Tamilnadu weather update : வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘பெதாய்’ என்ற பெயரில் புயலாக மாறுகிறது. வருகிற 15, 16-ம் தேதிகளில் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும். மீனவர்கள் தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். ஆழ்கடல் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். இதற்கிடையே வங்கக் கடலில் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் கூறுகையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய கடல் பகுதியில் நிலவிய வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று(டிச.12) தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்” என்றார்.
Tamilnadu Weather Update, New Cyclone At Bay Of Bengal : வானிலை நிலவரம்
இந்நிலையில், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது குறித்த அறிக்கையில் புயல் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bulletin 01: A #Depression has formed over SE #BayofBengal is about 850 km SE of #Trincomalee, 1170 km SE of #Chennai and 1350 km of #Machilipatnam. It is very likely to intensify into a #DeepDepression during next 12 hours and into a Cyclonic storm during the subsequent 24 hrs. pic.twitter.com/XRbMQUZNMi
— TN SDMA (@tnsdma) 13 December 2018
அதில், “தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறவும் வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி
மேலும்,தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழக தென்கிழக்கு வங்கக்கடல் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளது.
வரும் 15, 16-ம் தேதிகளில் தமிழக வடகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்..#MET | #Rainfall pic.twitter.com/XczftSXlba
— Thanthi TV (@ThanthiTV) 13 December 2018
இன்று (டிசம்பர் 13) சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வானிலை முன் எச்சரிக்கை நிலவரங்களை தெரிவித்தார். பாலசந்திரன் இன்று அளித்த பேட்டியில், ‘தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியிருக்கிறது. தற்போது இது சென்னைக்கு தென் கிழக்கே 1170 கிமீ தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.
இன்று இரவுக்குள் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளைக்குள் புயலாக மாறும். தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகம் நோக்கி அது நகரும். எனவே வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் 15,16-ம் தேதிகளில் கன மழை இருக்கும்.
கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும். மீனவர்கள் தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். ஆழ்கடல் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும்’ என்றார் பாலசந்திரன்.
இதன் மூலமாக பெதாய் என்ற பெயரில் புதிய புயல் உருவாவதும், வட தமிழகத்திற்கு பலத்த மழை கிடைக்கவிருப்பதும் உறுதி செய்யப்படுகிறது. இதற்கிடையே வங்கக் கடலில் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : சென்னையை நோக்கி நகரும் புதிய புயல் … வானிலை மையம் எச்சரிக்கை…
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.