New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/cats-2.jpg)
தன்னுடைய குட்டிகளை காக்க கரடியும், தன்னுடைய நாய்களை காக்க அந்த பெண்ணும் கிட்டத்தட்ட பாசப் போராட்டம் தான் நடத்தி இருக்கிறார்கள் என்கின்றனர் நெட்டிசன்கள்
Trending viral video of 17-yr-old girl fights off a bear to save her dogs : அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பார்ட்பரி பகுதியில் 17 வயது இளம்பெண் ஒருவர் கரடி ஒன்றுடன் சண்டை போடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோ ஒன்றில் கரடி ஒன்று தன்னுடைய இரண்டு குட்டிகளை பாதுகாப்பாக அழைத்து அந்த இளம் பெண் வீட்டின் சுற்றுச்சுவற்றில் ஏறுகிறது.
மேலும் படிக்க : மயிலின் நடனத்தை ஸ்லோ-மோஷனில் பார்த்தது உண்டா?
இதனைப் பார்த்த அந்த பெண் வீட்டின் வளர்ப்பு நாய்கள் குரைக்க ஆரம்பிக்கவும், குட்டிக்கரடிகள் பாதுகாப்பாக நகர்ந்து செல்கிறது. குட்டிகளை காப்பாற்றும் பொருட்டு நாய்களுடன் கரடி சண்டையிட, நாய்களை காப்பாற்ற நாய்களின் உரிமையாளர் கரடியை காம்பௌண்ட் சுவருக்கு வெளியே தள்ளும் நிலைமை உருவாகிவிட்டது.
மேலும் படிக்க : உலகிலேயே விலை உயர்ந்த மீன் இது தான்… ரூ. 72 லட்சத்திற்கு ஏலம் போன க்ரோக்கர்
இந்த வீடியோவை பார்த்த எல்லாருக்கும் ஒரு வகையில் திகைப்பும் மற்றொரு வகையில் அச்சமும் ஏற்பட்டிருப்பது உண்மை தான். இந்த நிலைமை எப்படி வேண்டுமானாலும் சில நொடிகளில் தடம் மாறியிருக்கலாம். ஆனால் நல்ல வேளையாக கரடிக்கோ, கரடியின் குட்டிகளுக்கோ, நாய்களுக்கோ, குறிப்பாக அந்த பெண்ணுக்கோ எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
மேலும் படிக்க : நிறம் மாறும் பனிப்பூனைகள்; யூராசியன் லின்க்ஸின் வைரல் வீடியோ
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.