Advertisment

Tamil News Updates: வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி : உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

Tamil news today Live, Uttarakhand tunnel rescue, India vs Australia 3rd T20I Highlights, Telangana Elections, Chennai Rains Today- 29 November 2023: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sembarambakkam

Tamil news

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி : உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

கழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 1500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது 2429 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 17 நாட்களாக நடைபெற்ற நிலையில், வெற்றிகரமாக அனைவரும் மீட்கப்பட்டனர்.

 

மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி நேற்றிரவு தொலைபேசியில் பேசினார்.

  • Nov 30, 2023 05:13 IST
    கனமழை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 29, 2023 21:50 IST
    கனமழை: திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை

    கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 



  • Nov 29, 2023 21:48 IST
    கனமழை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை விடுமுறை

     

    கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.



  • Nov 29, 2023 21:45 IST
    சென்னையில் கனமழை: சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை மூடப்பட்டது 

    கனமழையால் நீர் தேங்கியதை அடுத்து, சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை மூடப்பட்டது. கனமழையால் ஏற்கெனவே பெரம்பூர் ஹைவே சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.



  • Nov 29, 2023 21:39 IST
    விஜயகாந்த் செய்த தர்மம் அவரை காப்பாற்றும்; யாரும் பயப்பட வேண்டாம்: பிரேமலதா வீடியோ

    தே.மு.தி.க தலைவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மியாட் மருத்துவமனை விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக இல்லை என்று அறிக்கை வெளியிட்டதையடுத்து தே.மு.தி.க தொண்டர்கள் மத்தியில் கவலையை எழுப்பியது. இந்த நிலையில், விஜயகாந்த் செய்த தர்மம் அவரை காப்பாற்றும்; யாரும் பயப்பட வேண்டாம் என்று அவருடைய மனைவி பிரெமலதா விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.



  • Nov 29, 2023 20:58 IST
    கனமழை: சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

    கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.



  • Nov 29, 2023 20:38 IST
    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு  - வானிலை மையம் 

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Nov 29, 2023 20:10 IST
    நெடுஞ்சாலைத்துறை ஊழியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு 

    திருநெல்வேலி மாவட்டம், நெடுஞ்சாலைத்துறை ஊழியர் மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக ரூ. 90 லட்சம் சொத்து சேர்த்ததாக பாளையங்கோட்டை நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பகவதி மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.



  • Nov 29, 2023 20:06 IST
    மதுரை மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனைக் கைதி தப்பி ஓட்டம்

    தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கைதியாக இருந்த நிலையில், நன்னடத்தை காரணமாக சில மாதங்கள் தோட்ட வேலைகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் கைதிகள் வேலை செய்துவிட்டு மாலை சிறைக்குள் செல்லும் போது, ஜெயக்குமார் மாயமாகினார். போலீசில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.



  • Nov 29, 2023 18:09 IST
    டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மாற்றம்


    தமிழ்நாடு அரசு தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரியை வணிக வரித்துறை இயக்குனராக மாற்றி தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.



  • Nov 29, 2023 17:40 IST
    விஜயகாந்த் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்: அண்ணாமலை

    தேமுதிக தலைவர் விஜகாந்த் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கூறியுள்ளார்.
    இது குறித்து ட்விட்டரில் அவர், “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

    அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று, மக்கள் பணி தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



  • Nov 29, 2023 17:19 IST
    புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை 


    சென்னை புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் நாரவாரிகுப்பம், வடகரை, கொசப்பூர், மணலிபுதூர், சடையங்குப்பம், கிராண்ஸ்லைன் உள்ளிட்ட பகுதி மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Nov 29, 2023 16:51 IST
    சேலத்தின் திமுக இளைஞரணி மாநில மாநாடு : பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

    வரும் டிசம்பர் 17ம் தேதி சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடக்க உள்ளதை ஒட்டி, முதலமைச்சரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு, கூடுதல் டி.ஜி.பி. அருண் உள்ளிட்டோர் ஆய்வுகள் மேற்கொண்டனர்



  • Nov 29, 2023 16:20 IST
    விஜயகாந்துக்கு மீண்டும் வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம்

    தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மீண்டும் வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில, நுரையீரல் சுவாசத்தை சீராக வைத்துக் கொள்ள டிரக்கியாஸ்டமி அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Nov 29, 2023 16:17 IST
    தி.மு.க அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு ரத்து : அ.தி.மு.க மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

    தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, குழந்தைவேலு ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996-01 ஆண்டுகளில் திமுக அரசின்போது அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது.

    இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. 2015ம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு முறையீடு செய்தது. அதிமுக அரசு செய்த முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவாய், நரசிம்மா அமர்வு உத்தரவிட்டுள்ளது.



  • Nov 29, 2023 16:15 IST
    பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கு : அர்ஜூன் சம்பத் மனு தள்ளுபடி

    ஸ்ரீரங்கம் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது



  • Nov 29, 2023 16:14 IST
    தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் : இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரம்

    தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்! தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட உள்ளன.



  • Nov 29, 2023 16:13 IST
    வேகமாக நிரம்பும் புழல் ஏரி

    கனமழை காரணமாக வேகமாக நிரம்பும் புழல் ஏரி; முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாடிக்கு 200 கன அடி உபரி நீர் இன்னும் சற்று நேரத்தில் திறக்கப்பட உள்ளது



  • Nov 29, 2023 15:55 IST
    இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பயோபிக் : ஜனவரி 19-ல் வெளியீடு

    இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பயோபிக் மெயின் அடல் ஹோன் ('Main Atal Hoon') என இந்தியில் உருவாகியுள்ளது. வாஜ்பாயாக, பங்கஜ் த்ரிபாதி நடித்துள்ள இந்தப்படம் 2024 ஜனவரி 19ல் வெளியாகிறது.



  • Nov 29, 2023 15:53 IST
    பைக் சாகசம் செய்த 3 பேரில் ஓட்டுனர் உரிமம் ரத்து

    ஓசூரில் நெடுஞ்சாலையில் பைக் சாகசகத்தில் ஈடுபட்டு பிடிபட்ட 6 பேரில் 3 பேரின் ஓட்டுநர் உரிமம் 10 வருடம் ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • Nov 29, 2023 15:10 IST
    தமிழகத்தில் புதிய வகை வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் இதுவரை புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. உரிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவகிறது என அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • Nov 29, 2023 15:06 IST
    சென்னை உட்பட பல மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

    சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது



  • Nov 29, 2023 14:26 IST
    தொடர் மழை காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு

    தொடர் மழை காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு. அரும்பாக்கம் மற்றும் வடபழனி மெட்ரோ நிலையங்களில் அரைமணி நேரம் ரயில்கள் இயக்கப்படாது என அறிவிப்பு.  அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேற்கூரையில் பாதிப்பு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் பச்சை வழித்தடத்தில் மதியம் 1.45 மணி முதல் மெட்ரோ சேவை பகுதியளவில் இயக்கம் சுமார் 30 நிமிடங்கள் வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிப்பு



  • Nov 29, 2023 14:20 IST
    ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு

    இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு .பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் நீட்டிப்பு மற்ற உதவி பயிற்சியாளர்களின் பதவிக்காலமும் நீட்டிப்பு பயிற்சியாளராக தொடர டிராவிட் ஒப்புதல்.



  • Nov 29, 2023 14:08 IST
    தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்

    வங்கக்கடலில் டிச. 2ம் தேதி புயல் உருவாக கூடும் தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்



  • Nov 29, 2023 13:48 IST
    டிச.2, 3-ம் தேதிகளில் சென்னை கனமழைக்கு வாய்ப்பு

    வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்; டிச.2, 3-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு; டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி



  • Nov 29, 2023 13:14 IST
    விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை: மருத்துவமனை அறிக்கை

    தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் விஜயகாந்தின் உடல்நிலை சீரான நிலையில் இல்லை" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை



  • Nov 29, 2023 12:32 IST
    காலை உணவுத் திட்டம்: தனியார் வசம் ஒப்படைக்க திட்டம்?

    காலை உணவுத் திட்டம் : தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி திட்டம்

    முதலமைச்சரின்  காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்கு தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி திட்டம் எனத் தகவல். சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்று வரும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் 



  • Nov 29, 2023 12:25 IST
    பேருந்து பயணிகளிடம் சாதி உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுகிறது- இ.பி.எஸ்

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது, அதிகளவில் காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும்.

    இலவச பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம், சாதி உள்ளிட்ட விவரங்களை கேட்பது கண்டிக்கத்தக்கது- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி



  • Nov 29, 2023 12:25 IST
    பேருந்து பயணிகளிடம் சாதி உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுகிறது- இ.பி.எஸ்

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது, அதிகளவில் காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும்.

    இலவச பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம், சாதி உள்ளிட்ட விவரங்களை கேட்பது கண்டிக்கத்தக்கது- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி



  • Nov 29, 2023 12:11 IST
    சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை

    சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை.

    மதுரவாயல், போரூர், ஐயப்பன் தாங்கல், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை. விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால், வாகன ஓட்டிகள் அவதி. முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்



  • Nov 29, 2023 11:50 IST
    இ.பி.எஸ் நெடுஞ்சாலை துறை வழக்கு: தலைமை நீதிபதிக்கு னுப்பி வைப்பு

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய நெடுஞ்சாலை துறை முறைகேடு புகார்.

    லஞ்ச ஒழிப்புத் துறையின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் அமர்வு குறித்து முடிவெடுக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி வைப்பு.

    நீதிபதிகள் பேலா எம். திரிவேதி தலைமையிலான அமர்வு உத்தரவு.

    மனுவை நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட வேண்டும் - தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை

    நீதிபதி பேலா எம். திரிவேதி அமர்வு முன் விசாரணை நடைபெற்றால் என்ன தவறு - ஈபிஎஸ் தரப்பு

    இந்த விவகாரத்தில் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கவில்லை - ஈபிஎஸ் தரப்பு



  • Nov 29, 2023 11:50 IST
    இ.பி.எஸ் நெடுஞ்சாலை துறை வழக்கு: தலைமை நீதிபதிக்கு னுப்பி வைப்பு

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய நெடுஞ்சாலை துறை முறைகேடு புகார்.

    லஞ்ச ஒழிப்புத் துறையின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் அமர்வு குறித்து முடிவெடுக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி வைப்பு.

    நீதிபதிகள் பேலா எம். திரிவேதி தலைமையிலான அமர்வு உத்தரவு.

    மனுவை நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட வேண்டும் - தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை

    நீதிபதி பேலா எம். திரிவேதி அமர்வு முன் விசாரணை நடைபெற்றால் என்ன தவறு - ஈபிஎஸ் தரப்பு

    இந்த விவகாரத்தில் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கவில்லை - ஈபிஎஸ் தரப்பு



  • Nov 29, 2023 11:48 IST
    உதயநிதி பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை: உச்ச நீதிமன்றம்

    சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை - உச்சநீதிமன்றம்

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது - நீதிபதிகள்

    இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்



  • Nov 29, 2023 11:21 IST
    தீரன் சின்னமலை மகளிர் கல்லூரி திறப்பு

    திருப்பூர், வஞ்சிப்பாளையத்தில் தீரன் சின்னமலை மகளிர் கலை கல்லூரியின் புதிய கட்டடம் திறப்பு. புதிய கட்டடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

    தீரன் சின்னமலையின் பெயரை சொன்னால் தற்போதும் எழுச்சி ஏற்படும். தீரன் சின்னமலை பெயரில் மகளிர் கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளது - முதல்வர் ஸ்டாலின் 



  • Nov 29, 2023 11:01 IST
    வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

    பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை.

    என்றைக்குமே "அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.

    அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்- தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிக்கை



  • Nov 29, 2023 10:33 IST
    சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை ஆவடி, தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் அடுத்த 1-2 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு- தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்



  • Nov 29, 2023 10:33 IST
    அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

    அடுத்த 3 மணிநேரத்தில் ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  - சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Nov 29, 2023 10:15 IST
    தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

    சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ. 46,960-க்கும், ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.5,870-க்கும் விற்பனையாகிறது. 



  • Nov 29, 2023 10:13 IST
    வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Nov 29, 2023 10:12 IST
    புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகள்- ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

    Credit: Sun News Tiwtter



  • Nov 29, 2023 10:03 IST
    மீண்டும் காசி தமிழ் சங்கமம்: பங்கேற்க விண்ணப்பம் செய்வது எப்படி?

    மீண்டும் வாரணாசியில் டிசம்பர் 15 முதல் 31 வரை காசி தமிழ்ச் சங்கமம்-2’ நடைபெற உள்ளது. கடந்த முறையை போல்,  இதையும் உ.பி. அரசுடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சகம் நடத்துகிறது.

    இதன் ஒரு பகுதியாக 1,400 பேரை காசி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

    பங்கேற்க விண்ணப்பம் செய்வது எப்படி?

     



  • Nov 29, 2023 09:15 IST
    3 நாட்களுக்கு கனமழை

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு



  • Nov 29, 2023 08:59 IST
    சுரங்கப் பாதைக்குள் 17 நாட்களை கழித்தது எப்படி? சிக்கிய தொழிலாளி பேட்டி

    மொபைல் போனில் லுடோ விளையாடுவது, இயற்கையான நீரில் குளிப்பது, பொறி மற்றும் ஏலக்காய் சுவை – உத்தரகாசி சுரங்கப்பாதைக்குள் நீண்ட நேரம் செலவழித்தது 32 வயதான சாம்ரா ஓரானுக்கு ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

    முழு செய்தியும் படிக்க: சுரங்கப் பாதைக்குள் 17 நாட்களை கழித்தது எப்படி? சிக்கிய தொழிலாளி பேட்டி



  • Nov 29, 2023 08:59 IST
    சுரங்கப் பாதைக்குள் 17 நாட்களை கழித்தது எப்படி? சிக்கிய தொழிலாளி பேட்டி

    மொபைல் போனில் லுடோ விளையாடுவது, இயற்கையான நீரில் குளிப்பது, பொறி மற்றும் ஏலக்காய் சுவை – உத்தரகாசி சுரங்கப்பாதைக்குள் நீண்ட நேரம் செலவழித்தது 32 வயதான சாம்ரா ஓரானுக்கு ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

    முழு செய்தியும் படிக்க: சுரங்கப் பாதைக்குள் 17 நாட்களை கழித்தது எப்படி? சிக்கிய தொழிலாளி பேட்டி



  • Nov 29, 2023 07:52 IST
    சென்னை கடற்கரை- தாம்பரம் இரவு ரயில் சேவை இன்று முதல் ரத்து

    பராமரிப்பு பணி காரணமாக இன்று இரவு 11.59 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், இரவு 11.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை, நள்ளிரவு  12.25 மணி முதல் 2.25 மணி வரையான இரவு ரயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.



  • Nov 29, 2023 07:32 IST
    15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Nov 29, 2023 07:32 IST
    சென்னையில் பல்வேறு இடங்களில் விடியவிடிய மழை

    சென்னையில் சைதாப்பேட்டை, அசோக் நகர், தேனாம்பேட்டை, அடையாறு, ஆயிரம் விளக்கு, கிண்டி, சேப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வரும் நிலையில் தமிழ்நாட்டில 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்- சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Nov 29, 2023 07:31 IST
    நாளை தெலங்கானா சட்டப் பேரவை தேர்தல்

    தெலங்கானாவில் தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

    119 தொகுதிகளை கொண்ட தெலங்கான சட்டமன்றத்திற்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.



  • Nov 29, 2023 07:31 IST
    India vs Australia 3rd T20I- ஆஸ்திரேலியா அணி வெற்றி

    இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

    முதலில் ஆடிய இந்தியா, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment