Best Phones Under 10000 in India : எவ்வளவு செலவானாலும் ஒரு நல்ல போன் ஒன்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் இருப்பதுண்டு. ஆனால் சில நேரங்களில் நினைத்தது போல் போன் வாங்கிவிட இயல்வதில்லை. நாம் எதிர்பார்க்கும் வசதிகளுடன் ஒரு போன் வரும், அதற்காக பணம் சேர்க்க ஆரம்பித்தால், அதற்குள் அந்த போனின் அடுத்த வெர்ஷன் வெளியாகிவிடத் தொடங்கிவிடும்.
மேலும் படிக்க : 2018ம் ஆண்டு வெளியான இன்னோவேட்டிவ் போன்கள் எவையெவை ?
Best Phones Under 10000 in India
ஆனாலும் பட்ஜெட் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு எப்போதுமே சில சிறந்த ஸ்மார்ட்போன்களை நிறுவனங்கள் வெளியிடுவது உண்டு. சிறந்த போன்கள், 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்க உங்களுக்கான சிறு வழிகாட்டி இதோ.
1. ஆசூஸ் நிறுவனத்தின் Asus Zenfone Lite L1
6000 ரூபாய் மதிப்பிலான இந்த போன், இந்திய மார்கெட்டில் அக்டோபர் மாதம் அறிமுகமானது. ஜென்ஃபோன் லைட் L1 என்ற அந்த போன் பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
Asus Zenfone Lite L1 சிறப்பம்சங்கள்
5.45 இன்ச் திரை மற்றும் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 430 ப்ரோசசர்
ஸ்கீரின் டூ பாடி ரேசியோ 18:9
கேமரா : 13 எம்.பி ஒற்றை பின்பக்க கேமரா, 5 எம்.பி செல்பி கேமரா
பேட்டரி - 3000 mAh சேமிப்புத் திறன்
சேமிப்புத் திறன் : 2ஜிபி RAM உடன் கூடிய 16GB இண்டெர்நெல் ஸ்டோரேஜ்
விலை : 6000
இந்த போன் தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க
2. Mobiistar C1 Shine
வியட்நாமைச் சேர்ந்த இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவின் பட்ஜெட் வாடிக்கையாளர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்த போனின் விலை ரூ. 6,100. சிறப்பான தொடுதிரை மற்றும் கேமரா சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது இந்த போன்.
Mobiistar C1 Shine சிறப்பம்சங்கள்
அஸ்பெக்ட் ரேசியோ - 18:9
செல்பி கேமரா : 8 எம்.பி
பேட்டரி செயல் திறன் : 3000mAh
மேலும் படிக்க : இந்தியர்கள் 5000 ரூபாய்க்குக் குறைவான விலை கொண்ட போன்களை ஏன் விரும்புவதில்லை
3. Lava Z91
கடந்த மார்ச் மாதம் வெளியான லாவா நிறுவனத்தின் இந்த போனின் ஆரம்பகட்ட விலை ரூ.9999 ஆக இருந்தது. ஆனால் தற்போது இரண்டாயிரம் ரூபாய் வரை தள்ளுபடி செய்து புதிய விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அதன்படி நீங்கள் இந்த போனை வெறும் ரூ. 7,999 விலையில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
Lava Z91 சிறப்பம்சங்கள்
18:9 டிஸ்பிளே டூ ஸ்கிரீன் ரேசியோ கொண்டுள்ள இந்த போனின் அளவு 5.7 இன்ச் ஹெச்.டி ஆகும்.
ரெசலியூசன் : 1440×720 பிக்சல்கள்
2.5டி கர்வ்ட் டிஸ்பிளே
0.7 நொடிகளில் ஃபேஸ் ரெகக்னைசேசன்
மீடியாடெக் நிறுவனத்தின் MT6739 ப்ரோசசர் மற்றும் PowerVR GE8100 GPU சிப்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Asus ZenFone Max M2
டிசம்பர் 11ம் தேதி வெளியான இந்த போன், தற்போது வாடிக்கையாளர்களிடையே பெருத்த வரவேற்பினை பெற்றுள்ளது. ஃப்ளிப்கார்ட் வர்த்தக இணைய தளத்தில் சிறப்பு சலுகைகளுடன் இந்த போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
Asus Zenfone Max M2 போனின் சிறப்பம்சங்கள்
6.3 இன்ச் அளவுள்ள டிஸ்பிளே, மிகவும் மெல்லிய பெசல் விட்த்துடன் வெளியாகிறது.
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 632 ப்ராசசர் கொண்டு செயல்படும் இந்த போனின் பேட்டரி திறன் 4000 mAh ஆகும்.
ஒரு முறை இந்த போனை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
நோட்ச் டிஸ்பிளேவுடன் வரும் இந்த போனின் ஃபினிஷிங் மேட் ஃபினிஷிங்காக இருக்கிறது. ப்ரோ M2வானது க்ளோஸி ஃபினிஷிங்கில் வெளியாகிறது.
இதன் ரெசலியூசன் 1520 x 720 பிக்சல்களாகும்
அளவு : 158 mm x 76 mm x 7.7 mm
மேலும் படிக்க : ரெட்மீ நோட் 5 ப்ரோவிற்கு போட்டியாக களம் இறங்கும் Asus Zenfone Max Pro M2
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.