ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட்டையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்

இந்த வருடாந்திர நிகழ்வு வருகின்ற மே மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் மெக்எனெரி கன்வென்சன் சென்டர், சான் ஜோஸில் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

By: February 28, 2020, 2:44:50 PM

Coronavirus outbreak Facebook Microsoft cancels major events :  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி திகிலை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அதிக மக்கள் கூடும் மாநாடுகள் மற்றும் போட்டிகள் ஆகியவை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது. மேலும் படிக்க : கொரோனா வைரஸ் பாதிப்பு: மெக்கா பயணிகளுக்கு விசாவை நிறுத்திவைத்த சவுதி

ஃபேஸ்புக் நிறுவனம் கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு அந்நிறுவனத்தின் ஆண்டு மாநாட்டினை ( F8 Developer Conference 2020) ரத்து செய்துள்ளது. இந்த வருடாந்திர நிகழ்வு வருகின்ற மே மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் மெக்எனெரி கன்வென்சன் சென்டர், சான் ஜோஸில் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

அதே போன்று மைக்ரோ சாஃப்ட் நிறுவனமும், தங்களின் கேமர் டெவலப்பர்கள் கான்ஃபிரஸினை ரத்து செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் சான்ஃபிரான்ஸிஸ்கோவில் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. சோனியின் ப்ளே ஸ்டேசன் ஈவன்ட்டும் ரத்து செய்யப்பட்டது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நோய் தொற்று உலகம் முழுவதிலும் உள்ள 47 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை இந்த நோயினால் 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க : நீங்கள் அனுப்பிய வாட்ஸ்ஆப் செய்தி படிக்கப்பட்டதா என்பதை எப்படி அறிந்து கொள்வது?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus outbreak facebook microsoft cancels major events

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X