Huawei Mate X Launch Date Announced : இந்த வருடத்தின் ஆரம்பம் முதலே பேசப்பட்ட இரண்டு முக்கியமான போன்கள் சாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்ட் மற்றும் ஹூவாய் நிறுவத்தின் மேட் எக்ஸ். மேட் எக்ஸ் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் பிப்ரவரி மாதம் வாடிக்கையாளர்கள் மற்றும் டெக் ப்ரியர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
ஜூன் மாதம் இந்த போனின் அறிமுக விழா இருக்கும் என்று அறிவிக்கப்படிருந்தது. ஆனால் டிவைஸில் ஏற்பட்ட சில பிரச்சனைகளை சரி செய்வதற்காக நேரம் ஒதுக்கியிருந்தது. பின்னர் இந்த வருடம் செப்டம்பர் மாதம் அந்த போன் விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனமும், தேதி குறிப்பிடாமல் தங்களின் முதல் மடக்கு போனான கேலக்ஸி ஃபோல்டின் அறிமுக விழாவினை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது. எந்த நாட்டில் எல்லாம் 5ஜி நெட்வொர்க் பயன்பாட்டில் உள்ளதோ அங்கெல்லாம் இந்த போன்கள் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஆண்ராய்ட் 10 Q அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ! உங்க போனும் இருக்குதான்னு செக் பண்ணிக்கங்க…
Huawei Mate X சிறப்பம்சங்கள்
மேட் எக்ஸ், கேலக்ஸி ஃபோல்டினை விட சற்று பெரியது. ஃபினிஷிங்கும் மிக சிறப்பாக வெளி வந்துள்ளது. சாம்சங் ஃபோல்ட் ஒரு புத்தகம் போல் உள்பக்கமாக மடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட, ஒற்றை ஓ.எல்.ஈ.டி. ஃப்லெக்சிபிள் திரை வெளிப்புறமாக மடிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அளவு - மேட் எக்ஸ் 11 எம்.எம். திக்னெஸ் கொண்டது
நெட்வொர்க் - மேட் எக்ஸ் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்குவதற்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்டுள்ளது
பேட்டரி சேமிப்புத் திறன் - 4500 mAh (55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்) – மேட் எக்ஸ்
விலை - மேட் எக்ஸ் போனின் விலை 2299 யூரோ
மேலும் படிக்க : இனிமேல் நீங்கள் வாட்ஸ்ஆப் மூலமாகவும் பணம் அனுப்பிக் கொள்ளலாம்… அப்டேட் ரெடி! அனுமதிக்காக வெய்டிங்…