Trending viral video of Coronavirus awareness campaign by Bengaluru Police : இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளிவரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பலரும் இந்த அறிவிப்பினை சற்றும் பொருட்படுத்தாமல் சாலைகளில் இங்குமங்கும் வண்டியை எடுத்துக் கொண்டு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். பெரிய பெரிய சந்தைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் காய்கறிகள் விற்கப்பட்டு வருகின்றது.
எவ்வளவு சொல்லியும், எவ்வளவு முயற்சித்தும் மக்களுக்கு இந்த தொற்றுநோய் தீவிர தன்மையை உணர்த்த முடியாமல் காவல்துறையினர் முதல் அனைவரும் திணறி வருகின்றனர். இந்நிலையில் அவசியமற்று சாலைகளில் திரியும் இளைஞர்களுக்கு சரியான பாடம் புகட்ட கர்நாடக அரசு வித்தியாசமான நடைமுறையை கைப்பற்று பின்பற்றி வருகிறது.
ஏற்கனவே சென்னையில் ஒரு போக்குவரத்து காவல் அதிகாரி அனைவர் முன்பும் கைகள் எடுத்து கும்பிட்டு யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் ஒரு காவலர் தலையில் கொரோனா ஹெல்மட்டை மாற்றிக்கொண்டு மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்நிலையில் கர்நாடகாவில் இருக்கும் காவல்துறையினர், ஒருபடி மேலே சென்று, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை விளக்கிக் கூறும் அவர்கள் பயணிகளின் வாகனத்தில் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டு சிறப்பாக நடித்து காட்டினர்.
மேலும் படிக்க : மலை வழியாக எல்லையை அடைந்த தமிழர்கள்… தமிழகத்திற்கு வர 3 நாட்கள் நடந்தே வந்த கொடூரம்!
மேலும் கொரோனாவாக மாறியிருக்கும் காவல்துறையினர் வண்டிகளில் ஏறி அமரும்போது மற்று காவலர்கள் சங்கினை எடுத்து ஊத துவங்குகிறார்கள். ஒருமுறை வீட்டை விட்டு வெளியே வந்தால் நாம் வீடுகளுக்கு கொரோனாவை அழைத்துச் செல்கின்றோம். கொரோனாவை அழைத்து சென்றால் அது மரணத்தில் கொண்டு போய் முடியும் என்பதை விளக்க முயற்சி செய்கின்றனர் காவல்துறையினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.