WhatsApp: பிரபலமான குறுஞ்செய்தி அனுப்பும் ஆப்பான வாட்ஸ் அப்பில் டெக்ஸ்ட்களை வாசிக்கும் போது பொதுவாக ஒரு நீல நிற சரி குறியீடு ஏற்படும். இதன் மூலம் நாம் அதை படித்து விட்டதாக அந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் அறிந்துக் கொள்வார். ஆனால் iPhoneல் இந்த நீல நிற சரி குறியீடு ஏற்படாமலும், அனுப்பியவர் அறியாமலும் பயனர்களால் குறுஞ்செய்திகளைப் படிக்க முடியும்.
அன்லிமிடெட் லைவ் சேவை : கேண்டி க்ரஷ் பிரியரா நீங்கள்?
“read receipts” ஐ தவிர்க்க பெரும்பாலானவர்கள் Airplane Mode ஐ பயன்படுத்துவார்கள். இந்த முறை டேட்டாவையும் மூடுகிறது. எனவே அனுப்பியவரின் வாட்ஸ் அப், அந்த குறுஞ்செய்தி வாசிக்கப்பட்டதா இல்லையா என்பதை அறிந்துக் கொள்ள முடியாது. ஆனால் Airplane Mode ஐ turn off செய்தவுடன் நீல நிற சரி குறியீடு தோன்றும். இதற்கான அர்த்தம் பெறுனர் (recipient) offline இல் இருக்க வேண்டும் என்பதாகும்.
.ஒருவர் read receipts முழுவதுமாக turn off செய்யலாம் ஆனால் அவர்கள் மற்ற பயனர்களிடமிருந்து அவர்களைப் பார்க்க மாட்டார்கள்.
எனினும் இந்த இரண்டு தந்திரங்களையும் விட சிறப்பாக வேலை செய்யும் முறை ஒன்று உள்ளது. அதற்கு settings மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை.
இந்த தந்திரம் வேலை செய்ய டெக்ஸ்ட் வரும்போது வாட்ஸ் அப் திறக்கப்படாமல் இருக்க வேண்டும். மேலும் உங்களுடைய iPhone ஐ iOS 13 க்கு மேம்படுத்தியுள்ளதையும் நீங்கள் உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குறுஞ்செய்தி வரும் போது lock screen ல் ஒரு notification தோன்றும். திரையில் உள்ள செய்தியில் வழக்கத்தை விட சற்று நீண்ட நேரம் அழுத்தினால் முழு டெக்ஸ்டும் தோன்றும்.
இந்திய அரசு வெளியிட்ட கொரோனா வைரஸ் ஆப் - உங்கள் மொபைலில் உள்ளதா?
குறுஞ்செய்தி மிக நீளமாக இருந்தாலும் அதை முழுவதுமாக மேலே அல்லது கிழே நகர்த்தி பார்க்கலாம். முக்கியமாக இந்த notification ஐ வாசிக்கும் போது நில நிற சரி குறியீடை அது தூண்டாது. உங்களுடைய டெக்ஸ்ட் notification ஐ நீங்கள் swipe செய்துவிடவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் அதை swipe செய்துவிட்டால் உங்களால் டெக்ஸ்டில் snoop செய்ய முடியாது.
இது iOS 13 க்கு மேம்படுத்தக்கூடிய எந்த கருவியிலும் iPhone 6S மற்றும் 6S Plus, iPhone SE, iPhone 7 மற்றும் 7 Plus, iPhone 8 மற்றும் 8 Plus, iPhone X, iPhone XS, XS Max மற்றும் XR, iPhone 11, 11 Pro மற்றும் 11 Pro Max உட்பட அனைத்திலும் இது வேலை செய்யும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.