Advertisment

லாக்-டவுன் ‘கிஃப்ட்’டாக இது இருக்கட்டுமே... பட்ஜெட் விலையில் சூப்பர் ஸ்மார்ட் போன்கள்

Best Smart Phones Under Rupees 12,000: குறைந்த ஒளியில் இயங்கு ஒரு கேமராவை உள்ளடக்கிய triple camera setup இந்த மாடல் கைபேசியில் பின்பகுதியில் உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
best smartphone under rs 12,000, best phone under rs 10,000, realme narzo 10, nokia 6.1 plus, மொபைல் செய்திகள், ஸ்மார்ட்போன், infinix s5 pro, lenovo k10 note, honor 20i, samsung galaxy m11

best smartphone under rs 12,000, best phone under rs 10,000, realme narzo 10, nokia 6.1 plus, மொபைல் செய்திகள், ஸ்மார்ட்போன், infinix s5 pro, lenovo k10 note, honor 20i, samsung galaxy m11

Best Phone Tamil Nadu News: வீட்டிலிருந்து வேலை பார்க்கும் இந்த தருணத்தில் உடைந்த மற்றும் பழைய ஸ்மார்ட் கைபேசிகள் உள்ளவர்கள் தங்கள் குழுவினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது மிகவும் கடினம். ஏனென்றால் கைபேசி சாதனம் மிகவும் பின்தங்கி இருப்பது அல்லது உடைந்த திரையின் (screen) மூலம் எதையும் பார்க்க முடியாமல் இருப்பதே இதற்கு காரணம். இதன் காரணமாக நம்மில் பலபேர் புதிய ஸ்மார்ட் கைபேசிகளை வாங்க எதிர்பார்த்திருக்கிறோம். eCommerce தளங்கள் பொருட்களை டெலிவரி செய்ய அனுமதிக்கப்பட்ட பின்னர் அதிகம் தேடப்பட்ட பொருள் ஸ்மார்ட் கைபேசிகள் தான் என்பதிலிருந்து இது நிருபணமாகிறது.

Advertisment

ஊரடங்கு காலத்தில் ரூபாய் 12,000/- க்கு கீழ் நீங்கள் வாங்குவதற்கு ஏற்ற சிறந்த 6 ஸ்மார்ட் கைபேசிகளை பற்றி பார்க்கலாம்.

Realme Narzo 10

இந்தியாவில் உள்ள நடுத்தர வயதுக்காரர்களை குறிப்பாக 80-90 களில் பிறந்தவர்களை இலக்காக கொண்டு Realme தனது Narzo 10 வரிசை ஸ்மார்ட் கைபேசிகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. Realme Narzo 10 மாடல் கைபேசி 4GB RAM/128GB storage variant ரூபாய் 11,999/- க்கு கிடைக்கிறது. இந்த கைபேசியில் 6.5-inch HD+ display, MediaTek Helio G80 processor உள்ளது. மேலும் இதில் பின்பகுதியில் quad-camera setup உடன் 48MP முதன்மை கேமரா paired with an 8MP இரண்டாம் நிலை கேமரா மற்றும் இரண்டு 2MP sensors உள்ளது. முன்பகுதியில் செல்பி எடுப்பதற்காக 16MP கேமரா உள்ளது. மேலும் இதில் 5,000mAh battery உள்ளது.

Tata Sky DTH: பணம் கொடுக்கிறோம்ல... இந்த வசதியை இன்னும் ஏன் நீங்கள் முயற்சிக்கவில்லை?

Samsung Galaxy M11

சாம்சங் தனது Galaxy M11 ஸ்மார்ட் கைபேசியின் அடிப்படை மாடலான 3GB RAM + 32GB internal storage ஐ ரூபாய் 10,999/- க்கு சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது 6.4-inch HD+ display யுடன், Qualcomm Snapdragon 450 processor உள்ளது. சாம்சங்’ கின், One UI 2.0 on top of Google’s Android 10 operating system தில் இந்த கைபேசி இயங்குகிறது. மேலும் இந்த கைபேசி 5,000mAh battery யுடன் வருகிறது. பின்பகுதியில் triple camera setup உடன் 13MP முதன்மை கேமரா paired with a 5MP ultrawide-angle lens and another 2MP lens உள்ளது. முன்பகுதியில் செல்பி எடுப்பதற்காக 8MP கேமரா உள்ளது.

Honor 20i.

Honor 20i பழைய ஸ்மார்ட் கைபேசியாக இருக்கலாம் ஆனால் இது தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட கைபேசி போலவே இருக்கிறது. தற்போது ரூபாய் 10,999/- கிடைக்கும் இந்த கைபேசி மட்டும் தான் ஏற்கனவே Google Play services நிறுவப்பட்டு கிடைக்கும் மிக சில Huawei/Honor கைபேசிகளில் ஒன்றாகும். இதில் 6.21-inch full HD+ display, நிறுவனத்தின் சொந்த HiSilicon Kirin 710 processor paired with 4GB RAM/128GB storage உடன் வருகிறது. 3,400mAh battery உடன் வரும் இந்த மாடல் கைபேசியில் பின்பகுதியில் triple camera setup உள்ளது. இது 24MP முதன்மை கேமரா paired with a 2MP இரண்டாம் நிலை கேமரா மற்றும் ஒரு 8MP மூன்றாம் நிலை கேமராவை உள்ளடக்கியது. முன்பகுதியில் செல்பி எடுப்பதற்காக 32MP கேமரா உள்ளது.

Lenovo K10 Note

Lenovo K10 Note, Lenovo K9ன் பின்தொடர்ச்சி, இந்த மாடல் ஸ்மார்ட் கைபேசி எடை குறைக்கப்பட்டு நல்ல பட்ஜெட் கேமராவுடன் வருகிறது. ரூபாய் 10,999 க்கு கிடைக்கும் இந்த கைபேசி 6.3-inch full HD+ display, Qualcomm Snapdragon 710 processor paired with 4GB RAM/64GB storage உடன் வருகிறது. இந்த மாடல் கைபேசியில் 4,050mAh battery உள்ளது. 16MP முதன்மை கேமரா, 5MP இரண்டாம் நிலை கேமரா மற்றும் ஒரு 8MP மூன்றாம் நிலை கேமராவை உள்ளடக்கிய triple camera setup உடன் இந்த மாடல் கைபேசி வருகிறது. முன்பகுதியில் செல்பி எடுப்பதற்காக 16MP கேமரா உள்ளது.

Infinix S5 Pro

ரூபாய் 10,999/- விற்பனையாகும் Infinix S5 Pro ஸ்மார்ட் கைபேசி தான் இந்த விலையில் motorised pop-up செல்பி கேமரா வசதியுடன் வரும் ஒரே கைபேசியாகும். நமது மதிப்பாய்வில், இந்த விலைக்கு மிகச் சிறப்பாக செயல்படுகிற கைபேசி இது என்பதைக் கண்டறிந்தோம். 6.53-inch full HD+ display, MediaTek Helio P35 processor, 4GB RAM, 64GB storage மற்றும் 4,000mAh battery உடன் இந்த மாடல் வருகிறது. 48MP முதன்மை கேமரா paired with a 2MP இரண்டாம் நிலை கேமரா மற்றும் மூன்றாவதாக குறைந்த ஒளியில் இயங்கு ஒரு கேமராவை உள்ளடக்கிய triple camera setup இந்த மாடல் கைபேசியில் பின்பகுதியில் உள்ளது. முன்பகுதியில் செல்பி எடுப்பதற்காக 16MP கேமரா உள்ளது.

வீட்டிலிருந்து வேலை: ரூபாய் 40,000/-க்கும் குறைவான விலையில் ஐந்து லேப்டாப்

Nokia 6.1 Plus

தற்போது ரூபாய் 9,499/- க்கு விற்பனையாகும் Nokia 6.1 Plus, HMD Global லால் தயாரிக்கப்பட்டு நமது மதிப்பாய்வின் படி மிகச் சிறந்த உருவாக்கத் தரத்துடன் வருகிறது. 5.8-inch full HD+ display, Qualcomm Snapdragon 636 processor, 4GB RAM மற்றும் 64GB storage மற்றும் 3,060mAh battery இந்த கைபேசியில் உள்ளது. பின்பகுதியில் 16MP முதன்மை கேமரா மற்றும் 5MP இரண்டாம் நிலை கேமராவை உள்ளடக்கிய dual-camera setup இதில் உள்ளது. முன்பகுதியில் 16MP கேமரா உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment