Tamil Nadu: Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Mar 08, 2024 23:29 ISTமகளிர் தினத்தை முன்னிட்டு கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு
சிலிண்டர் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ.100 குறைந்து ரூ.818.50க்கு விற்பனையாக உள்ளது! மகளிர் தினத்தை ஒட்டி கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.100 குறைத்து மத்திய அரசு அறிவிப்பு
-
Mar 08, 2024 21:34 ISTமோடியின் நாடகத்தை பெண்கள் நம்பமாட்டார்கள் : கே.பாலகிருஷ்ணன்
"10 ஆண்டுகள் ஆட்சியில் இன்றைக்குதான் முதல்முறையாக மகளிர் தினம் வருகிறதா? மோடியின் நாடகத்தை பெண்கள் யாரும் நம்பமாட்டார்கள்" என CPIM மாநிலக்குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,கூறியுள்ளார்.
-
Mar 08, 2024 21:32 ISTமகா சிவராத்திரியை முன்னிட்டு காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி: மகா சிவராத்திரியை யொட்டி காரைக்கால் மாவட்டத்தில் நாளை (மார்ச் 09) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு மக்களின் கோரிக்கையை ஏற்று நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவு
-
Mar 08, 2024 20:36 ISTபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய நடவடிக்கை
மகளிர் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முன்னெடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முழுக்க முழுக்கப் பெண்களால் இயக்கப்படும் இந்த பிரத்யேக உதவி எண் மூலம், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்கள் ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது உடனடியாக உதவி மற்றும் ஆதரவு வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
-
Mar 08, 2024 20:25 ISTகாங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் வெளியீடு
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியில் 39 பெயர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது
-
Mar 08, 2024 20:14 ISTபுதுச்சேரி சிறுமி கொலை வழக்கு; மேலும் 12 காவலர்கள் இடமாற்றம்
புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 11 காவலர்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் சில காவலர்களை இடமாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவு!
-
Mar 08, 2024 20:03 ISTஷிமோகா மக்களவை தொகுதி; ஷிவ்ராஜ் குமார் மனைவி போட்டி
கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதியில் கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ் ராஜ்குமாரின் மனைவி கீதா போட்டியிடுகிறார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
Mar 08, 2024 19:33 ISTராகுல் மீண்டும் கேரளத்தில் போட்டி; தொகுதி எது தெரியுமா?
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மீண்டும் வயநாட்டில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 08, 2024 19:31 ISTத.வெ.கழகம் உறுதிமொழி: நடிகர் விஜய் வீடியோ
கட்சியில் சேருவதற்கான செயலியை அறிமுகப்படுத்தி நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
#தமிழகவெற்றிக்கழகம் #TVKMembershipDrive #TVKVijay pic.twitter.com/e4DqN18sn2
— TVK Vijay (@tvkvijayhq) March 8, 2024 -
Mar 08, 2024 18:36 ISTதமிழ்நாடு வந்தார் குடியரசு துணைத் தலைவர்
கோவையில் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஈஷா யோகா மையத்துக்கு வந்தடைந்துள்ளார்.
-
Mar 08, 2024 18:19 ISTநடிகர் பாபி சிம்ஹா வழக்கு; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
நடிகர் பாபி சிம்ஹா தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. -
Mar 08, 2024 17:28 ISTதி.மு.க, வி.சி.க உடன்பாடு: தொல். திருமாவளவன்
“சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிடுவதென திமுகவுடன் இன்று உடன்பாடு உருவானது” என தொல். திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்.
சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில்
— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 8, 2024
விசிக போட்டியிடுவதென
திமுகவுடன் இன்று
உடன்பாடு உருவானது.
கட்சிநலன், கூட்டணி நலன், நாட்டு நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திமுகவின் மூத்த தலைவர்களுடனும், திமுக தலைவருடனும் விரிவாக - மனம் திறந்து கலந்துரையாடல் செய்து, அதனடிப்படையில்
இந்த… pic.twitter.com/ZyvVf8F91C -
Mar 08, 2024 16:53 ISTசிறுமியருக்கு இலவச HPV தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்
விழுப்புரத்தில் உள்ள சிறுமியருக்கு இலவசமாக HPV தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியுள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய் தடுப்பு பரிசோதனை மையத்தில், கருப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கான இலவச எச்.பி.வி தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
Mar 08, 2024 16:37 ISTபெங்களூருவில் குடிநீரில் கார் கழுவுவதற்கு தடை
"கார் கழுவுதல், தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல், வீடு கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது. உத்தரவை மீறுபவர்களுக்கு 75,000 அபராதம் விதிக்கப்படும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்." என்று தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை காரணமாக பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் அறிவித்துள்ளது.
-
Mar 08, 2024 16:36 ISTநூல்களை வெளியே எடுத்துச் செல்ல அனுமதி!
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள நூல்களை படிப்பதற்காக வெளியே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
'நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கை பெற்றவர்கள், நூல்களை வெளியே எடுத்துச் செல்லலாம். 30 நாள்களில் திருப்பி அளிக்க வேண்டுமென்ற அறிவுறுத்தலில் நூல்கள் வழங்கப்படவுள்ளன. 11ம் தேதி முதல் புத்தகங்களை உறுப்பினர்கள் எடுத்துச் செல்லலாம். 2 முறை புதுப்பித்தல் (Renewable) செய்யலாம்' என்று அண்ணா நூற்றாண்டு நூலகம் அறிவித்துள்ளது.
-
Mar 08, 2024 16:34 ISTஔவையார் விருது அறிவிப்பு
'கருக்கு' எனும் தன்வரலாற்றுப் புதினத்திற்காக எழுத்தாளர் பாமா (எ) பாஸ்டினா சூசைராஜ்க்கு தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான ஔவையார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
“மரபுகளை உடைக்கும் தனித்துவமான எழுத்துநடையால் தமிழிலக்கியத்துக்குப் பங்காற்றி, இந்த விருதுக்குத் தேர்வாகி இருக்கும் அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Mar 08, 2024 16:07 IST4 நடமாடும் கட்டளை வாகனங்கள் துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
4 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய (MCCC) வாகனங்களின் செயல்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் 1,030 இடங்களில் நிறுவப்பட்ட 3090 AI ஆல் இயங்கும் CCTV கேமராக்கள், 753 வாகன கண்காணிப்பு சாதனங்கள், 7 வான்வழி கண்காணிப்பு ட்ரோன்களை ஒருங்கிணைப்பதன் மூலம் நகரம் முழுவதும் விரிவான கண்காணிப்பு உறுதி செய்யப்படும்.
-
Mar 08, 2024 16:00 ISTநடிகர் அஜித்குமார் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் - இ.பி.எஸ்
"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்." என்று எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Mar 08, 2024 15:56 ISTஅங்கித் திவாரி ஜாமின் மனு - மார்ச்.16ல் விசாரணை
அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், ஜாமின் மனுவை வரும் 16ம் தேதி உச்சநீதிமன்ற இருநீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது. லஞ்ச புகாரில் தமிழக லஞ்சஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி சிறையில் உள்ளார்
-
Mar 08, 2024 15:55 ISTபொன்முடி மேல்முறையீடு - மார்ச் 11ல் விசாரணை
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் மார்ச் 11ஆம் தேதியே விசாரிக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்து இருந்தார்.
-
Mar 08, 2024 14:42 ISTஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
9 நாட்களாக மறியல் போராட்டங்களை நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் போராட்டம் வாபஸ் முதல்வர் விரைவில் அழைத்து பேசுவார் என நம்புகிறோம் - இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு இயக்க பொதுச் செயலாளர் ராபர்ட் பொதுத்தேர்வு, மாணவர் நலன் கருதி போராட்டம் தற்காலிக வாபஸ் - ராபர்ட் பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை
-
Mar 08, 2024 14:09 ISTவிழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்- திருமாவளவன் எம்.பி.
“திமுக கூட்டணியில் ஒரு பொது தொகுதியும், 2 தனித் தொகுதிகளும் கேட்டோம்; விசிகவுக்கு 2 தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது; விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்; கடந்த மக்களவைத் தேர்தல் போலவே பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம்- சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டி
-
Mar 08, 2024 13:35 ISTநடிகர் அஜித்திற்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தற்போது நலமுடன் இருக்கிறார்
நடிகர் அஜித்திற்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தற்போது நலமுடன் இருக்கிறார் - மருத்துவமனை நிர்வாகம் "இன்று அல்லது நாளை மருத்துவமனையில் இருந்து அஜித் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" நடிகர் அஜித்திற்கு காதுக்கும் மூளைக்கும் இடையே நரம்பில் சிறிய கட்டி கண்டறியப்பட்டது - அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் நடிகர் அஜித் வரும் 15ஆம் தேதி 'விடாமுயற்சி' படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் செல்ல திட்டம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து திட்டமிட்டபடி படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடிவு என தகவல் "நடிகர் அஜித் நலமுடன் இருக்கிறார்"
-
Mar 08, 2024 13:34 ISTதிமுக, காங்., இடையே மார்ச் 10ல் பேச்சுவார்த்தை
திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக வரும் 10ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை திமுக 8 சீட்டுகளை தர முன்வந்துள்ள நிலையில், காங்கிரஸ் 11 தொகுதிகளை கேட்டு வருவதாக தகவல் நாளை மறுநாள் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படும் என எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு 9 அல்லது 10 தொகுதிகள் இறுதி செய்யப்படும் எனவும் எதிர்பார்ப்பு தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உடன் ராகுல்காந்தி தொலைபேசி வாயிலாக விரைவில் பேசுவார் என தகவல்.
-
Mar 08, 2024 13:18 ISTமகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தமக்கு விதிக்கப்பட்ட மடமைத் தளைகளை அறுத்தெறிந்து வெளியேறி, புத்துலகின் சிற்பிகளாக மிளிர்ந்திட உலக மகளிர் நாளில் அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துகள்; உங்களின் சமூக பொருளாதார ஏற்றத்துக்கும், அரசியல் பங்கேற்புக்கும் அடித்தளம் அமைத்து ஊக்குவிக்கவும், எல்லா நிலைகளிலும் உங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் நமது தமிழ்நாடு அரசு எண்ணற்ற பெண்கள் மேம்பாட்டு திட்டங்களைத் தீட்டி வருகிறது; சொற்களால் அல்லாமல், பெண்களைச் சக மனிதர்களாக, சமவுரிமை கொண்டவர்களாக மதிப்பதன் வழியே அவர்களைப் போற்றும் தலைமுறை உருவாகிட உழைப்போம்”- மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
-
Mar 08, 2024 13:02 ISTதி.மு.க கூட்டணி தொகுதி பங்கீடு நிலவரம்
மக்களவை தேர்தல் - திமுக கூட்டணி தொகுதி பங்கீடு நிலவரம்.
#BREAKING | மக்களவை தேர்தல் - திமுக கூட்டணி தொகுதி பங்கீடு நிலவரம்..!#SunNews | #DMK | #MDMK | #ParliamentElection2024 pic.twitter.com/QrEOZrB6u9
— Sun News (@sunnewstamil) March 8, 2024 -
Mar 08, 2024 13:02 ISTம.தி.மு.க தனிச் சின்னத்தில் போட்டி
மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு
"மாநிலங்களவை பதவி நிறைவடைய இன்னும் 15 மாதங்கள் உள்ளன. அதனால், அதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் தற்போது நடத்தவில்லை" - வைகோ
-
Mar 08, 2024 12:48 ISTம.தி.மு.கவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு. முதல்வர் ஸ்டாலின்- வைகோ ஒப்பந்தம் கையெழுத்து.
-
Mar 08, 2024 12:35 ISTமருத்துவமனையில் அஜித்: மேலாளர் விளக்கம்
நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் கட்டி என்பதெல்லாம் உண்மையில்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருந்தது கண்டறிப்பட்டு அரை மணி நேரத்தில் அதற்கான சிகிச்சை முடிந்து, நேற்றிரவு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று இரவு அல்லது நாளை வீடு திரும்புவார்- அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்
-
Mar 08, 2024 12:18 ISTதமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு: இ.பி.எஸ்
பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. போதைப் பொருட்களை கட்டுப்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வில்லை- இ.பி.எஸ்
-
Mar 08, 2024 11:50 ISTசிறப்பாக செயலாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது
சிறப்பாக செயலாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் விருது
பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் விருது. ஈரோடு, ராமநாதபுரம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
-
Mar 08, 2024 10:57 ISTஅனுமதி இலவசம்
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் மூவர் கோயில், சித்தன்னவாசல் குடைவரை கோயில் ஆகிய சுற்றுலா தளங்களில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இலவசம் என தொல்லியல் துறை அறிவிப்பு
-
Mar 08, 2024 10:44 ISTகட்டணம் இல்லாமல் பார்வையிட அனுமதி
மாமல்லபுரத்தில் உள்ள புராதான நினைவுச் சின்னங்களை மகளிர் தினத்தை ஒட்டி இன்று கட்டணம் இல்லாமல் பார்வையிட அனுமதி
-
Mar 08, 2024 10:41 ISTமா.சுப்பிரமணியன் பேட்டி
“எனது வாழ்க்கையில் 65 முறை ரத்த தானம் வழங்கியுள்ளேன்”
- சென்னை கிண்டியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
-
Mar 08, 2024 10:41 ISTமு.க.ஸ்டாலினுடன்- திருமாவளவன் எம்.பி. சந்திப்பு
மக்களவைத் தேர்தலுக்கான திமுக,விசிக கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. சந்திப்பு
-
Mar 08, 2024 10:24 ISTஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர் சந்திப்பு
🔴LIVE : சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர் சந்திப்பு https://t.co/S5ncbu57j3
— Thanthi TV (@ThanthiTV) March 8, 2024Credit: Thanthi TV Twitter
-
Mar 08, 2024 10:09 ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து, ரூ.48,840-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.6, 105க்கும் விற்பனை ஆகிறது.
-
Mar 08, 2024 10:09 ISTஅண்ணாமலை மகளிர் தின வாழ்த்து
“சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளுக்கு அங்கீகாரமும், மரியாதையும் வழங்கும் விதமாகக் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழ்நாட்டுத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மகளிர் தின வாழ்த்து
-
Mar 08, 2024 09:22 ISTமெட்ரோ ரயில் பணி- சாந்தோமில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
சிஎம்ஆர்எல் லைட் ஹவுஸ் ஸ்டேஷன் மெட்ரோ ரயில் பணி காரணமாக சாந்தோம் நெடுஞ்சாலையில் நாளை (மார்ச் 9) முதல் ஒரு வாரத்துக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது
மெட்ரோ ரயில் பணி- சாந்தோமில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
-
Mar 08, 2024 09:19 ISTநீலகிரியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கி மாதேவ் என்பவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
-
Mar 08, 2024 08:54 ISTமகளிர் தினம்- சிலிண்டர் விலை ₹100 குறைக்க அரசு முடிவு
மகளிர் தினத்தை ஒட்டி சிலிண்டர் விலையை ₹100 குறைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி தகவல்
கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குறிப்பாக மகளிருக்கு நிதிச்சுமையை குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்
-
Mar 08, 2024 08:26 ISTபெல் நிறுவன வேலை வாய்ப்பு
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் இந்தியா, 517 பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
BEL Jobs; பெல் நிறுவன வேலை வாய்ப்பு; 517 பணியிடங்கள்; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!
-
Mar 08, 2024 07:45 ISTமும்பை அணி அபார வெற்றி
மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை அணி அபார வெற்றி
உத்தரப் பிரதேச மகளிர் அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
-
Mar 08, 2024 07:42 ISTசிறுமி கொலை- புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.
பேருந்துகள், ஆட்டோ, டெம்போ போன்ற போக்குவரத்து இயங்கவில்லை. திரையரங்குகளிலும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
-
Mar 08, 2024 07:32 ISTசர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
#Smartயுகம் | சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!#SunNews | #InternationalWomensDay2024 | #Google pic.twitter.com/6wQTTgmSWW
— Sun News (@sunnewstamil) March 8, 2024Credit: Sun News Twitter
-
Mar 08, 2024 07:31 ISTமார்ச் 10 முதல் திமுக வேட்பாளர் நேர்காணல்- துரைமுருகன் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் செய்ய உள்ளார்
மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு…
-
Mar 08, 2024 07:31 ISTசிலிண்டர் மானியம் ரூ.300 - ஓராண்டு நீட்டிப்பு
பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.300 மானியத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
Mar 08, 2024 07:31 ISTதமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நீர் நிலை ஆக்கிரமிப்பு - நீதிமன்றம் அதிரடி "நீர் நிலை புறம்போக்கில் 2000ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து, நீர் நிலைகளை அதன் உண்மையான நிலைக்கு கொண்டு வர வேண்டும்
-தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
-
Mar 08, 2024 07:30 ISTதவெக தலைவர் விஜய் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்;
முதற்கட்டமாக, மகளிர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம்
தவெக மாநில செயலாளராக சி.விஜயலட்சுமி, இணை செயலாளராக எஸ்.என்.யாஸ்மின் நியமனம்
- தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.