2019ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அன்றே தமிழக முதல்வர் 2020ம் ஆண்டும் பொங்கல் பரிசு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால், இந்த பொங்கல் பரிசு திட்டத்தை உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை தடை விதிக்க கோரிய மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சென்றது.
வழக்கின் முடிவில், தேர்தல் அறிவிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின், பொங்கல் இலவச பொருட்களை வழங்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தற்போது, உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு பொங்கல் பரிசு திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் முழு மூச்சாக இறங்கியுள்ளது.
தமிழகத்தில் தற்போது 1 கோடியே 95 லட்சத்து 5 ஆயிரத்து 846 அரிசி குடும்ப அட்டைகளும், 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை குடும்ப அட்டைகளும் உள்ளன. இரண்டு வகையான குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் சிறப்பு பரிசு திட்டம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
”என் சுறுசுறுப்பின் ரகசியம்…” ரஜினியின் பதிலைக் கேட்டு வியந்த ரசிகர்கள்!
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி,09.1.2019 முதல் 13.1.2019 வரை அனைத்து கடைகளிலும் அதற்குரிய வேலை நாட்களில் பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்படும். பொது விடுமுறையான ஜனவரி 10ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக 16ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவி வங்கி கணக்கில் முதல் தவணையாக ரூ.1,677 கோடி டெபாசிட் செய்துள்ளது. இந்த தொகை, பொங்கல் பரிசை பொது மக்களுக்கு வழங்கும் வகையாக அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பப்படும்.
பொங்கல் பரிசு தொகுப்பாக 1கிலோ பச்சரிசி,1கிலோ சர்க்கரை,20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஆகியவற்றைக் காகித உறைகளில் போட்டும், அத்துடன் ரூ 1000/- (500+500 =1000 என இரண்டு நோட்டு கையில் கவர் போடாமல் 2 அடி கரும்புடன்) ஆகியவற்றை அதற்கானத் துணிப்பையில் போட்டு தரப்படும்.