மைனர் சிறுமியை திருமணம் செய்ததற்காக தூத்துக்குடி மாவட்டத்தின் பஞ்சாயத்துத் துணை தலைவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி (டி.சி.பி.ஓ) பி.ஜோதிகுமார் கூறுகையில், நாங்குநேரியைச் சேர்ந்த அந்த 17 வயது சிறுமி, 12 ஆம் வகுப்பு படித்ததாகவும், அவர் பெற்றோருக்கு இளைய மகள் என்றும் கூறினார். “அந்த பெண்ணின் பெற்றோர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள். ஆசிர்வதபுரத்தைச் சேர்ந்த சுந்தர் ராஜ் (வயது 36), என்பவருடன் அவர்கள் திருமணத்தை நடத்தினர்” என்று அவர் கூறினார்.
புதன்கிழமை காலை பெய்குலம் கிராமத்தில் நடைபெற்ற திருமணத்தைப் பற்றி, பிற்பகல் தான் சைல்ட்லைன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் வந்திருக்கிறது. இதனால் அந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. தகவல் வந்ததையடுத்து, அதிகாரிகள் குழு சுந்தர் ராஜ் இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டது. பின்னர் அவர் தூத்துக்குடியில் உள்ள மீட்கப்பட்ட, சிறுமிகளுக்கான வரவேற்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது பெற்றோருக்கு பிரிவு 9 (ஆண் வயதுவந்தோர், ஒரு குழந்தையை திருமணம் செய்ததற்காக தண்டனை) மற்றும் பிரிவு 10 (குழந்தை திருமணத்தை உறுதிப்படுத்தியதற்காக தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மது குடித்தவரின் உயிரைக் குடித்த மது அரக்கன் – திருச்சியில் பரபரப்பு
பின்னர், “சுந்தர் ராஜ் வியாழக்கிழமை நீதிமன்றக் காவலில் கைது செய்யப்பட்டார்” என்று திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Tuticorin vice president arrested for marrying minor girl