Today Chennai Weather Forecast Southwest Monsoon : வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் இன்று பிற்பகலில் தெரிவித்தது.
மே மாதம் முடிந்து ஜூன் ஆரம்பித்தாகிவிட்டது. இருப்பினும் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் சற்றும் குறைந்தபாடில்லை. குறிப்பாக கிழக்குக் கடற்கரை மாவட்டங்களில். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக விட்டுவிட்டு நல்ல மழை பெய்து வருகின்றது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.
இன்றைய வானிலை
மழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள பகுதிகள்
சென்னை வானிலை ஆய்வு மையம் வழங்கும் இன்றைய வானிலைப் பற்றி ஒரு பார்வை. நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடியுடன் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரை வீசக்கூடும். ஆந்திர மாநிலத்தின் கடற்கரை மாவட்டமான ராயலசீமாவிலும் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மேலும் படிக்க : தண்ணீர் பிரச்னை பூதாகரமாக உள்ள நிலையில் இன்று பள்ளிகள் திறப்பு : என்ன நடக்குமோ!!!
மக்களுக்கு எச்சரிக்கை
இனி வரும் சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரையோர மாநிலங்களில் சராசரி வெப்பநிலையை விட 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என்பதால் பொதுமக்கள் 11 மணி முதல் மாலை நான்கு மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
சென்னை வானிலை (Chennai Weather)
இன்று காலை முதலே மேக மூட்டத்துடன் வானம் காணப்படுகிறது. மாலையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் வெப்பநிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். மிக அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும்.
வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் இன்று பிற்பகலில் தெரிவித்தது.
திருச்சி, மதுரை, திண்டுக்கல், நாமக்கல், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகரித்து காணப்படும் என்றும் கூறியிருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
இன்று (ஜூன் 3) பிற்பகல் 1 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜூன் 4 முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஜூன் 6, 7-ம் தேதிகளில் குறிப்பிட்ட இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.’ என கூறப்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.