வழக்கமாக நாம் ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கவோ அல்லது நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று சேரவோ கூகுள் மேப்பை பயன்படுத்துவோம். போக்குவரத்து நெரிசல் இல்லாத பாதையை தேர்ந்தெடுத்து நாம் சென்று சேரவேண்டிய இடத்தை எளிதில் சென்று அடைய அல்லது நமது பயணங்களை திட்டமிடவோ, நாம் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும் போதோ அல்லது வேலைக்கு செல்லும்போதோ அல்லது சிறு பயணம் மேற்கொள்ளும் போதோ இந்த செயலியை பயன்படுத்துவோம். ஆனால் ஜெர்மனியை சேர்ந்த சைமன் வெக்கர்ட் என்ற ஓவியர் நம்பகமானதாகச் சொல்லப்படும் இந்த பயண வழிகாட்டு செயலியை புத்திசாலித்தனமாக தந்திரம் செய்து ஹேக் செய்துள்ளார்.
தென்னிந்திய உணவகத்தின் மதிப்பீடு
யூடியூபில் வெளியிட்டுள்ள ஒரு விடியோ பதிவில் சைமன், 99 ஸ்மார்ட் கைபேசிகளைக் கொண்டு இந்த பயண வழிகாட்டு செயலியை எவ்வாறு ஹக் செய்துள்ளேன் என கூறியுள்ளார். இந்த வீடியோவில் சைமன் ஒரு சிறிய கைவண்டியில் 99 கைபேசிகளையும் வைத்து இழுத்துக் கொண்டே சாலையில் நடந்து செல்வதை காணமுடிகிறது. சாலையில் சைமன் இந்த கைவண்டியை இழுத்து செல்கையில் அவரிடம் உள்ள 99 கைபேசிகளிலும் கூகுள் மேப் செயலி செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.
கூகுள் மேப் செயலி செயல்பட்டுக்கொண்டே இருக்கும் போது சைமன் சாலையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகரும் போது, கூகுள் அந்த இடத்தில் மிக அதிகமான பயனாளிகள் உள்ளதாக உணர்ந்து, அந்த இடத்தில் போக்குவரத்து மெதுவாக நகர்வதாக காட்டுகிறது. போக்குவரத்து நெரிசல் உள்ளதை ஒப்புக்கொள்ளும் கூகுள் அந்த தெருவில் மிக அதிகமான வாகனங்கள் செல்வதாக கூறி அந்த தெருவை போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக காட்டுகிறது. போக்குவரத்து நெரிசலே இல்லாத அந்த தெருவை போக்குவரத்து நெரிசல் உள்ள இடமாக கூகுள் காட்டுகிறது.
என்னுடைய மதுப்பழக்கத்தில் இருந்து நான் எப்படி வெளியேறினேன்?
இந்த மொத்த சம்பவமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தின் அலுவலகத்தின் வெளியே தான் நடந்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் ஒருவர் செயற்கையான ஒரு போக்குவரத்து நெரிசலை கூகுள் மேப் செயலியில் உருவாக்க முடியும் என்பது தெளிவாகிறது என சைமன் தனது வலைப்பக்கத்தில் ’கூகுள் மேப் ஹேக்’ என்று தலைப்பிட்டு எழுதியுள்ள பதிவில் கூறியுள்ளார். நிஜ உலகில் கூகுள் மேப் வழிகாட்டு செயலியை பயன்படுத்தி தங்கள் வாகனங்கள் சாலையிலுள்ள நீண்ட வரிசைகளில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என நினைக்கும் மக்கள் மத்தியில் இந்த ஹேக் மிக ஆழமான ஒரு தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.
2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி கூகுளால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பயண வழிகாட்டு செயலி, செயற்கைகோள் புகைபடங்கள், தெரு வரைபடங்கள், தற்போதைய போக்குவரத்து நிலவரங்கள், பாதை திட்டமிடல் மற்றும் வான்வழி புகைபடங்களை வழங்கி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.