New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/09/Keerthi-Pandian-Catching-Snake.jpg)
பாம்பை பிடித்த கீர்த்தி பாண்டியன்
டிராக்டர் ஓட்டுவது, வயலில் இறங்கி நாட்டு நடுவது என விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார் கீர்த்தி.
பாம்பை பிடித்த கீர்த்தி பாண்டியன்
Keerthi Pandian Viral Video: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன். தற்போது இவரும் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியுள்ளார். ’தும்பா’ திரைப்படத்தில் அறிமுகமான கீர்த்தி, தற்போது ஹெலன் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
‘ஜில்லா’ பட குழந்தை நட்சத்திரம்: நீங்க நம்பலைன்னாலும் இதான் உண்மை!
தவிர இந்த பொதுமுடக்க காலத்தில், தங்களது நிலத்தில் விவசாயம் செய்து அசத்தினார். டிராக்டர் ஓட்டுவது, வயலில் இறங்கி நாட்டு நடுவது என விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார் கீர்த்தி. அந்த வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகியது.
நடிப்பில் மட்டுமல்ல சொந்த பிஸினஸ்ஸிலும் வெற்றி தான்!
இந்நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதில், தனது வீட்டுக்குள் புகுந்த பாம்பு ஒன்றை, லாவகமாக பிடித்த கீர்த்தி, ஒரு பக்கெட்டில் போட்டு, அதை வெளியில் எடுத்து செல்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள், கீர்த்தி பாண்டியனின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள். இந்த இளம் நடிகையின் வீர செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.