/tamil-ie/media/media_files/uploads/2019/01/a306.jpg)
Vedanta limited Sterlite industries donated rs 5 crore to CMPRF
Vedanta limited Sterlite industries donated rs 5 crore to CMPRF : கொரோனாவுக்கு எதிரான போரில், மக்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது மத்திய மற்றும் மாநில அரசுகள். இந்நிலையில் மக்களிடம் இருந்தும், நிறுவனங்களிடம் இருந்தும் இந்த நோய்க்கு எதிரான போரில் போரிட நிதி கேட்டுள்ளது அரசு.
டாட்டா, ஜியோ, விப்ரோ போன்ற நிறுவனங்கள் தங்கள் பங்கு நிதியை மத்திய அரசுக்கும், அந்நிறுவனங்கள் அதிகம் நடத்தப்படும் மாநில அரசுகளுக்கும் வழங்கியுள்ளது. டாட்டா நிறுவனம் சமீபத்தில் தமிழகத்திற்கு 40 ஆயிரம் பி.சி.ஆர். கிட்களை வழங்கியுள்ளது.
மேலும் படிக்க : 40 ஆயிரம் கொரோனா பரிசோதனை கிட் கருவிகள் : தமிழகத்திற்கு உதவிய டாட்டா நிறுவனம்
இந்நிலையில் தமிழகத்தின், தூத்துக்குடியில் இயங்கி வந்த, லண்டனை சேர்ந்த நிறுவனமான ஸ்டெர்லைட் தற்போது தமிழக அரசுக்கு ரூ. 5 கோடி கொடுத்து உதவியுள்ளது. 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டினை தொடர்ந்து அந்த ஆலை இயங்குவதற்கு அனுமதி மறுத்துள்ளது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 5 க்கோடி வழங்கியுள்ளது, இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணியாளர்களின் நலனுக்காக ரூ. 15 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மருத்துவ கல்லூரிகளூக்கு தேவையான 200 பாதுகாப்பு உபகரணங்கள், 30 ஆயிரம் முக கவசங்கள் மற்றும் சானிடைஸர்களை கொடுத்து உதவியுள்ளது இந்நிறுவனம்.
மேலும் படிக்க : கேட்டதோ 4 லட்சம்… கிடைத்ததோ 24,000 ரேபிட் கிட்கள்… தமிழகத்திற்கு இது போதுமா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.