எனக்கு ஓட்டு இல்லையா! இது யார் செய்த தவறு? வாக்கு சாவடியில் கொந்தளித்த ரமேஷ் கண்ணா!

இதே நிலைமை தான் ஓட்டு போட ஆவலாக இருக்கும் சாமானிய மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது

இதே நிலைமை தான் ஓட்டு போட ஆவலாக இருக்கும் சாமானிய மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor ramesh kanna video

actor ramesh kanna video

actor ramesh kanna video : வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தினால் நடிகர் ரமேஷ் கண்ணா வாக்குசாவடியில் இருந்து திருப்பி அனுப்பபட்டார். இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தீயாக பரவி வருகிறது.

Advertisment

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றன்ர்.

பொதுமக்களுடன் சேர்ந்து பிரபலங்களும் அரசியல் தலைவர்களுக்கு வாக்களித்து வரும் நிகழ்வு காலை முதல் அனைத்து மீடியாவிலும் ஒளிப்பரப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் ரமேஷ் கண்ணா தனது வாக்கினை பதிவு செய்ய வாக்குசாவடி சென்றுள்ளார். ஆனால் அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களார் பெயர் பட்டியலில் அவருடைய பெயர் இல்லை என கூறி ரமேஷ் கண்ணாவை தேர்தல் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க., தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் முதியவர்கள் !

Advertisment
Advertisements

இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர், ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ ஒரே வீட்டில் இருக்கும் எனது மனைவிக்கு ஓட்டு இருக்கிறது. ஆனால் எனக்கு இல்லை. என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் அது யார் தவறு.. நிலைமை இப்படி இருக்கும் போது தேர்தல் ஆணையம் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என பிரச்சார விளம்பரம் வெளியிடுகிறது. ஆனால் பட்டியல் தயார் செய்வதில் கவனக்குறைவாக இருப்பதா ” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரமேஷ் கண்ணாவிற்கு எற்பட்ட இதே நிலைமை தான் ஓட்டு போட ஆவலாக இருக்கும் சாமானிய மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்பது தான் இயல்பான உண்மை.

18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்… 3 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம்

Election Commission General Election

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: