6 மாதத்துக்கு தினம் 25 ஜிபி டேட்டா – ஜியோ பற்றிய தகவல் உண்மையா?

Jio and Facebook: ஜியோ மற்றும் பேஸ்புக் ஆகியவை இப்போது நாள் ஒன்றுக்கு 25GB டேட்டா வீதம் 6 மாதங்களுக்கு தருவதாக உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததா?

By: Updated: April 30, 2020, 8:00:06 PM

JIO Updates: ஜியோ மற்றும் பேஸ்புக் ஆகியவை இப்போது நாள் ஒன்றுக்கு 25GB டேட்டா வீதம் 6 மாதங்களுக்கு தருவதாக உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததா? செய்தி உண்மையாக இருப்பதற்கு வெகு தொலைவில் இருப்பதால், நீங்கள் படித்ததை இன்னும் நம்ப வேண்டாம். ஜியோ மற்றும் பேஸ்புக் ஆகியவை $5.7 பில்லியன் அளவுக்கான ஒப்பந்தம் போட்டது முதல் இந்த செய்தி உலாவி வருகிறது. ஜியோ மற்றும் பேஸ்புக் ஆகியவை அது போன்ற எந்த அறிவிப்பையும் செய்யாத நிலையில் இந்த செய்தி மக்களை கவர்ந்திழுக்க ஸ்பேமர்களின் மற்றொரு வித்தை மட்டுமே.

உஷாரா இருங்க மக்களே… உங்க சேமிப்புப் பணத்தை குறி வைக்கும் கும்பல்: ஸ்டேட் வங்கி 6 டிப்ஸ்

நல்ல செய்தி, கோவிட் -19 ஊரடங்கை முன்னிட்டு ஜியோ மற்றும் பேஸ்புக் ஆகியவை ஆறு மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 25GB டேட்டா என்ற அளவில் அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் தருகிறது. இந்த ஆப்பை உடனே பதிவிறக்கம் செய்யுங்கள், என அந்த போலி செய்தி கூறுகிறது. அந்த இணைப்பை நீங்கள் சொடுக்கினால் உங்களை ஜியோ வலைதளத்தை போலவே தோற்றமளிக்கும் ஒரு போலி வலைதளத்துக்கு எடுத்துச் செல்லும். அங்கு சென்றதும் உங்கள் கைபேசி எண்ணை உள்ளீடு செய்யச் சொல்லும். நீங்கள் உள்ளீடு செய்ததும் ஒரு விளம்பர பக்கத்துக்கு கொண்டுச் செல்லும். அங்கே நீங்கள் அந்த விளம்பரத்தை கிளிக் செய்ய கட்டாயபடுத்தப்படுவீர்கள். இந்த செயல்பாடு உங்கள் கைபேசி அல்லது கணிணியை malware ஆல் பாதிப்படைய செய்யும்.


பயனர்கள் தேவை இல்லாத இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் தங்களது தனிப்பட்ட விவரங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் முன்னர் ஜியோ தனது வாடிக்கையாளர்களை எச்சரித்திருந்தது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அதைப் பற்றி அறிவிப்பது வரை அல்லது நம்பகமான இடத்திலிருந்து செய்தி வருவது வரை எந்த செய்திகளையும் நம்ப வேண்டாம்.

ரூ.498க்கு இலவச ரீசார்ஜ்? – ஜியோ பற்றிய வாட்ஸ் அப் தகவல் உண்மையா?

உலகம் கரோனா வைரஸுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த நோய் குறித்தான போலி செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் பரவி வருகிறது. பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் டிவிட்டர் போன்ற பெரிய நிறுவனங்கள், சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Jio and facebook giving 25gb data daily for 6 months fake news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X