சசிகலா வைத்த ட்விஸ்ட்: அதிமுக உறுப்பினர் காரில் கொடி கட்டிப் பயணம்

Vk Sasikala Again Use Aiadmk Flog : அதிமுக கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சசிகலா மீண்டும் அதிமுக கொடியை பயன்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vk Sasikala Arrival Chennai With Aiadmk Flog : சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற விகே சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், உடனடியாக அவர் சென்னை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தீவிர மருத்துவர்கள் கண்கானிப்பில் இருந்த அவர் கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ச் செய்யப்பட்டார்.

சசிகலா வரும் பாதை எது? வரவேற்பு வழங்கப்படும் இடங்கள் முழு விபரம்

அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து பெங்களூருவில் உள்ள தங்கும் விடுதிக்கு புறப்பட்ட அவர், அதிமுக கொடி பொருத்திய காரில் பயணம் செய்தார். ஆனால் சசிகலாவுக்கும் அதிமுகவுக்கு தொடர்பு இல்லை என்று கூறிவரும் அதிமுகவினருக்கு சசிகலாவின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக அமைச்சர்கள் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த எந்த உரிமையும் இல்லை என்றும், அவர் அவ்வாறு செய்தது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்தனர்.

ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாதான் அதிமுக பொதுச்செயலாளர். அதிமுக கொடியை பயன்படுத்த அவருக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை காவல்துறை டிஜிபி அலுவலகம் சென்ற அதிமுக மூத்த நிர்வாகிகள், அதிமுக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா கட்சி கொடியை பயன்படுத்தியது தவறு. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவிக்கப்பட்டது.

சசிகலா வருகை : ஏன் இவ்வளவு மிரளுகிறது அதிமுக?

இந்நிலையில் பெங்களூருவில் தங்கும் விடுதியில் தனிமைபடுத்தப்பட்டிருந்த சசிகலா இன்று சென்னை திரும்புகிறார். அவருக்கு வரவேற்பு அளிக்க தமிழகம் கர்நாடக எல்லையில் இருந்து அவர் தங்கும் தி.நகர் இல்லம் வரை பலத்த வரவேற்பு அளிக்க அமமுக கட்சி தொண்டர்கள் காத்திருக்கின்றனர். இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சசிகலா உட்பட அவரது வரவேற்பில் கலந்துகொள்ளும் யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று சென்னை கால்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சசிகலா வாகனத்தை 5 வாகனங்கள் மட்டுமே பின்தொடர வேண்டும் என்றும், பட்டாசு இசை வாத்தியங்கள், மற்றும் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அறிவுறுத்தலையும் மீறி சசிகலா தனது காரில், அதிமுக கொடியை பயன்படுத்தியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக எல்லையில்தான் அதிமுக கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதால், அவர் தமிழக எல்லைக்கு வரும்போது அதிமுக கொடியை போலீசார் அகற்றியுள்ளனர். அதன்பிறகு சசிகலா வேறு காரில் பயணம் செய்து வருகிறார். அநத காரிலும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த கார் அதிமுக அடிப்படை உறுப்பினருக்கு சொந்தமானது என்பதால், போலீசார் அதிமுக கொடியை  அகற்ற முடியமல் திகைத்து வருகின்றனர்.

சசிகலா காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்படும் – காவல்துறை தகவல்

தற்போது சசிகலாவுக்கு அதிமுக கொடி பயன்படுத்த தடை விதிகக்ப்பட்டுள்ள நிலையில், அனைவரையும் ஆச்சதரியத்தில் ஆழ்த்தும் லிதமாக சசிகலாவின் இந்த செயல் அரசியல் பார்வையாளர்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது. இந்நிலையில், சென்னை வரும் சசிகலா அடுத்து என்ன செய்ய போகிறார் என்பது குறித்து அதிமுக தரப்பில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vk sasikala tamil news sasikala arrival chennai use aiadmk flog

Next Story
News Highlights : 23 மணி நேர பயணம்; சென்னை வந்தார் சசிகலாvk sasikala, vk sasikala can claim to aiadmk two leaves symbol, சசிகலா, விகே சசிகலா, அதிமுக கொடி, அதிமுக சின்னம், sasikala used aiadmk flag in her car, aiadmk, sasikala, ttv dinakaran, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021, tn assembly elections 2021
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com