"பொங்கலாய் மகிழ்வு பொங்கட்டும்" பச்சைத் தமிழனாகவே மாறிய ஹர்பஜன் - வைரல் வீடியோ

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை என்ற ஔவையின் வாக்கு வாழ்க, பொங்கலோ பொங்கல்… தமிழும், தமிழர்களும் வாழ்க, வளர்க என்று தன்னுடைய ட்விட்டரில் வாழ்த்து செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை என்ற ஔவையின் வாக்கு வாழ்க, பொங்கலோ பொங்கல்… தமிழும், தமிழர்களும் வாழ்க, வளர்க என்று தன்னுடைய ட்விட்டரில் வாழ்த்து செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Cricket player Harbhajan Singh wishes everyone very happy pongal

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றாலும் பெற்றார் ஹர்பஜன் பஞ்சாபியா இல்லை தமிழரா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு மாறியே போய்விட்டார். ஒவ்வொரு முறையும் தமிழர்களுக்கு முக்கியமான திருநாள் வரும் போதும் சரி, பிரச்சனைகள் ஆனாலும் சரி தன்னுடைய அட்மினை வைத்து தமிழில் ட்வீட் செய்து தமிழ் மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் ஹர்பஹன்.

சாலையில் மயங்கி விழுந்த பெண்மணி… ஓடி வந்து உதவிய தமிழிசை

Advertisment

இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடி வரும் இந்த வேளையில் வேட்டி சட்டை சகிதம் வந்து நின்று பொங்கலுக்கு அனைவருக்கும் வாழ்த்துகளை வீடியோ மூலம் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என்று கூறுவதோடு ”பொங்கலாய் மகிழ்வு பொங்கட்டும்… உயிர் கொடுக்கும் உழவே நீ வாழ்க… உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை என்ற ஔவையின் வாக்கு வாழ்க, பொங்கலோ பொங்கல்… தமிழும், தமிழர்களும் வாழ்க, வளர்க என்று தன்னுடைய ட்விட்டரில் வாழ்த்து செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

தேனி மாவட்டத்தில் கொண்டாடப்படும் தம்பிரான் தொழு மாட்டுப் பொங்கல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பட்டையை கிளப்பும் ஏறுதழுவல்… நாட்டு மாடுகள் பவனி வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – வீடியோக்கள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pongal Harbajan Singh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: