இசை மருந்தாகும்... பசியில் இருக்கும் குரங்குகளுக்கு பியானோ வாசிக்கும் கலைஞர்

இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்டில் தெரிவியுங்கள்.  

இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்டில் தெரிவியுங்கள்.  

author-image
WebDesk
New Update
இசை மருந்தாகும்... பசியில் இருக்கும் குரங்குகளுக்கு பியானோ வாசிக்கும் கலைஞர்

British pianist performs classical music to soothe hungry wild monkeys in Thailand :  நம்முடைய இக்கட்டான சூழல் முழுவதும் நம்முடன் பயணிப்பது இசை மட்டும் தான் என்பதை நாம் என்றோ அறிவோம். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைகளுடன் சேர்த்து இசையையும் மருந்தாக தருவதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருப்போம். எஸ்.பி.பி. சிகிச்சை பெற்று வந்த காலத்திலும் கூட அவருக்கு பிடித்த இசை இசைக்கப்பட்டது.

Advertisment

மேலும் பார்க்க : ”முடிய வெட்டாதீங்க…” இந்த குட்டி உருவத்துக்குள் இவ்வளவு கோபமா?

Advertisment
Advertisements

ஆனால் மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் இசை மருந்தாகும் என்பதை நிரூபித்துள்ளார் இந்த பியானோ இசைக் கலைஞர்.  நவம்பர் 21ம் தேதி அன்று பால் பார்டோன் என்பவர் க்ரீன்ஸ்லீவ்ஸ், பீத்தோவனின் ஃபர் எலிஸ் மற்றும் மைக்கேல் நைமனின் டைரி ஆஃப் லவ் போன்ற இசைக் கோர்வைகளை பெரிய பியானோ ஒன்றில் வாசித்துக் கொண்டிருந்தார். அந்த இசையை கேட்ட அங்கிருந்த குரங்குகள் அவரை சூழ்ந்து அவர் இசையை ரசித்த வண்ணம் இருந்தன.

மேலும் படிக்க : “ஒன்னுமில்லை… நீ கவலைப்படாத” குட்டி சுறாவை காப்பாற்றிய 11 வயது சிறுமி!

அவர் தோள் மீதும் கழுத்து மீதும் குரங்குகள் ஏறிக் கொண்ட போதிலும் கூட அவர் இசைப்பதை நிறுத்தாமல் இசைத்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.  இப்போது வரை இந்த வீடியோவை 88 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். தாய்லாந்தில் வசித்து வரும் அந்த இங்கிலாந்து இசைக்கலைஞர் “குரங்குகளுக்கு தேவையான உணவினை நாம் வழங்க வேண்டும். அப்போது தான் அவைகள் கோபத்துடன் இல்லாமல் சாந்தமாக இருக்கும்” என்று கேட்டுக் கொண்டார்.  இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்டில் தெரிவியுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: