Advertisment

எண்ணூர் கோரமண்டல் அமோனியா கசிவு; பசுமை தீர்ப்பாயம் முக்கிய தீர்ப்பு

“சென்னை எண்ணூர் கோரமண்டல் ஆலை மீண்டும் இயங்க தமிழ்நாடு அரசின் அனுமதி அவசியம்; மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்த இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்” என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Ennore gas.jpg

அமோனியா வாயு கசிவு வழக்கு தொடர்பாக தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Ennore Coromandel plant ammonia gas leak case | Environment | சென்னை எண்ணூர் கோரமண்டல் ஆலையில் அமோனியா வாயு கசிவு வழக்கு தொடர்பாக தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இன்று (மே 21, 2024) தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், ““சென்னை எண்ணூர் கோரமண்டல் ஆலை மீண்டும் இயங்க தமிழ்நாடு அரசின் அனுமதி அவசியம்; மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்த இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

மேலும், “சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து என்.ஓ.சி சான்றிதழ் பெற்ற பிறகு ஆலையை மீண்டும் இயக்கிக் கொள்ளலாம். ஆலையை மீண்டும் இயக்க தமிழ்நாடு அரசின் அனுமதி அவசியம்.
தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளை முழுமையான கடைப்பிடிக்க வேண்டும். மாசு கட்டுப்பாடு வாரியம் பரிந்துரைத்த இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்” என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க ; கோரமண்டல் ஆலை இயங்கத் தடை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸில் கூறியது என்ன?

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் அருகே விரைவு சாலையில்  கோரமண்டல் உர ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான ரசாயனங்கள் வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் 2024 மார்ச் 26-ம் தேதி கப்பலில் இருந்து குழாய் மூலம் திரவ அமோனியா எடுத்துச் சென்ற போது குழாயில் உடைப்பு  ஏற்பட்டு அமோனியா கசிவு ஏற்பட்டது. 

இதனால் பெரிய குப்பம், சின்னக்குப்பம் உள்ளிட்ட  கிராமங்களில்  காற்றில் வாயு கலந்ததால் மக்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது.
தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதையடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து ஆலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க :  அமோனியா வாயு கசிவு; கோரமண்டல் ஆலையை மூட வலியுறுத்தி 400-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Environment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment