WhatsApp Status Sharing Facebook story, Instagram story : வெகுநாட்களாக வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராமை ஒன்றாக இணைக்கும் திட்டத்தை ஆராய்ந்து வருகிறது ஃபேஸ்புக் நிறுவனம். தற்போது அதற்கான முதல்படியாக வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை ஃபேஸ்புக் ஸ்டோரியாகவும், இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாகவும் பகிர்ந்து கொள்ள ஒரு புதிய அப்டேட்டினை வெளியிட்டுள்ளது வாட்ஸ்ஆப்.
டேட்டாஷேரிங் ஏ.பி.ஐ மூலமாக இதனை ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களில் நடைமுறைப்படுத்த உள்ளது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது டெஸ்டிங்கிற்காக பீட்டா வெர்ஷனில் இயங்கி வருகிறது இந்த அப்டேட். ஏற்கனவே ஃபேஸ்புக் தங்களுடைய பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை முறையாக பாதுகாக்க தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டினை கடந்த இரண்டு வருடங்களாக சந்தித்து வருகின்றது.
மேலும் படிக்க : உங்கள் ப்ரொஃபைல் பிக்சரை இனி யாராலும் டவுன்லோடு செய்ய முடியாது
இந்த காரணத்தால் லிங்க் ஷேரிங்கிற்கு பதிலாக Application programming interface மூலமாக ஷேரிங் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளது வாட்ஸ்ஆப். மேலும் இன்ஸ்டாகிராமிலும் அது ஒன்றையொன்று லிங்க் செய்யாது. முழுக்க முழுக்க இரண்டு தனிப்பட்ட நிகழ்வுகளாக தான் இது போஸ்ட் ஆகும். பீட்டா வெர்ஷனில் க்ராஸ் போஸ்ட் மூலமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போஸ்ட் செய்ய பட்டன் வைக்கப்பட்டுள்ளது .
மேலும் படிக்க : அடிக்கடி ஆட்டோவில் தனியாக பயணிப்பவர்களா நீங்கள்? இந்த அப்டேட் உங்க பாதுகாப்புக்குத் தான்