tamilnadu lok-sabha election dmk admk results : லோக்சபா 2019 தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாவிட்டது. இதுவரை வெளியான தேர்தல் நிலவரப்படி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
இந்த கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் களம் இறங்கிய 5 தொகுதியில் ஒரு இடத்தில் கூட பாஜக தற்போது வரை முன்னிலை பெறவில்லை என்பது அதிமுக அரசுக்கு மட்டுமில்லை பாஜக அரசுக்கு மிகப் பெரிய தோல்வி. பாஜக தலைமையகத்துக்கு பதில் சொல்லும் கட்டாயத்திற்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது.
read more.. Lok Sabha Election Results Tamil Nadu 2019 Live
அதே நேரம், ஆட்சி பறிபோகிவிடுமோ என்ற பயத்தில் இருந்த முதல்வருக்கு ஆறுதல் தந்துள்ளது இடைத்தேர்தல் முடிவு. தமிழகத்தில் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைப்பெற்றது இந்த 22 தொகுதிகளில் அதிமுக 10 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் அதிமுக அரசு அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஆட்சியை தக்க வைத்துள்ளது.
திமுகவை பொறுத்தவரையில் இது மிகவும் முக்கியமான வெற்றி என்றாலும் திமுக தலைமையகம் பெரிதும் எதிர்பார்த்தது இடைத்தேர்தல் முடிவுகளை தான். தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 37 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. திமுகவுடன் கைக்கோர்த்த காங்கிரஸ் கூட்டணியும் தமிழகத்தில் நின்ற இடங்களில் தற்போது வரை முன்னிலை வகித்து வருகிறது.
Loksabha election results 2019 live updates
ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ஏற்பட்ட ஏகப்பட்ட சர்ச்சையிலும் இடைத்தேர்தல் நடைப்பெற்ற 22 தொகுதிகளில் 10 இடங்களில் அதிமுக முன்னிலை வந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் முதல்வர் ஈபிஎஸ் மகிழ்ச்சியில் உள்ளனர். இருந்த போதும் 39 தொகுதிகளில் அதிமுக மிகப் பெரிய பின்னடைவை சந்தித்திருப்பது, பாஜக தமிழகத்தில் படுதோல்வியை சந்திருப்பது அதிமுக கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மற்றொரு ஆறுதல் தகவல் என்னவென்றால் தேனியில் முதன்முதலாக களம் இறங்கியுள்ள ஓபிஎஸ் மகன் ரவீந்தர்நாத் தற்போது முன்னிலையில் உள்ளார். இந்த தகவலை கேட்டு ஈபிஎஸ் வாழ்த்துக்கள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல் மத்தியில் ஆட்சியை கைப்பற்றியுள்ள பாஜக அரசுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் ஃபோன் மூலம் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
திமுக இந்த லோக்சபா வெற்றியை கொண்டாடுவதில்பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளது. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்பு திமுக கண்ட முதல் தேர்தல். அதிலும் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி. திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பின்பு ஏகப்பட்ட சர்ச்சைகளை அவர் சந்திருந்தாலும், 37 இடங்களில் திமுக முன்னிலை வகிப்பது திமுகவுக்கு தமிழகத்தில் இருக்கும் பலத்தை காட்டியுள்ளது.
கல்வெட்டு உண்மை ஆகிவிடும் போல? தேனியில் ரவீந்திரநாத் முன்னிலை!
இருந்த போதும், இடைத்தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறியதால் திமுக மூத்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.