சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.
இந்தக் கொடிகம்பம் அனுமதி இன்றி வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தொடர்ந்து கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இந்த நிலையில், அக்கட்சியின் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்படுகின்றன. இதற்கிடையில் அமர் பிரசாத் ரெட்டியின் மனைவி தனது கணவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய சதி தீட்டம் தீட்டப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையும் படிங்க : அரசு பஸ்ஸில் நெல்லைக்கு அழைத்துச் செல்லப்படும் பா.ஜ.க அமர்: அம்பை கோர்ட்டில் ஆஜர்
இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அமர் பிரசாத் ரெட்டியை தற்சமயம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் இல்லை” என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமின் மனு மீதான விசாரணை நவ.10ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இதற்கிடையில் தன்னை அரசியலை விட்டே அகற்ற சதீ திட்டம் தீட்டப்படுவதாகவும், தன்னை காவல் துறையினர் துன்புறுத்தியதாகவும் அமர் பிரசாத் ரெட்டி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“