பி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்

இந்தியா முழுவதும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் இலவச நிகழ்ச்சிகளை பார்ப்பதில் அதிக அளவு நாட்டம் கொண்டுள்ளனர்

இந்தியா முழுவதும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் இலவச நிகழ்ச்சிகளை பார்ப்பதில் அதிக அளவு நாட்டம் கொண்டுள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BSNL launches Rs 97, Rs 365 prepaid plans

BSNL launches Rs 97, Rs 365 prepaid plans

BSNL Broadband Plan Superstar 300  :  சூப்பர்ஸ்டார் 300 என்ற பெயரில் ஒரு சூப்பர் ப்ராட்பேண்ட் பிளானை வழங்கியுள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம். ரூ. 749 - க்கு ரீசார்ஜ் செய்தால் பயனாளிகள் ஹாட்ஸ்டாரின் அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொள்ளலாம். லைவ் ஸ்போர்ட்ஸ், மூவிஸ், டிவி ஷோக்கள் இதில் அடங்கும்.

BSNL Broadband Plan Superstar 300  - சிறப்பு சலுகைகள்

Advertisment

ஏற்கனவே 999 ரூபாய்க்கான ஃப்ரீ அமேசான் ப்ரைம் சேவையை பி.எஸ்.என்.எல் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ப்ளான் மூலம் வாடிக்கையாளர்கள் 300 ஜிபி டேட்டாவை பெற்றிட இயலும். அதுவும் 50Mbps வேகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. விருப்பம் கொண்ட வாடிக்கையாளர்கள் 18003451500 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைத்து தங்களின் விருப்பத்தினை அறிவிக்கலாம்.

மேலும் படிக்க : சியோமியின் இந்த 2 சீரியஸில் புதிய போன்கள் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட நிறுவனத் தலைவர்…

தற்போது ஹாட்ஸ்டாரில் ஐ.சி.சி வேர்ல்ட் கப் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மேலும் தமிழில் பிக் பாஸ் 3 ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் யோசித்து இந்த ஆஃபரை வழங்கியுள்ளது.

Advertisment
Advertisements

மேலும் இந்தியா முழுவதும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் இலவச நிகழ்ச்சிகளை பார்ப்பதில் அதிக அளவு நாட்டம் கொண்டுள்ளனர் என்று சமீபத்தில் ஒரு சர்வே முடிவுகள் வெளியாகின.

மேலும் படிக்க : 24 மணிநேரமும் ஹாட்ஸ்டார் தான்… இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் வீடியோ கண்டெண்ட் ப்ளாட்பார்ம்…

பி.எஸ்.என்.எல் மட்டுமல்ல, ஏர்டெலும் கூட தற்போது ஓ.டி.டி. பிளாட்ஃபார்ம்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜீ சேவைகளை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Bsnl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: