Advertisment

அடுத்த வார வெளியீட்டிற்காக காத்திருக்கும் ஸ்மார்ட்போன்கள் ஒரு பார்வை

Infinix dual camera phone : இந்த மூன்று ப்ராண்டட் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Smartphones launching next week in India, K20 Pro, Xiaomi K20,, Smartphones launching next week Realme X, Realme 3 Lite, Redmi K20 Pro

Smartphones launching next week in India

Smartphones launching next week Realme X, Realme 3 Lite, Redmi K20 Pro :  அடுத்த வாரம் இந்தியாவில் வெளியாக காத்திருக்கும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் ஒரு பார்வை. வருகின்ற வாரத்தில் மட்டும் ரியல்மீ நிறுவனத்தில் இருந்து இரண்டு ஸ்மார்ட்போன்களும்,  ரெட்மியில் இருந்து ஒரு ஸ்மார்ட்போனும் வெளியாகின்றது.

Advertisment

Redmi K20 Pro, Redmi K20: Launch on July 17

ரெட்மி நிறுவனத்தின் கே20 ப்ரோ, ரெட்மி கே20 ஆகிய இரண்டு போன்களும் வருகின்ற 17ம் தேதி வெளியாகின்றன. தன்னுடைய ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாத்தின் போது இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன.

இந்த ரெட்மி கே20 சீரியஸில் வரும் ஸ்மார்ட்போன்கள் 6.39 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது.

இன் - டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்டுள்ளது

மூன்று பின்பக்க கேமராவையும் ( 48MP+8MP+13MP) அது பெற்றுள்ளது.

4,000mAh பேட்டரி செயல் திறன் கொண்டவை

20 எம்.பி. செல்ஃபி கேமராவை இது பெற்றுள்ளது

ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ரூ. 7000 பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டுமா? இந்த லிஸ்ட்ட கொஞ்சம் செக் பண்ணுங்க

Realme X

இந்த ஸ்மார்ட்போன் வருகின்ற 15ம் தேதி மதியம் 12:30 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் இதன் ஸ்பைடர்மேன் வெர்ஷனும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Realme X ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக 6.5 ஃபுல் எச்.டி. பெசல் அற்ற ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை கொண்டுள்ளது.

திரைக்குள்ளே செயல்படக்கூடிய ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

16 எம்.பி மோட்டோரைஸ்ட் பாப்-அப் செல்ஃபி கேமராவும், 48 எம்.பி செயல்திறன் கொண்ட முன்பக்க கேமராவும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 710 ப்ரோசசரில் இயங்கக் கூடிய இந்த ஸ்மார்ட்போன் கூகுள் 9.0 பையை அடிப்படையாக கொண்டு செயல்படும் ColorOS 6 இயங்கு தளத்தில் இது செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : ஜூலை 15ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது ரியல்மீ X ஸ்மார்ட்போன்…2019

Realme 3 Lite

ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் லைட்டர் வெர்ஷன் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்த மூன்று ப்ராண்டட் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது.

Smartphone Redmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment