற்றுகிறார்கள்" என்று கூறினார். 



  • Jan 02, 2024 12:19 IST
    'அழகிய தமிழ்நாட்டில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது': மோடி 

    "வணக்கம், எனது மாணவ குடும்பமே... இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாக தமிழகத்திற்கு வந்துள்ளேன். பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது. இளைஞர்களுடன் மற்றும் அழகிய மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவரது பெற்றோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு வரும் முதல் பிரதமர் என்பதில் நான் பெருமைகொள்கிறேன்." என்று கூறினார். 



  • Jan 02, 2024 12:06 IST
    சென்னை புத்தக கண்காட்சி: பணிகள் தீவிரம் 

    47வது சென்னை புத்தக கண்காட்சி நாளை தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை YMCA மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்



  • Jan 02, 2024 12:05 IST
    'புதியதோர் உலகம் செய்வோம்' - மோடி உரை!

     

    'புதியதோர் உலகம் செய்வோம்' என புரட்சி கவிஞர் பாரதிதாசன் வரிகளை மேற்கோள்காட்டி பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். 



  • Jan 02, 2024 12:03 IST
    ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு! 

     

    ஜப்பான் நாட்டில் புத்தாண்டு அன்று நடந்த தொடர் நில நடுக்க சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 



  • Jan 02, 2024 12:00 IST
    பட்டமளிப்பு விழா: ஸ்டாலின் பேச்சு 

     

    "பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி. இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம். மாணவர்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 

    புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 29 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேருங்கள்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



  • Jan 02, 2024 11:39 IST
    பட்டமளிப்பு விழா: பட்டம், பதக்கங்களை வழங்கிய மோடி 

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார். 



  • Jan 02, 2024 11:22 IST
    நீதிக்கட்சி ஆட்சியில் போடப்பட்ட விதை- பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின்

    இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு.

    கல்வியில் சிறந்த எந்த பட்டியல் எடுத்தாலும் அதில் தமிழ்நாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்கள்தான் முதலிடத்தில் இருக்கும்.

    100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில் போடப்பட்ட விதையே, இன்று தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க காரணம்

    - பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் உரை



  • Jan 02, 2024 11:00 IST
    பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி, அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்பு.



  • Jan 02, 2024 10:56 IST
    பிரதமர் மோடிக்கு வரவேற்பு

    Credit: Sun News



  • Jan 02, 2024 10:40 IST
    கனசாவா மற்றும் இஷிகாவா மாகாணங்களில் பேரழிவு

    டோக்கியோ: ஜப்பானை நேற்று தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து கனசாவா மற்றும் இஷிகாவா மாகாணங்களில் பரவலான பேரழிவு ஏற்பட்டுள்ளது.

     



  • Jan 02, 2024 10:35 IST
    பெருங்களத்தூர் அருகே சாலையில் சுற்றித் திரிந்த குட்டி முதலை

    பெருங்களத்தூர் அடுத்த ஆலப்பாக்கத்தில் ஒன்றரை அடி நிளமுள்ள சிறிய முதலை ஒன்று சாலையில் சுற்றித் திரியும் வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

    முழு செய்தியும் படிக்க

    பெருங்களத்தூர் அருகே சாலையில் சுற்றித் திரிந்த குட்டி முதலை- வைரல் வீடியோ

     

     



  • Jan 02, 2024 10:09 IST
    திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி

    பாரதிதாசன் பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விமானம் மூலம் திருச்சி வருகை தந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்



  • Jan 02, 2024 10:03 IST
    திருச்சி வந்தார் மு.க.ஸ்டாலின்

    பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா உள்பட அரசுத் திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • Jan 02, 2024 09:59 IST
    பேருந்துகளில் ₹20 முதல் ₹35 வரை கட்டணம் குறைப்பு

    சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ₹20 முதல் ₹35 வரை கட்டணம் குறைப்பு

    கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது

    கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் ₹460 வரை அதிகபட்சமாக வசூலிக்கப்பட்ட நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அதே பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ₹430 ஆக நிர்ணயம்



  • Jan 02, 2024 09:21 IST
    திருச்சி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டு சென்றார்  மு.க.ஸ்டாலின்

    பிரதமர் மோடி இன்று திருச்சி வரவுள்ள நிலையில் பிரதமரை வரவேற்க உள்ளார் முதல்வர்.



  • Jan 02, 2024 09:21 IST
    மகளிர் கிரிக்கெட்- இன்று 3வது ஒருநாள் போட்டி

    இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. தொடரை ஆஸ்திரேலியா வென்ற நிலையில், ஆறுதல் வெற்றியை பதிவுசெய்ய இந்தியா தீவிரம்



  • Jan 02, 2024 08:55 IST
    அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    - இந்திய வானிலை ஆய்வு மையம்        



  • Jan 02, 2024 08:54 IST
    நாளை முதல் அரையாண்டு தேர்வுகள்

    தூத்துக்குடி: மழை வெள்ள பாதிப்பால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை (03-01-2024) முதல் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு



  • Jan 02, 2024 08:51 IST
    திருச்சியில் இன்று மோடி: நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம்

    பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (ஜன.2) திருச்சி வருவதை முன்னிட்டு அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    திருச்சியில் இன்று மோடி: நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம்

     



  • Jan 02, 2024 08:44 IST
    திருச்சியில் இன்று ஒரே மேடையில் மோடி- ஸ்டாலின்: தொடங்கி வைக்கும் திட்டங்கள் எவை?

    திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (ஜன.2) தமிழகம் வருகிறார்.

    முழு செய்தியும் படிக்க

    திருச்சியில் இன்று ஒரே மேடையில் மோடி- ஸ்டாலின்: தொடங்கி வைக்கும் திட்டங்கள் எவை?



  • Jan 02, 2024 08:12 IST
    புத்தாண்டில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை

    மணிப்பூரின் தெளபால் மாவட்டத்தின் நேற்று மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் பைரன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் சட்டப்படி தண்டிக்கப்படுவர் எனவும் உறுதி.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment