Nandagopal Rajan
Samsung Galaxy S10, S10+, S10e, S10 5G Features : சாம்சங் நிறுவனத்தின் புதிய எஸ் சீரியஸ் போன்கள் இன்று அறிமுகமானது. 4 வித்தியாசமான வேரியண்ட்டுகளில் வெளியான இந்த போனில் 5ஜி தொழில் நுட்பத்தில் இயங்கும் போனும் அடக்கம்.
S10 5G எனப்படும் 5ஜி போன் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்த இயலாது. ஆனால் S10, S10+ மற்றும் S10e போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு போன்களும் குவாட் HD+ கர்வ்ட் டைனமிக் AMOLED திரையுடன் வெளியாகின்றன. HDR10+, ப்ளூ லைட் ரிடெக்சன், 1200 நிட்ஸ் பிரைட்னஸ் போன்ற சிறப்பான அம்சங்களை தருகிறது இந்த போன்.
அப்பர் கிளாசிஃபைட் போன் கேட்டகிரியில் வெளியாகும் இரண்டு போன்களும் மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளாது. அந்த இரண்டு போன்களும் வைட் மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் (12 MP) மற்றும் அல்ட்ரா வைட் லென்ஸ் (16 MP) செயல்திறன்களை கொண்டவை.
Samsung Galaxy S10, S10+, S10e, S10 5G Features போன்களின் சிறப்பம்சங்கள் :
6.4 இன்ச் திரையளவு, கூடுதலாக ஒரு 8 எம்.பி. வைட் ஆங்கிள் கேமரா போனின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது , 4100 mAh பேட்டரி, 12GB RAM-ல் இந்த போன் இயங்கும்.
S10 போனின் செல்பி கேமரா 10 எம்.பி செயல் திறன் கொண்டவை. பேட்டரி 3,400 mAh ஆகும். அதிக பணம் கொடுத்து சாம்சங் எஸ் சீரியஸ் போன்கள் வாங்க விரும்பாதவர்களுக்கு என இரண்டு மாடல்கள் அறிமுகமாகியுள்ளன.
S10 மற்றும் S10e போன்கள் குறைவான விலைக்கு விற்பனைக்கு வர காரணம் குவாட் எச்.டி + டிஸ்பிளேவும் மூன்று ரியர் கேமராக்களும் இல்லாததும் ஒன்று.
S10e போன் மிகவும் சிறிய அளவு போனாகும். 5.8 இன்ச் ஃபுல் எச்.டி மற்றும் ஃப்ளாட் டைனமிக் AMOLED திரையை பெற்றுள்ளது. இரண்டு கேமராக்களை கொண்டிருக்கிறது இந்த போன். 6ஜிபி மற்றும் 8ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கும். 3100 mAh பேட்டரியை பெற்றுள்ளது.
மேலும் படிக்க : வெளியானது உலகின் முதல் ஃபோல்டபிள் போன்... விலை என்ன தெரியுமா ?
Samsung Galaxy S10, S10+, S10e, S10 5G Features விலை மற்றும் விற்பனை
இந்த போன்களை இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மார்ச் 8ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விற்பனைக்கு வருகிறது.
கேலக்ஸி S10 போனின் விலை 899.99 டாலர்களாகும். கேலக்ஸி S10+ போனின் விலை $999.99 ஆகும். மற்றும் 749.99 டாலருக்கு விற்பனையாகிறது Galaxy S10e.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.