New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/04/cats-11.jpg)
COVID 19 Pandemic 9 minutes blackout diyas and flashlights memes
கூட்டம் கூட வேண்டாம் என்று கூறிய போதிலும் பல இடங்களில் மக்கள் கும்பல் கும்பலாக பட்டாசு வெடித்து கொண்டாடியது வருத்தம் தான் அளிக்கிறது.
COVID 19 Pandemic 9 minutes blackout diyas and flashlights memes
COVID 19 Pandemic 9 minutes blackout diyas and flashlights memes : இந்தியாவில் கொரானா நோய் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவின் அனைத்து தரப்பினரும் இந்த நோய்க்கு எதிராக மிகவும் சீரிய முறையில் போராடி வருகின்றனர். இந்நிலையில் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தார் பிரதமர் மோடி.
மேலும் படிக்க : நீங்க ஊதுன சங்கு சத்தம்… யெப்பா! உலகமே சிரிக்குது!
அதன்படி 5ம் தேதி இரவு 9 மணி அளவில் 9 நிமிடங்களுக்கு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி அல்லது டார்ச்லைட் ஏந்தி கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் ஒற்றுமையை உலகறியச் செய்வோம் என்றும் அறிவித்திருந்தார். ஆனால் நேற்று மக்கள் செய்தது மிகப்பெரிய சம்பவம்.
விளக்குகளை ஏற்றுவதுவதற்கு பதிலாக கும்பல் கும்பலாக தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு வீதி வழியாக நடந்து சென்றனர். மேலும் பலர் வாகனங்களில் ஏறிச் சென்று கோ கோரோனா கோ என கத்திக் கொண்டிருந்தனர். மேலும் படிக்க : உங்கள விளக்கேத்த சொன்னது ஒரு குத்தமாய்யா? மீம்ஸ்களை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!
பலரோ பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடிக் கொண்டிருந்தனர். சாதாரண காலத்திலேயே மீம் கிரியேட்டர்களை கையில் பிடிக்க முடியாது. நேற்று சிறப்பான கண்டெண்ட் கிடைக்கவும் சமூகவலைதளங்கள் முழுவதும் மீம்கள் நிரம்பி வழிய துவங்கியது.
கூட்டம் கூட வேண்டாம் என்று கூறிய போதிலும் பல இடங்களில் மக்கள் கும்பல் கும்பலாக பட்டாசு வெடித்து கொண்டாடியது வருத்தம் தான் அளிக்கிறது. இன்று நம் நாடு இருக்கும் இக்கட்டான சூழலில் அவசியம் உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டிய நேரம் இது என்றும் பலர் தங்களின் ஆதங்கத்தினை பதிவு செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.