New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/10/car-youtuber.jpg)
உங்களுக்கு இருக்குற அதே கேள்வி எங்களுக்கும் தோனுது... ஒருவேள அவருக்கு ஏதாவது?
Russian YouTuber sets his $1,60,000 Mercedes on fire, viral video leaves netizens shocked :ரஷ்யாவை சேர்ந்த யுடியூபர் ஒருவர் தன்னுடைய மெர்சடஸ் காரை தீயிட்டு கொளுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மதிப்புப் படி கிட்டத்தட்ட 1 கோடிக்கும் மேல் விலை போகும் அந்த காரை அவர் ஏன் எரித்தார் என்று யுடியூப் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் வேறு கொடுத்துள்ளார்.
தன்னுடைய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் காரை வாங்கிய டீலருடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து லித்வின் என்ற அந்த இளைஞர் தன்னுடைய காரை எரிக்கும் முடிவை எட்டியுள்ளார். பல தடவை லித்வினின் கார் ப்ரேக் டவுன் ஆகியுள்ளது. 5 முறைக்கும் மேலாக அந்த வண்டியை ரிப்பேருக்கு அனுப்பிய பிறகும் சரியாக வண்டி ஓடவில்லை என்ற காரணத்தை காட்டி இந்த முடிவை எட்டியுள்ளார் அவர். என்னுடைய காரை வைத்து நான் என்ன செய்வது, மெர்செடஸுடன் விவாதம் ஆன பிறகு? என் யோசனை தீ வைத்து கொளுத்துவது தான். நான் இதனால் மகிழ்ச்சி அடையவில்லை என்று அவர் வெளியிட்ட வீடியோவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க : ஃபார்முலா 1 பந்தய கார்களுக்கு இணையான “டச்சில்” புகாட்டியின் புதிய கார்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
பப்ளிசிட்டிக்காக செய்யப்பட்டதா இல்லை உண்மையாகவே கோபத்தால் எடுத்த முடிவா என்பது குறித்து இன்னும் தெள்ளிவாகத நிலையில் இந்த வீடியோ அனைவரின் கவனத்தையும் வயிற்றெறிச்சலையும் வாங்கிக் கொண்டது என்று தான் கூற வேண்டும். பல்வேறு சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கும் நிலையில் இதுவரை 10 மில்லியன் நபர்கள் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். உங்களுக்கு இருக்குற அதே கேள்வி எங்களுக்கும் தோனுது... ஒருவேள அவருக்கு ஏதாவது?
மேலும் படிக்க : அட என்ன கோவமா இருந்தாலும் ஜே.சி.பி வச்சா கடைய நொறுக்கிறது?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.