Advertisment

பாம்பு எங்க இருக்குனு கண்டுபிடிங்க! - பலருக்கும் சவால் விடுத்த புகைப்படம்

Viral Video: அப்படி எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் பலரது குவாரண்டைன் நேரங்களையும் த்ரிலிங்கோடு பூர்த்தி செய்து வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil viral video, viral news

tamil viral video, viral news

Tamil Viral News: பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். நமக்கு தொடையே நடுங்கும். இருந்தாலும், இந்த போட்டோகிராபர்ஸ் வேலை இருக்கே, அந்த பாம்பை கூட அனைவருக்கும் பார்த்து மிரளும் படி, பார்த்து பார்த்து பதமாய் எடுப்பார்கள்.

Advertisment

தவித்த தாய் வாத்து: நவீன 'பேகன்'களுக்கு குவியும் பாராட்டு

அப்படி எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் பலரது குவாரண்டைன் நேரங்களையும் த்ரிலிங்கோடு பூர்த்தி செய்து வருகிறது.

publive-image

எத்தனை புலிகள் இங்கு மறைந்திருக்கின்றன? கண்டுபிடிங்க பார்ப்போம்

Snake Catcher Northern Rivers பேஸ்புக் பக்கத்தில் ஓர் அடத்தியான மரங்கள் நிறைந்த புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரு பாம்பு இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ள அவர்கள், அது எங்கிருக்கிறது என்று முடிந்தால் கண்டுபிடியுங்கள் என்று சவால் விட, ஜூம் செய்து பார்த்தும் அகப்படாமல் போக, சூ மந்திர காளி போட்டும் கண்டுபிடிக்க முடியாமல் பதிலை சொல்லுப்பா என்று கேட்டு வருகின்றனர்.

publive-image

பிறகு ஒரு வழியாக, மரங்களோடு இழைந்து கொண்டிருந்த அந்த மலைப்பாம்பு நம் கண்களில் அகப்பட... சத்தம் போடாமல், அந்த பக்கத்தை விட்டு வெளியே வந்தோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment