/tamil-ie/media/media_files/uploads/2019/04/z435.jpg)
Tamilnadu weatherman Fani cyclone increasing temperature North coastal districts
ஃபனி புயல் சென்னை மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று திசைமாறி, சென்னைக்கு 660 கி.மீ தொலைவில் ஃபனி புயல் மையம் கொண்டிருக்கிறது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 16 கி.மீ வேகத்தில் அது பயணிக்கிறது.
மே 4-ம் தேதி காலை முதல் அதி தீவிரப் புயல், தீவிர புயல் என கொஞ்சம் கொஞ்சமாக வலு இழக்கும்.
ஒடிசாவில், கடற்படை உட்பட மீட்பு படையினர் புயலின் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். ஒடிசா அரசு புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் படிக்க - Cyclone Fani Update: கடல் கொந்தளிக்கும், பலத்த காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "நன்றி ஃபனி புயல். நல்லா பண்ற!!! இந்த வருடத்தில் முதன்முறையாக சென்னையில் 40 டிகிரி செல்சியல்ஸ் வெப்பம் கொளுத்துகிறது. வார இறுதியில் கக்கப் போகும் அனலுக்கு முன்பான ஒரு டிரைலர் தான் இது. மழை எப்போது பெய்யும் என்று என்னிடம் கேட்காதீர்கள்!!!
இன்று இரவோ அல்லது நாளையோ சென்னையில் வானம் ஆங்காங்கே மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான மழைச் சாரல் பெற வாய்ப்புள்ளது. புயல் சென்னை அருகேயிருந்து வட கிழக்கு திசையில் நகரும்போது இங்கிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சும் என்பதால், வெப்பநிலை வட மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடுமையாக அதிகரிப்பதை நீங்கள் பார்க்க முடியும். வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பம் கடுமையாக இருக்கப் போகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
அதி தீவிர புயலாக மாறியுள்ள ஃபனி புயல் ஒடிசாவின் கோபால்பூர்-சந்த்பாலி இடையே கரையை கடக்கும். மே 3ம் தேதி புயல் கரையை கடக்கும்போது 175-185 கி.மீ காற்றின் வேகமாக இருக்கும். அதிகபட்சமாக 205 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க - Cyclone Fani Live Updates: ஃபனி புயல் லைவ் அப்டேட்ஸ்