Vijayakant: ஊரடங்கு உத்தரவு காலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அவரது மனைவி பிரேமலதா ஹேர்கட் செய்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதால் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் மூடப்பட்டுள்ளன. மருந்து கடைகளை தவிர்த்து காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள் குறிப்பிட்ட நேரங்களில் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் சலூன் கடை இல்லாததால் ஏராளமானோர் தாங்களே தங்கள் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் ஹேர் கட்டிங் செய்து விடுகிறார்கள்.
தமிழகத்தில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
அண்மையில் கிரிக்கெட் வீரர் கோஹ்லிக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா முடி திருத்தம் செய்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியது. தற்போது, தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்திற்கு அவரது மனைவி ஹேர்கட் செய்துள்ள காட்சிகள் வைரலாகி வருகிறது.
விஜயகாந்திற்கு ஹேர்கட் செய்து கொண்டே பேசும் பிரேமலதா, 'வழக்கமாக கேப்டனுக்கு ஒருவர் முடி திருத்தம் செய்வார். தற்போது கொரோனா பாதிப்பால் பாதுகாப்பு நடவடிக்கையாக நானே இதை செய்கிறேன்' என்றார்.
இது முடிந்தவுடன் ஷேவிங் செய்து இரு காதுகளின் மேல் உள்ள கிர்தாக்களை டிரிம்மிங் செய்கிறார். இதையெல்லாம் முடித்துவிட்டு விஜயகாந்திற்கு ஷேவிங் செய்கிறார். அவரின் தலைமுடிக்கு டை அடித்து விடுகிறார். அப்போது பிரேமலதா கூறுகையில் கேப்டனுக்கு நான் முடி கட் செய்து விடுவது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்காவில் இருக்கும் போது அவருக்கு நான்தான் ஹேர்கட் செய்து விடுவேன் என்றார்.
முதல்வர் பெயரை இப்போது அதிகம் உச்சரிக்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்?
பின்னர் கேப்டனின் கை, கால்களில் உள்ள நகங்களை வெட்டினார் பிரேமலதா. கைகளில் நகங்களை எவ்ளோ ஸ்மூத்தா கட் செய்துள்ளேன் பாருங்கள் என பிரேமலதா சொல்ல, சைலண்ட்டாக சிரிக்கிறார் விஜயகாந்த். கால்களின் நகங்களையும் கட் செய்துவிட்டு கிரீம் பூசுகிறார். அப்போது கால்களில் உள்ள தழும்புகள் குறித்து பிரேமலதா கூறுகிறார்.
இதெல்லாம் என் கணவரின் வீரத் தழும்புகள். ஒவ்வொன்றும் சினிமாவில் ஃபைட் சீனின் போது ஏற்பட்டது. ஒவ்வொரு தழும்பிற்கும் ஒரு வரலாறு உண்டு என்றார்.
உண்மைதான்... விஜயகாந்தின் பைட்களுக்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளதே!.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”