Advertisment

Vellore lok sabha election results : வேலூரில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி - வாக்கு எண்ணிக்கை ஹைலைட்ஸ்

Vellore lok sabha election results 2019 live updates : மொத்தம் 28 நபர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். அதில் 18 நபர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vellore loksabha election, vellore election, loksabha election, edappadi palanichamy, m k stalin, udayanidhi stalin, kathir anand, a c shanmugam, வேலூர் மக்களவை தேர்தல் முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம், Vellore Lok Sabha Election, Vellore Lok sabha election results 2019 live

vellore loksabha election, vellore election, loksabha election, edappadi palanichamy, m k stalin, udayanidhi stalin, kathir anand, a c shanmugam, வேலூர் மக்களவை தேர்தல் முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம்

Vellore lok sabha election results 2019 live : ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. பணப்பட்டுவாடா கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் வேலூர் மாவட்டத்தில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த தேர்தல் திங்கள் கிழமை (05/08/2019) அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர் போன்ற பெரிய கட்சிகள் நேரடியாக போட்டியிட்டனர். மக்கள் நீதி மய்யம், அமமுக கட்சியினர் இந்த தேர்தலில் பங்கேற்கவில்லை. To read in English

Advertisment

வேலூர் தொகுதியின் முழு விபரம் - வீடியோ

Vellore Lok Sabha Election Result 2019 Live Counting : முக்கிய வேட்பாளர்கள்

வேட்புமனு தாக்கல் ஜூலை 11ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடைபெற்றது. 50 மனுக்கள் வரை போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்டது. மனுக்கள் மீதான பரிசீலனை 19ம் தேதி அம்மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகம் தலைமையில் நடைபெற்றது. 19 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சுயேட்சை வேட்பாளர்களாஅன ஜே. அசேன், ஏ.ஜி.சண்முகம், மற்றும் தனலட்சுமி ஆகியோர் தங்களின் வேட்புமனுக்களை ஜூலை 22ம் தேதி வாபஸ் பெற்றனர்.

அதிமுக - ஏ.சி. சண்முகம்

திமுக - திமுக பொருளாளர் மகன் கதிர் ஆனந்த்

நாம் தமிழர் -  தீபலட்சுமி

28 வேட்பாளர்கள் போட்டியிட ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் முடிவுற்றது. 18 சுயேட்சைகள் இங்கு போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Vellore Lok Sabha Election: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் 72% வாக்குப்பதிவு

Live Blog

6 சட்டமன்ற தொகுதிகள் :  வேலூர், அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் (தனி), கீழ்வைத்தாணன் குப்பம் (தனி)



























Highlights

    19:26 (IST)09 Aug 2019

    வெற்றியை கலைஞருக்கு சமர்ப்பிப்போம் - உதயநிதி ஸ்டாலின்

    வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற தி.மு.க வேட்பாளர்  கதிர் ஆனந்திற்கு  வாழ்த்துகள். வெற்றியைத் தேடித்தந்த தலைவர் ஸ்டாலின் , கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், களத்தில் உழைத்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞரணி தோழர்களுக்கும் வாழ்த்துகள். வெற்றியை கலைஞருக்குச் சமர்ப்பிப்போம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    18:41 (IST)09 Aug 2019

    ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - ஸ்டாலின்

    நாடாளுமன்ற தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது, இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. வேலூர் தேர்தல் வெற்றிக்கு துணை நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி என திமுக தலைவர் ஸ்டாலின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

    வேலூர் தொகுதி வெற்றி குறித்து முன்னதாக, ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நாடாளுமன்றத்தின் 3வது பெரிய கட்சி என்ற தகுதியை திமுக நிலை நிறுத்தியுள்ளது. இந்த மாபெரும் வெற்றியை திமுக தலைவர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறோம் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

    17:51 (IST)09 Aug 2019

    பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

    வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பெற்றுள்ள வெற்றி, ஒரு மோசமான, மோசடியான வெற்றி. பண நாயகம் வெற்றி பெற்றுள்ளது.  இந்த தேர்தலில், தங்களுக்கு  மகத்தான ஓட்டுக்கள் கிடைத்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    17:01 (IST)09 Aug 2019

    ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி – திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்

    வேலூர் தொகுதியில் நான் பெற்ற வெற்றி, ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    16:03 (IST)09 Aug 2019

    இது ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி - துரைமுருகன்

    வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பெற்றுள்ள வெற்றி, திமுக தலைவர் ஸ்டாலின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமாகவே பார்ப்பதாக திமுக துணை எதிர்க்கட்சி தலைவரும், வேட்பாளர் கதிர் ஆனந்தின் தந்தையுமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    15:53 (IST)09 Aug 2019

    வேலூர் மக்களவை தேர்தல் - திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

    வேலூர் மக்களவை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ சி சண்முகத்தைவிட  8,141 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    15:31 (IST)09 Aug 2019

    வாக்கு எண்ணிக்கை நிறைவு - ஒப்புகை சீட்டு சரிபார்க்கும் பணி துவக்கம்

    வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நிறைவு அடைந்துள்ள நிலையில், ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது.  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இவரது வெற்றி உறுதியாகி உள்ளது.

    14:55 (IST)09 Aug 2019

    மதியம் 03 மணி கள நிலவரம்

    4,79,011 - திமுக

    4,70,725 - அதிமுக

    26,505 - நாம் தமிழர் கட்சி

    14:39 (IST)09 Aug 2019

    18 சுற்று வாக்குப்பதிவு முடிவு

    21 சுற்றுகளைக் கொண்டுள்ள வேலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் 18 சுற்றுகளின் முடிவுகள் காலையில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 3 சுற்று வாக்கு எண்ணிக்கைகளின் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார். 

    14:28 (IST)09 Aug 2019

    அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டம்

    இன்னும் 12 ஆயிரம் வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில் வேலூர் கள நிலவரத்தின் படி, 8,460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார் கதிர் ஆனந்த். இந்த தொகுதியிலும் திமுகவின் வெற்றி உறுதியாக இருக்கின்ற நிலையில், அண்ணா அறிவாலயம், திமுக தலைவர் முக ஸ்டாலின் இல்லம் முன்பு தொண்டர்கள் பெருந்திரளாக திரண்டு இனிப்புகளை பகிர்ந்து கொண்டும், பட்டாசுகளை வெடித்தும்  கொண்டாடி வருகின்றானர்.  

    publive-image

    14:24 (IST)09 Aug 2019

    Vellore lok sabha election vote shares

    நடைபெற்று முடிந்த வேலூர் தேர்தலின் முடிவுகள் காலையில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த தேர்தலில் எந்தெந்த கட்சியினர் எவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளனர் என்பதை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதிமுக - 46.49%

    திமுக - 47.33%

    நாம் தமிழர் - 2.62%

    14:13 (IST)09 Aug 2019

    கதிர் ஆனந்த் 8,460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

    திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,78,855 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 4,70,395 வாக்குகளை பெற்றுள்ளார்.  8,460 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 26,502 வாக்குகள் பெற்றுள்ளார்.

    14:02 (IST)09 Aug 2019

    கதிர் ஆனந்த் 9,188 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

    திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,76,194 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 4,67,006 வாக்குகளை பெற்றுள்ளார்.  9,188 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 26,320 வாக்குகள் பெற்றுள்ளார்.

    13:49 (IST)09 Aug 2019

    கதிர் ஆனந்த் 11,582 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

    திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,64,877 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 4,53,295 வாக்குகளை பெற்றுள்ளார்.  11,582 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 25,679 வாக்குகள் பெற்றுள்ளார்.

    13:44 (IST)09 Aug 2019

    கதிர் ஆனந்த் 10,441 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

    திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,56,070 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 4,45,629 வாக்குகளை பெற்றுள்ளார்.  10,441 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.  நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 25,296 வாக்குகள் பெற்றுள்ளார்.

    13:41 (IST)09 Aug 2019

    வேலூர் சந்தவாசலில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்

    தொடர்ந்து 01:30 மணி நேரமாக திமுகவின் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில் வேலூர் தொகுதியின் சந்தவாசலில் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர் திமுகவினர்.

    publive-image

    publive-image

    13:35 (IST)09 Aug 2019

    கதிர் ஆனந்த் 9,448 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

    திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,43,938 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 4,34,490 வாக்குகளை பெற்றுள்ளார்.  9,448 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.  நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 24,410 வாக்குகள் பெற்றுள்ளார்.

    13:30 (IST)09 Aug 2019

    கதிர் ஆனந்த் 10,277 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

    திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,24,989 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 4,14,712 வாக்குகளை பெற்றுள்ளார்.  10,277 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 23,358 வாக்குகள் பெற்றுள்ளார்.

    12:55 (IST)09 Aug 2019

    கதிர் ஆனந்த் 14,474 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

    திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,81,316 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 3,66,842 வாக்குகளை பெற்றுள்ளார்.  14,474 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.  நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 20,732 வாக்குகள் பெற்றுள்ளார்.

    12:47 (IST)09 Aug 2019

    கதிர் ஆனந்த் 17,198 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

    திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,52,156 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 3,34,958 வாக்குகளை பெற்றுள்ளார்.  17,198 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 18,782 வாக்குகள் பெற்றுள்ளார்.

    12:31 (IST)09 Aug 2019

    வாக்கு சதவீதம்

    இதுவரை நடைபெற்று முடிந்த வாக்கு எண்ணிக்கையின் படி, திமுக 48.26% வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக 45.*% வாக்குகளையும் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சியினர் 2.52% வாக்குகளை பெற்றுள்ளது.

    12:30 (IST)09 Aug 2019

    கதிர் ஆனந்த் 16,080 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

    திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,15,448 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 2,99,368 வாக்குகளை பெற்றுள்ளார்.  16,080 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 16,456 வாக்குகள் பெற்றுள்ளார்.

    12:21 (IST)09 Aug 2019

    12:15 மணி கள நிலவரம் : 7,773 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை

    திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,74,015 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 2,90,064 வாக்குகளை பெற்றுள்ளார்.  7,773 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.  நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 15,755 வாக்குகள் பெற்றுள்ளார்.

    12:12 (IST)09 Aug 2019

    12:00 மணி கள நிலவரம் : 9,883 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை

    திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,74,015 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 2,64,132 வாக்குகளை பெற்றுள்ளார்.  9,883 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 13,942 வாக்குகள் பெற்றுள்ளார். நல்ல திருப்புமுனையாக இந்த தேர்தல் முடிவுகளின் தற்போதைய கள நிலவரம் நீடித்து வருகிறது. 

    12:00 (IST)09 Aug 2019

    11:50 மணி கள நிலவரம் : 7,507 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை

    இது வரையில் அதிமுக முன்னிலை பெற்று வந்த நிலையில், தற்போது 7,507 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.   திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த்  2,64,140 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம்  2,56,633 வாக்குகளை பெற்றுள்ளார்.  7,507 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். 

    11:49 (IST)09 Aug 2019

    11:45 மணி கள நிலவரம் : 3,162 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலை

    அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 2,40,541 வாக்குகளை பெற்றுள்ளார். திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,37,189 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 12,560 வாக்குகள் பெற்றுள்ளார்.  3162 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி. சண்முகம் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.

    11:36 (IST)09 Aug 2019

    11:30 மணி கள நிலவரம் : 6,362 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலை

    அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 2,19,560 வாக்குகளை பெற்றுள்ளார்.  திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,13,198 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 11,380 வாக்குகள் பெற்றுள்ளார்.  6,362 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி. சண்முகம் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.

    11:27 (IST)09 Aug 2019

    11:20 மணி கள நிலவரம் : 2 லட்சம் வாக்குகளைப் பெற்ற அதிமுக

    அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 2,03,151 வாக்குகளை பெற்றுள்ளார். திமுகவின் வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,94,546 வாக்குகளைப் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபலட்சுமி 10,184 வாக்குகள் பெற்றுள்ளார்.  8,605 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி. சண்முகம் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.

    11:20 (IST)09 Aug 2019

    11:15 மணி கள நிலவரம் : 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி. சண்முகம் முன்னிலை

    தற்போது அதிமுக 1,98,147 வாக்குகளை பெற்றுள்ளது. திமுக 1,89,851 வாக்குகளைப் பெற்றுள்ளது. 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி. சண்முகம் முன்னிலை பெற்று வருகிறார்.

    11:09 (IST)09 Aug 2019

    11:00 மணி கள நிலவரம் : 11,220 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி. சண்முகம் முன்னிலை

    தற்போது அதிமுக 1,78,138 வாக்குகளை பெற்றுள்ளது. திமுக 1,66,918 வாக்குகளைப் பெற்றுள்ளது. 11,220 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி. சண்முகம் முன்னிலை பெற்று வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 8,969 வாக்குகள் பெற்றுள்ளார்.

    10:54 (IST)09 Aug 2019

    10:45 மணி கள நிலவரம் : 8,673 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி. சண்முகம் முன்னிலை

    தற்போது அதிமுக 1,52,875 வாக்குகளை பெற்றுள்ளது. திமுக 1,40,202 வாக்குகளைப் பெற்றுள்ளது. 10:45 மணி கள நிலவரப்படி 8,673 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி. சண்முகம் முன்னிலை வகித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தீப லட்சுமி 7,729 வாக்குகள் பெற்றுள்ளார்.

    10:32 (IST)09 Aug 2019

    10:30 மணி கள நிலவரம் : 13,251 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி. சண்முகம் முன்னிலை

    தற்போது அதிமுக 1,18,874 வாக்குகளை பெற்றுள்ளது. திமுக 1,05,623 வாக்குகளைப் பெற்றுள்ளது. 10:30 மணி கள நிலவரப்படி 13,251 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி. சண்முகம் முன்னிலை வகித்து வருகிறார்.

    10:12 (IST)09 Aug 2019

    10:10 மணி கள நிலவரம் : 7,733  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார் ஏ.சி. சண்முகம்

    தற்போது அதிமுக 85200 வாக்குகளை பெற்றுள்ளது. திமுக 77,467 வாக்குகளைப் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி 3950 வாக்குகளை பெற்றுள்ளது. 7,733  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார் ஏ.சி. சண்முகம்

    10:03 (IST)09 Aug 2019

    10:00 மணி கள நிலவரம்

    தற்போது அதிமுக 66,962 வாக்குகளை பெற்றுள்ளது. திமுக 62,210 வாக்குகளைப் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி 2791 வாக்குகளை பெற்றுள்ளது. 4,752 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார் ஏ.சி. சண்முகம்

    09:59 (IST)09 Aug 2019

    64 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை

    தற்போது அதிமுக 56,658 வாக்குகளை பெற்றுள்ளது. திமுக 56,722 வாக்குகளைப் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி 2502 வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுகவின் ஏ.சி. சண்முகத்தை விட 64 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை. 

    09:39 (IST)09 Aug 2019

    09:30 மணி நிலவரம்

    வேலூர் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுகவின் ஏசி சண்முகம் 57,511 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். திமுகவின் கதிர் ஆனந்த் 54,844 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தீபா லட்சுமி 2,036 வாக்குகளை பெற்றுள்ளார்.

    09:32 (IST)09 Aug 2019

    09:20 மணி கள நிலவரம்

    2,667 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி. சண்முகம் முன்னிலை வகித்து வருகிறார். கதிர் ஆனந்த் பெற்ற ஓட்டுகள் 54,844. ஏசி சண்முகம் பெற்ற வாக்குகள் 57,511. ஏசி சண்முகம் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற மக்களவையில் அதிமுகவின் பலம் 2-ஆக உயரும்

    09:19 (IST)09 Aug 2019

    காலை 09:10 வரையிலான தேர்தல் முடிவுகள் நிலவரம்

    திமுகவின் கதிர் ஆனந்த தற்போது 38,051 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ஏ.சி. சண்முகம் 37,295 வாக்குகளை பெற்றுள்ளார். வித்தியாசம் 756 வாக்குகள் ஆகும்.

    09:14 (IST)09 Aug 2019

    09:00 மணி நிலவரம்

    தற்போது திமுகவின் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்று வருகிறார். திமுக - 34,052 வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக 32,511 வாக்குகளை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி 501 வாக்குகளைப் பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,541 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை பெற்று வருகிறது.

    09:02 (IST)09 Aug 2019

    08:50 மணி நிலவரம்

    கதிர் ஆனந்த் - 20, 623

    ஏ.சி. சண்முகம் - 21,449

    வித்தியாசம் - 826

    09:00 (IST)09 Aug 2019

    08: 40 மணி கள நிலவரம்

    கதிர் ஆனந்த் : 24,064 வாக்குகள் ஏ.சி. சண்முகம் : 25,544 வித்தியாசம் - 1,480 வாக்குகள்

    08:55 (IST)09 Aug 2019

    தொடர்ந்து முன்னிலை பெறும் ஏ.சி. சண்முகம்

    ஆம்பூர், குடியாத்தம், கே.வி. குப்பம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். வேலூர் மற்றும் அணைக்கட்டு உள்ளிட்ட தொகுதிகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்று வருகிறார்.

    08:43 (IST)09 Aug 2019

    08:30 மணி நிலவரம்

    அதிமுக 4,486 வாக்குகள்

    திமுக - 3923 வாக்குகள்

    நாம் தமிழர் - 400 வாக்குகள்

    08:38 (IST)09 Aug 2019

    Vellore Election : Thanthi Exit Poll Results

    தந்தி டிவி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டது. அதில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதில் திமுக கூட்டணிக்கு – 46% முதல் 52% வாக்குகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளது. அதிமுக கூட்டணி – 41% முதல் 47% வரையிலான வாக்குகளை பெற வாய்ப்புகள் உள்ளதாக அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி 4% முதல் 7% வாக்குகளை பெறும் என்றும் இதர கட்சிகள் 3% முதல் 6% வரை வாக்குகளை பெறும் என்று அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க 

    08:26 (IST)09 Aug 2019

    ஏ.சி. சண்முகம் முன்னிலை

    தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது ஏ.சி. சண்முகம் அதில் முன்னிலை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் 1,177 வாக்குகள் பெற்று ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார். 

    08:08 (IST)09 Aug 2019

    Ballot Votes : வாக்கு எண்ணும் பணிகள் துவக்கம்

    வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது. முதலில்  தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

    வாக்கு பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் ராணிப்பேட்டையில் உள்ள எஞ்சினியரிங்க் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்கு பாதுகாப்புடன் துணை நிலை ராணுவ வீரர்கள், சிறப்பு காவல்படையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் 6 அறைகளில் நடைபெறும். 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முன்னணி நிலை அறிவிக்கப்படும். காலை 8 மணியில் இருந்து வாக்குப்பதிவு துவங்க உள்ளது. இந்த பணி எந்த பிரச்சனையின்றி நடைபெற 72 சிசிடிவி கேமராக்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பொறுத்தப்பட்டுள்ளன.

    Vellore Election: Thanthi Exit Poll Results

    தந்தி டிவி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டது. அதில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதில் திமுக கூட்டணிக்கு – 46% முதல் 52% வாக்குகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளது. அதிமுக கூட்டணி – 41% முதல் 47% வரையிலான வாக்குகளை பெற வாய்ப்புகள் உள்ளதாக அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி 4% முதல் 7% வாக்குகளை பெறும் என்றும் இதர கட்சிகள் 3% முதல் 6% வரை வாக்குகளை பெறும் என்று அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க 

    Vellore
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment