சமூக வலைதளமன வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை சில புகைப்படங்கள் தெளிவில்லாமல் இருப்பது, மேலும் அவற்றை நீக்கியப் பிறகு அவை கைபேசியிலோ அல்லது எஸ்டி கார்டிலோ தெரியாமல் இருப்பது. பயனாளர்களால் இந்த புகைப்படங்களை திரும்ப கண்டுபிடிக்கமுடியாது. அப்படி திரும்ப வேண்டும் என்றால் அதை அனுப்பியவர்களிடம் தான் அவற்றை மீண்டும் ஒருமுறை அனுப்ப சொல்ல வேண்டும்.
இருப்பினும் புகைப்படங்களை பதிவிறக்க பயனாளர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு வழி உள்ளது. அதன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைபடங்கள் தானாக கைபேசியில் சேமிக்கப்படும் மேலும் அவற்றை நிரந்தரமாக அழிக்க முடியாது.
சாம்சங்கிற்கு போட்டியாக களம் இறங்குகிறதா இந்த ஸ்மார்ட்போன்? ஆச்சரியப்பட வைக்கும் சிறப்பம்சங்கள்!
ஆண்டுராய்டு வகை கைபேசியுள்ளவர்கள் முதலில் தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ் அப் செயலியை எடுத்து அதில் உள்ள செட்டிங்ஸ் (settings) ஐ திறந்து chat ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். அடுத்து Show newly downloaded media in your phone’s gallery ஆப்ஷனை அடுத்து ஆன் செய்துக் கொள்ளுங்கள்.
அதே போல ஐபோன் பயன்படுத்தும் பயனாளர்கள் வாட்ஸ் அப் செயலியை எடுத்து அதில் உள்ள செட்டிங்ஸ் (settings) ஐ திறந்து chat ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். அடுத்து Save to Camera Roll option ஐ ஆன் செய்துக் கொள்ளுங்கள்.
ஆண்டுராய்ட் மற்றும் ஐபோன் பயனாளர்கள் மேலே குறிப்பிட்ட இந்த ஆப்ஷனை பயன்படுத்திய பிறகு, அவர்களின் கைபேசியில் உள்ள புகைப்படங்களை நிரந்தரமாக அழித்துவிட முடியாது. மேலும் பயனாளர்கள் அவர்கள் விரும்பும் போது அவற்றை பார்த்துக் கொள்ளலாம்.
Jio Vs Airtel Vs Vodafone : சிறந்த மாதாந்திர ப்ளான்களை தரும் நெட்வொர்க் எது?
வாட்ஸ் அப் செயலிக்கு தற்போது உலகெங்கும் 2 பில்லியன் பயனாளர்கள் உள்ளனர். உலகில் உள்ள இந்த மொத்த எண்ணிக்கையில் கால் பகுதி பயனாளர்கள், இந்த சமூக வலைதள மெசேஜிங் மேடையை end-to-end encryption முறையில் பயன்படுத்துகின்றனர். முகநூல் (Facebook) நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த வாட்ஸ் அப் செயலி கடந்த ஆண்டு இந்தியாவில் 400 மில்லியன் பயனாளர்க்ளை கடந்து விட்டதாக தெரிவித்துள்ளது.