மூளைக்குள்ள மண்ணா? இந்த மீனை பார்த்து இப்படி கேட்கவே முடியாது; வித்தியமான தோற்றத்தில் புதிய கண்டுபிடிப்பு

இதுவரை 5600 முறை கடலுக்குள் சென்ற நபர்கள் இதுவரை 27,600 மணி நேர கடல் நிகழ்வுகளை படமாக்கியுள்ளனர். ஆனால் இந்த மீன் ஒரே ஒரு முறை மட்டுமே ஆராய்ச்சியாளர்களின் கண்களில் சிக்கியுள்ளது.

Bizarre barreleye fish : இந்த மாத துவக்கத்தில் மோண்டெரே பே அக்வேரியம் ரிசர்ச் இன்ஸ்டியூட் (MBARI) ஒரு மீனின் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தது. பாரேலேயே வகையைச் சேர்ந்த இந்த மீனின் தலையில் கண்களை மட்டுமே பார்க்க முடிகின்றது. ஏன் என்றால் இதன் தலைப் பகுதி முழுமையாக ட்ரான்ஸ்பெரண்டாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் மிகவும் அரிதாகவே ஆராய்ச்சியாளர்களின் கண்களில் சிக்கியதாக அந்த நிறுவனம் கூறுகிறது. இதுவரை 5600 முறை கடலுக்குள் சென்ற நபர்கள் இதுவரை 27,600 மணி நேர கடல் நிகழ்வுகளை படமாக்கியுள்ளனர். சிறந்த தொழில்நுட்பத்தின் மூலம் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த மீன் ஒரே ஒரு முறை மட்டுமே ஆராய்ச்சியாளர்களின் கண்களில் சிக்கியுள்ளது.

டென்னிஸ் பந்தில் கிரிக்கெட்லாம் ரொம்ப பழசு பாஸ்… அதிரடி காட்டும் சூப்பர் கேம் இது – வைரல் வீடியோ

2000 முதல் 2600 அடி ஆழம் கொண்டுள்ள கடல் பகுதியில் இந்த 15 செ.மீ நீளம் கொண்டுள்ளா மீனை நாங்கள் கண்டோம். கடலின் இந்த ஆழத்தில் சூரிய வெளிச்சமே இருக்காது. 2009ம் ஆண்டு நடைபெற்ற ஆராய்ச்சி ஒன்றில் இந்த மீன் தான் உண்ணும் உணவை பார்ப்பதற்காக கண்களை முன்னோக்கி நகர்த்தும் பண்பு கொண்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அண்ணன் இல்லாத குறையை நீக்கிய CRPF வீரர்கள்; வீர மரணம் அடைந்தவரின் குடும்பத்தினர் நெகிழ்ச்சி

இந்த ஆராய்ச்சி முடிவுகளும், வீடியோ காட்சியில் மீன் பதிவானதையும் பார்த்த கடல் ஆராய்ச்சியாளர்களுக்கு இது மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது என்று அந்த நிறுவனம் தங்களின் மற்றொரு ட்வீட்டில் பதிவு செய்துள்ளது. இந்த மீன் குறித்தும், இந்த மீனை பார்த்த அனுபவம் குறித்தும் பலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bizarre barreleye fish with transparent head spotted in deep sea

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com