இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது கூகுளின் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL போன்கள். ஃப்ளிப்கார்ட் வர்த்தக இணையதளத்தில் இந்த போன்கள் விற்கப்படுகின்றன. அக்டோபர் 11ம் தேதியில் இருந்து ப்ரீ புக்கிங் செய்து கொள்ளும் வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தது ஃப்ளிப்கார்ட்.
பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL விலை மற்றும் நிறம்
க்ளியர்லி வொய்ட் (வெள்ளை), ஜஸ்ட் ப்ளாக் (கறுப்பு) மற்றும் நாட் பிங்க் ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகிறது இந்த போன். இதில் 64ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட கூகுள் பிக்சல் 3ன் விலை ரூ. 71,000 ஆகும். அதே போல் 128 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட போனின் விலை ரூ. 80,000 ஆகும்.
பிக்சல் 3 XL , 64 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட போனின் விலை 83,000 ஆகும். 128 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட போனின் விலை ரூ. 92,000 ஆகும்.
எக்சேஞ்ச் ஆஃபரில் கூகுள் மினி ஸ்பீக்கர் இலவசம்
இந்தியாவில் இருக்கும் மஹேஷ் டெலிகாம் “வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய பிக்சல் அல்லது நெக்சஸ் போன்களை ஆஃப் லைன் ஸ்டோர்களில் கொடுத்து புதிய போன்கள் வாங்கினால், அவர்களுக்கு கூகுள் மினி ஸ்பீக்கர் இலவசமாக வழங்கப்படும்” என்ற அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.
ஹெ.எச்.டி. எஃப்.சி வங்கியின் கிரடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் இந்த போனை வாங்கினால் 5 % கேஷ்பேக் பெற முடியும்.
மேலும் படிக்க : சிறந்த கேமராவினை கொண்டிருக்கும் பிக்சல் 3 போன்
சிறப்பம்சங்கள் ஒரு பார்வை
4 ஜிபி RAM கொண்டிருக்கும் இந்த போன்களில் குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 845 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு போன்களும் ஆண்ட்ராய்ட் பை இயங்கு தளத்தில் இயங்கும். 8 எம்.பி திறன் கொண்ட இரட்டை முன்பக்க கேமராக்கள் மற்றும் 12.2 எம்.பி பின்பக்க கேமராவினை கொண்டிருக்கிறது.
பிக்சல் 3 போன்
5.5 இன்ச் ஃபுல் எச்.டி + ஃப்ளெக்சிபில் ஓ.எல்.ஈ.டி ( flexible OLED ) கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த போனின் டிஸ்பிளே ஃபார்மட் 18:9 இன்ச் ஆகும். 2,915mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.
பிக்சல் 3 XL போன்
6.3 இன்ச் QHD+ OLED டிஸ்பிளே கொண்டது. திரையின் ஃபார்மட் ரேசியோ 18.5 : 9 ஆகும். பேட்டரி திறன் 3,430 mAh. மேலும் படிக்க : பிக்சல் 3 XL போனின் முழுமையான சிறப்பம்சங்கள்