Google New APP: மக்கள் சமூக இடைவெளியை பராமரிக்க உதவுவதற்காக கூகுள் தன்னால் முடிந்ததை செய்கிறது. தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய நிறுவனமான கூகுள் ஒரு புதிய ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, அது augmented reality என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிஜ வாழ்க்கையில் மக்கள் சமூக இடைவெளியை பராமரிக்க உதவும். இந்த ஆப் Experiments with Google என்பதன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது எனவே அது Google Play Store ல் கிடைக்காது ஆனால் அதை தனியாக side-loaded செய்யலாம்.
‘Sodar’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப் பயனரின் ஸ்மார்ட் கைபேசி காமிராவை பயன்படுத்தி ஒரு காட்சி எல்லையை (visual boundary) உருவாக்கும், மேலும் அந்த தூரத்தை யார் மீறுகிறார்கள் எனப்தை தொடர்ந்துக் காண்பிக்கும். Sodar, “WebXR” ஐ பயன்படுத்தி சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை உங்கள் சூழலில் காட்சிப்படுத்த உதவும் என நிறுவனம் கூறுகிறது. Sodar ஐ ஆதரிக்கும் கைபேசி சாதணங்களில் பயன்படுத்தும் போது augmented reality, 2 மீட்டர் வட்டத்தை உங்களைச் சுற்றி உருவாக்கும்.
ஜியோ டபுள் டேட்டா: உங்களுக்கான சலுகை, மிஸ் பண்ணாதீங்க!
ஸ்மார்ட்போன் மற்றும் பயனர் ஒரே இடத்தில் இருப்பதாக கருதி, சுற்றளவு பயனரின் உண்மையான சூழலில் மிகைப்படுத்தப்படும். வட்டம் பயனருடன் தொடர்ந்து நகரும். இந்த AR தொழில்நுட்பம் Pokemon Go போன்ற விளையாட்டுகளை போன்றதாகும். மற்றொரு நபர் உங்கள் வட்டத்திற்குள் மீறினால், திரை பயனரை எச்சரிக்கும்.
இந்த ஆப்பை Chrome browsers மற்றும் ஆண்ட்ராய்ட் கைபேசிகளின் மூலம் அணுக முடியும். இந்த ஆப்பை பெற வேண்டுமானால் இந்த இணைப்பை உங்கள் கைபேசியில் பயன்படுத்துங்கள் அல்லது QR code ஐ உங்கள் கைபேசியிலிருந்து கணிணியில் ஸ்கேன் செய்யவும்.
கூகுள் Apple நிறுவனத்துடன் இணைந்து ஒரு தொடர்பு தடமறியும் API ஆப்பை உருவாக்கி அதை உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் சுகாதார நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. கோவிட் -19 பாதித்த நபர்களை சந்தித்த அல்லது கரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் நெருங்கிய அருகாமையில் இருந்த பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை அனுப்ப இந்த API ஆப்பை பயன்படுத்தலாம்.
ஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் - புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்
இந்த அப்பை மிகவும் பாதுகாப்பாக மாற்றுவதற்காக மற்றும் பயனர்களின் அந்தரங்கத்தை (privacy) பராமரிப்பதற்காகவும் Apple மற்றும் கூகுள் அகியவை தங்களது தொடர்பு தடமறியும் interface ஐ பயன்படுத்தத் திட்டமிடும், ஆப்பில் உள்ள location tracking பயன்படுத்துவதை தடைசெய்தது. இருப்பினும், பல அரசாங்கங்கள் தங்கள் நாட்டிற்குள் ஹாட்ஸ்பாட்களைக் கண்டுபிடிக்க இருப்பிட கண்காணிப்புடன் தங்கள் சொந்த interface ஐ பயன்படுத்துகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.