Budget Smartphone LG W30 Specifications, Price, Launch, Availability, Review : பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்காகவே உருவாக்கப்பட்ட எல்.ஜில் நிறுவனத்தின் W சீரியஸ் ஸ்மார்ட்போன்களில் W10, W20 இந்தியாவில் ஏற்கனவே அறிமுகம் நிலையில் இதன் W30 சீரியஸ் ஸ்மார்ட்போன் அமேசான் ப்ரைம் டே சீரியஸில் ரூ. 9,990க்கு வெளியானது.
அரோரா க்ரீன், தண்டர் ப்ளூ, மற்றும் ப்ளாட்டினம் கிரே நிறங்களில் வெளியானது இந்த ஸ்மார்ட்போன்கள். ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் இந்த போன் வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆப்சனாகும்.
Budget Smartphone LG W30 சிறப்பம்சங்கள்
6.26 இன்ச் எச்.டி. திரை கொண்டது இந்த ஸ்மார்ட்போன்
இதன் அஸ்பெக்ட் ரேசியோ 19:9
மீடியாடெக் ஹெலியோ ப்ராசர் பயன்படுத்தப்பட்டுள்ளது
3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்
4000mAh பேட்டரி சேமிப்புத் திறன் கொண்டவை
LG W30 கேமரா
மூன்று பின்பக்க கேமராவை கொண்டுள்ளது. 12 எம்.பி. முதன்மை கேமரா, 13 எம்.பி. வைட் ஆங்கில் கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா ஆகும்.
செல்ஃபி கேமராவின் செயல்திறன் 16 எம்.பி. ஆகும்.
LG W30 Review
இது வரை இந்த ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தியவர்கள், இதன் திரை சூரிய வெளிச்சத்திலும் நன்றாக வேலை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் துல்லியமான நிறங்களை அளிக்க தவறிவிட்டது.
கால் செய்ய, மெசேஜ் அனுப்ப, வாட்ஸ்ஆப் பயன்படுத்த, இண்டர்நெட்டில் ஃப்ரௌசிங் செய்ய என தின பயன்பாட்டிற்கு நன்றாகவே உபயோகமாகும் ஒரு போன் இது. ஆனால் அதனை தாண்டி நீங்கள் எதிர்பார்த்தால் உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.
புகைப்படங்கள் அவ்வளவு துல்லியமாக இல்லை. நம் கண்கள் என்ன நிறங்களில் ஒரு பொருளை காட்டுகிறதோ அதே அளவிற்கு தான் கேமராவின் ப்ரோடெக்சன். அதிகமும் இல்லை குறைச்சலும் இல்லை என்ற அளவிற்கு மிகவும் நியூட்ரலான புகைப்படங்களையே இதில் எடுக்க முடியும்.
மேலும் படிக்க : ரூ. 8000க்குள் ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டுமா? இதை படிச்சுட்டு போங்க
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.